புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!
பெண்கள் நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அபுதாஹிரை விடுதலை செய்யக்கோரி பெண்கள் நடத்திய தர்ணா போராட்டம்

கோவை சிறைச்சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அபுதாஹிரை விடுதலை செய்யக்கோரி நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சார்பாக சென்னையில் இன்று (12.12.12) மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ. ஃபாத்திமா ஆலிமா தலைமை தாங்கினார்.


கோவை மத்திய சிறையில்15 ஆண்டுகாலமாக சிறைவாசத்தை அனுபவித்து வரும் அபுதாஹிர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக‌  எஸ்.எல்.இ என்னும் அறியவகை நோயால் தாக்கப்பட்டுள்ளார். இதன் கொடூர தன்மை என்னவெனில் இந்த் நோய் இலட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய நோயாகும். இந்த நோய் தாக்கியவரின்  ஒவ்வொரு உள் உறுப்புகளும் செயல் இழக்கச் செய்து மரணத்தை உண்டாக்கும் கொடிய வகை நோயாகும். இதன் பாதிப்பால் சிறையில் போதிய மருத்துவ வசதியின்றி பல சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றார். இவருக்கு போதிய மருத்துவத்திற்காக இதுவரை கடந்த ஆட்சியில் அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவின்படி 90 நாட்கள் சிறப்பு அனுமதி பெற்று பரோலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இத்தனை ஆண்டு காலமாக நோயின் கடுமையை தாக்குப்பிடித்தார்.

இதற்கிடையே சிறை விதி நடைமுறை தொகுதி 2 விதி எண் 632 மற்றும் 633ன் படி மரணப்படுக்கையில் இருக்கும் இந்த நோயாளியை அரசு மற்றும் சிறை நிர்வாகம் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்வதற்கு அனுமதியளிக்கிறது. அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவகுழு நோயின் வீரியத்தை பரிசோதனை செய்து அதனை உறுதி செய்தது. இருந்த போதிலும் அவரை பரோலில் விடுதலை செய்ய தமிழ அரசு மறுத்தது. இதனை தொடர்ந்து அபுதாஹிரின் தந்தை  சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்த பின்பு அவரை பரோலில் விட தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது (W.P.NO 93310 OF 2012). நீதிமன்றத்தின் உத்தரவினை அமுல்படுத்தாமல் இவ்வரசு அவ்வுத்தரவிற்கு மேல் முறையீடு செய்து அவருடைய பரோலை முடக்க முயற்ச்சித்து வருகிறது. ஆனால் உயர் நீதிமன்றம் தமிழக அரசின் இம்மனுவை தள்ளுபடி செய்த பின்பும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய செயல் தமிழக அரசின் முஸ்லிம் விரோத போக்கையே எடுத்துக்காட்டுகிறது.

மரணத்தின் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும்  இச்சிறைவாசியின் மீது அரசிற்கு ஏன் இந்த பாரபட்சம்?

இதனை கண்டித்து நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில  பொதுச்செயலாளர் நஃபீஸா பானு, மாநில செயற்குழு உறுப்பினர் சித்தி ஆலியா, பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைத்தலைவர் முஹம்மது முனீர், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, திராவிட விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், சமூக சமத்துவ படையின் தலைவர் சிவகாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தனிச் செயலாளர் இளஞ்சேகுவாரா, முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் ஏ.கே. முஹமது ஹனீஃபா, என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் மாநில துணைத்தலைவர் நிஜாமுதீன், ஊடகவியளாலர் டி.எஸ்.எஸ். மணி, தேசிய லீக் தலைவர் பஷீர் அஹமது, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்கின் தலைவர் உமர் ஃபாரூக், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகத்தின் பொதுச்செயாளார் தர்வேஸ் ரஷாதி, ஐக்கிய சமாதானப்பேரவையின் சென்னை மாவட்ட தலைவர் ஷாஜஹான் ஃபாஸி உட்பட சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



Ler Mais

NWF சார்பாக வரதட்சணை எதிர்ப்பு கருத்தரங்கம்

விகளத்தூரில் நேஷனல் விமென்ஸ் பிரன்ட் (NWF) சார்பாக வரதட்சணை ஒழிப்பு பிரசார கருத்தரங்கம் 28-09-2012 அன்று மதியம் 02.30 மணிக்கு நடைபெற்றது. நேஷனல் விமென்ஸ் பிரன்ட் (NWF) நெல்லை மாவட்ட செயலாளர் பாத்திமா சிறப்புரையாற்றினார். இதில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.




Ler Mais

ரமழானை வரவேற்ப்போம் - N.W.F நிகழ்ச்சி

நெல்லை மாவட்டம் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பேட்டை மற்றும் சுத்தமல்லி ஆகிய ஊர்களில் பெண்கள் சிறப்பு பயான் நடைபெற்றது. நன்மைகளை கொள்ளையடிக்கக்கூடிய மாதமான ரமழான் மாதத்தில் நாம் நமது வணக்க வழிபாடுகளை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 200ற்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.


 

Ler Mais

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கான போராட்டம் - கோவை




கோவை: நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக 7 ஆண்டுகள் கழித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெற்றது. ஜூன் 24 மாலை 3 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் துவக்க உரை நிகழ்த்தி கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஃபாத்திமா ஆலிமா அவர்களது தலைமையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.


இப்போராட்டத்தில் என்.சி.ஹெச். ஆர்.ஓவின் மாநில தலைவரும் வழக்கறிஞருமான பவானி பா.மோகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.








Ler Mais

முஸ்லிம் சிறைவாசிகளுக்கான போராட்டம் - சென்னை


சென்னை: நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்லாம்யில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவி நஃபீஸா பானு சிறப்புரை நிகழ்த்தினார். ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொண்டு கோரிக்கை கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக மாலை 4 மணிக்கு எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்திலிருந்து துவங்க இருந்த இப்பேரணி காவல்துறையினரின் கிறுபிடியால் அரை மணி நேரம் தாமதமாக துவங்கப்பட்டது. இப்பேரணிக்காக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நிர்வாகிகள் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று இராஜரத்தினம் மைதானத்திலிருந்து காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி வரை பேரணி நடத்த அனுமதி கோரினர். இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் காவல்துறை அதிகாரிகள் கடைசி நிமிடத்தில் இவ்வழியாக பேரணி நடைபெறுவதற்கு அனுமதி வழங்க முடியாது என தடுத்தனர்.




உயர் அதிகாரிகள் ஏற்கனவே வாய்மொழியாக அனுமதி வழங்கிவிட்டார் என எடுத்துக்கூறியும் அப்பகுதி உதவி ஆணையர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காவல்துறையினருக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக நிர்வாகிகள் தாங்கள் கைது செய்யப்பட்டாலும் பராவாயில்லை திட்டமிட்டபடியே பேரணியை நடத்துவோம் என்று உறுதியாக இருந்த பின்னர் காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பா. புகழேந்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.







Ler Mais

முஸ்லிம் சிறைவாசிகளுக்கான ஆர்ப்பாட்டம் - மதுரை




 மதுரை: முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் வீரியத்துடன் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியை முன்னிட்டு 7 ஆண்டுகள் கழிந்த ஆயுள் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்வதுண்டு. ஆனால் இது முஸ்லிம் கைதிகளுக்கு மட்டும் விதிவிலக்காக இருக்கின்றது. சென்ற தி.மு.க ஆட்சியின் போதும், இப்போது ஆ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 1 வருடம் நிறைவடைந்த போதிலும் முஸ்லிம் கைதிகளிடத்தில் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது.

முஸ்லிம் கைதிகளில் பெரும்பாலானோர் விசாரணை கைதிகளாக  இருக்கும்போதே தண்டனை காலமான 7 வருடங்களை பூர்த்தி செய்துவிட்டனர். இருந்த போதிலும் தமிழக அரசு இது தொடர்பாக பொருட்படுத்துவதாகவே தெரியவில்லை. இதனை கருத்தில் கொண்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்து அவர்களது குடும்பத்தில் ஒளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினருமான முஹம்மது யூசுஃப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இப்பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.


Ler Mais

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை மீட்பதற்கான போராட்டம் - நெல்லை

 

கடந்த ஆட்சியில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் அரசு அதிகாரிகளின் ஒருசார்பு தன்மை, உளவுத்துறை அதிகாரிகளின் முஸ்லிம் விரோதப்போக்கு, கருணையில் கூட அரசின் அப்பட்டமான பாரபட்சம் ஆகியவற்றால் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கை தகர்க்கப்பட்டுவிட்டது. மேலும், விசாரணை சிறைவாசிகளாக இருந்தபோது ஜாமீன் கூட மறுக்கப்பட்டு நீண்ட நெடும் சிறைவாசத்தை அப்போதே தண்டனையாக அனுபவித்து விட்டு அவர்கள் தண்டனைக்கைதிகளாக இப்போதும் சிறையில் வாடி வருகின்றனர். 




பல்வேறு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 200க்கு மேற்பட்டவர்களில் ஒருவர் கூட மத ரீதியாக குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்கோ, தண்டனைகளோ சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமன்னிப்பில் சிறைக்கைதிகளை விடுதலை செய்வது என்பது தற்போதைய அ.தி.மு.க. அரசின் கொள்கைக்கு விரோதமானதல்ல என்பதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். அரசின் பொது மன்னிப்பு என்பது முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு மட்டுமல்லாது மற்ற சிறைவாசிகளுக்கும் கிடைத்திட வேண்டும். ஆகவே விடுதலைக்குத் தகுதியுள்ள அனைத்து சமூகங்களை சேர்ந்த ஆயுள் சிறைவாசிகளையும் கருணை அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்திட வேண்டும் எனவும், 

முஸ்லிம் சிறைவாசிகளின் அவலம் நீங்கிட வேண்டுமெனில் அரசு வழங்கிடும் விடுதலை ஒன்றே தீர்வு என்ற நிலையில் 7 ஆண்டுகள் கழிந்த 49 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை வருகின்ற செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கருணை அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்திடுமாறு பாதிக்கப்பட்ட பெண் சமூகத்தின் சார்பாக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) இந்த மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கின்றது. 

சிறை சித்திரவதையை விளக்கும் படம் 

இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் மேலப்பாளையம் V.S.T.பள்ளிவாசலில் இருந்து பேரணியாக தொடங்கி ஆஸாத் வீதி வழியக பஜார் திடலில் நிறைவடைந்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்த பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.கைசர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டதிற்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் N.ஜன்னத் ஆலிமா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நெல்லை மாவட்ட தலைவர் M. மும்தாஜ் ஆலிமா வரவேற்புரையாற்றினார்.

 இந்நிகழ்ச்சியில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் S.பாத்திமா கனி, தூய சவேரியர் கல்லூரியின் உதவி பேராசிரியர் P.சாந்தி ஆகியோர் கோரிக்கையுரையற்றினார். இறுதியாக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நெல்லை மாவட்ட செயலாளர் நஸ்ரத் நன்றியுரையற்றினார். இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள், நீதியாளர்கள், முஸ்லிம் பெண்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் 1000 மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர் 




மாநில செயற்குழு உறுப்பினர் ஜன்னத் அவர்கள் உரையாற்றிய பொழுது 

எழுத்தாளர் சாந்தி அவர்கள் உரையாற்றிய பொழுது  

மாநில செயற்குழு உறுப்பினர் பாத்திமா கனி 
அவர்கள்  உரையாற்றிய பொழுது

NWF  மாவட்ட செயலாளர் நுஸ்ரத் நன்றியுரை ஆற்றுகிறார் 








Ler Mais

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்காக போராட்டம் - NWF

சென்னை: 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் வருகின்ற ஜுன் 24ஆம் தேதியில் நடைபெற இருப்பதாக நேஷன்ல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில தலைவர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்கள் சங்கத்தில் ஃபாத்திமா ஆலிமா பேட்டி அளித்துள்ளார்.




ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயுள் சிறைகைதிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்து வருகிறது. இதே போன்ற நடைமுறை தமிழக அரசாலும் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு  வருடமும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்வது வழக்கம். அந்தவகையில் வருகின்ற செப்டம்பரில் 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறைதண்டனை அனுபவித்து முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்து அவர்களது குடும்பத்தில் ஒளியேற்ற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி வருகின்ற ஜூன் 24ஆம் தேதி மாலை 3 மணியளவில் சென்னை எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்திலிருந்து மாபெரும் பேரணி நடைபெற இருப்பதாக மாநிலத்தலைவி தெரிவித்துள்ளார்.

சென்னை மட்டுமின்றி கோவை, நெல்லை, மதுரை ஆகிய மாநகரங்களிலும் இதே கோரிக்கையை முன்வைத்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருப்பதாக மேலும் தெரிவித்தார்.  மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பத்திரிக்கைகளி வெளிவந்த செய்திகள்







Ler Mais

மைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்

மைசூர்: நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) சார்பாக மைசூர் பேகம் ரஜியா சுல்தான் மேடை (மெஸ்கோ ஐ.டி.ஐ வளாகம்) யில் வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

வரதட்சனை என்பது கொடிய விஷமாகும், இதனால் சமுதாயமும், பல குடும்பங்களும் சீரழிந்துள்ளது. வரதட்சனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட NWF தேசிய தலைவர் ஷாஹிதா தஸ்னீம் கூறும்ப்போது திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஓர் புதிய உறவாகும். அது மணமக்களை மட்டுமல்லாது அவர்களின் குடும்பங்களை இணைக்கிறது.

Anti-Dowry Campaign
துரதிஷ்டவசமா பெரும்பாலான திருமணங்கள் இன்று வியாபாரமாகிக்கொண்டு வருகிறது. மணமகன் என்பவன் அதிகப்படியான பணத்தை கொடுத்து வாங்கப்படுகிறான். என அவர் கூறினார்.
கர்நாடக மாவட்ட தலைவர் ஷாஹிதா அஸ்லம் தலைமை உரையாற்றினார். மீரா நாயர், சமூக ஆர்வளர் நந்தா ஹெலிமேனா, டாக்டர் ரதி ராவ், லுபுனா சிராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Anti-Dowry Campaign

Anti-Dowry Campaign

Anti-Dowry Campaign


Anti-Dowry Campaign

Ler Mais
 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010