புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக இந்தியா முழுவதும் கடைபிடிக்கவுள்ளது. இந்தியாவில் நடந்த சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது காலடித்தடங்களை பதித்து வருகின்றது.


நமது இந்திய நாட்டைஇந்துத்துவ ஃபாசிஸ சக்திகள் இனவாதத்தின் அடிப்படையில் பிரிக்கும் முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட நிலையிலும், ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகள் வளர்ச்சியின் பெயரால் அமல்படுத்தப்பட்ட நிலையிலும், சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளாகியும் முன்னேறாத சமூகங்களாகவே முஸ்லிம்கள், தலித்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என தொடரும் சூழ்நிலையில்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னுடைய பயணத்தை தொடங்கியது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் காஞ்சிபுரம், திருச்சி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் "யூனிட்டி மார்ச்" என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 14.02.2013 அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில துணைத்தலைவர் ஷேக் முஹம்மது அன்சாரி கலந்து கொண்டு நிகழ்ச்சியின் சாரம்சத்தை விளக்கினார்.
Ler Mais

வினோதினி மரணம் - குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

காரைக்காலை சார்ந்த பெண் இன்ஜினியர் வினோதினியை சுரேஷ் என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்தார். தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் கடந்த தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றிருந்த போது அவர் மீது ஆஸிட்டை வீசினார். தந்தையுடன் வந்து கொண்டிருக்கும் போதே இந்த கொடுமைய நடந்தது. இரு கண்களிலும் பார்வையை இழந்து கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர் பிப்ரவரி 12ம் தேதி நேற்றைய தினம் மரணம் அடைந்தார்.

இவரின் மரணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிதுக்கொள்ளும் அதேவேளையில் அப்பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் அப்பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வரும் வேளையில் அதனை தடுப்பதற்கு முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பும் கண்ணியமும் நிறைந்த ஒரு சூழலை அமைத்துக்கொடுப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை வைக்கின்றது.
Ler Mais

அஃப்சல் குருவிற்கு தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் இரங்கல்

 பாராளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அஃப்ஸல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு பாப்புலர்  ஃப்ரண்ட் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்  கொள்கிறது  . தூக்கு தண்டனையை பல்வேறு உலக நாடுகளும் நீக்கி வரும் இவ்வேளையில் இந்தியாவின் இச்செயல் வருத்தம் அளிக்கிறது. மரண தண்டனையை பின்பற்றி வரும் வெகு சில ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

அஃப்ஸல் குருவின் வழக்கில் பல்வேறு சட்ட வல்லுனர்களும் , மனித உரிமை ஆர்வலர்களும் , அறிவு ஜீவிகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர் . காவல்துறை விசாரணை பல்வேறு ஓட்டைகளும் குறைகளும் நிறைந்ததாக இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாதாட ஒரு வலுவான வழக்கறிஞரை கொடுப்பதற்கு அரசாங்கத்தால் இயலவில்லை.

மரண தண்டனையை  உறுதி செய்த உச்சநீதி மன்றம் விசாரணையின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியது. ஆனால் ‘தேசத்தின் மனசாட்சியை’ திருப்திபடுத்த கீழ் நீதிமன்றத்தின் ஆணையை உறுதி செய்தது. இந்திய அரசாங்கம் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திருந்தால் காஷ்மீர்  மக்களுக்கு சமாதானத்திற்கான நல்லதொரு செய்தியாக அது அமைந்திருக்கும்.

உணர்வுகளை கிளறிவிட்டு இந்த தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாசிச சக்திகள் முயற்சி செய்து வந்தனர் . உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பும் தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்தவே கொடுக்கப்பட்டது. இந்துத்துவ சக்திகளின் முன் அரசாங்கம் மண்டியிட்டு விட்டதை தான் இது காட்டுகிறது.

இத்தகைய செயல்பாடுகள் மூலம் இந்துத்துவ ஆதரவு வாக்குகளை பெறுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மதச்சார்பற்ற கொள்கைகள் குறித்த சந்தேகத்தை அரசாங்கத்தின் இச்செயல் ஏற்படுத்துகிறது.
Ler Mais

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க சென்னை மாவட்ட செயற்குழு முடிவு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட செயற்குழு நேற்று சென்னையில் நடைபெற்றது. புதிய மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம். என். மீரான் தலைமை தாங்கினார்.

வருகின்ற பிப்ரவரி 17 அன்று இந்தியா முழுவதும் நடைபெற இருக்கின்ற "பாப்புலர் ஃப்ரண்ட் தினம்" தொடர்பான விவாதங்கள் இச்செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றது. இதில் சென்னை மாநகர் முழுவதும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுவததோடு  சுவர் விளம்பரம், சுவரொட்டி மற்றும் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சிக்காக வருகின்ற 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று பிரச்சார தினமாக கடைபிடிக்கப்பட்டு மாநகர்  முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள்.

இச்செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் முத்து அஹமது, அப்துல்லாஹ், ஜுனைத் அன்சாரி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.
Ler Mais

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்டத்திற்கு புதிய தலைவர் தேர்வு

சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்த‌ ஜே. முஹம்மது நாஜிம் தன்னுடைய சொந்த வேலைப்பளுவின் காரணமாக தன்னை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறும் மேலும் சென்னை மாவட்டத்திற்கு கூடுதலாக செயலாளர் வேண்டும் என்ற கோரிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில நிர்வாகத்தினரிடம் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட மாநில நிர்வாகம் அப்பொருப்பில் இருந்து அவரை விடுவித்துள்ளது.

அதனை தொடர்ந்து சென்னை மாவட்டத்திற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மாநில செயலாளர் முஹம்மது ரசீன் தலைமையில் இன்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை மாவட்டத்தின் புதிய தலைவராக எம். நாகூர் மீரான் மற்றும் செயலாளராக எஸ். முத்து அகமது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் இயக்கத்தலைவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் பற்றியும் அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் மாநில செயலாளர் முஹம்மது ரசீன் சொற்பொழிவாற்றினார். முன்னால் மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் அவர்கள் தன்னுடைய நிர்வாகத்தை திரம்பட நடத்த உதவி புரிந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். இக்கூட்டத்தில் சென்னை மாவட்ட செயற்கு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Ler Mais

இன்று இரவு 7:45க்கு தந்தி டி.வியை காணத்தவறாதீர்கள்!



"விஸ்வரூபம்" பெயருக்கு ஏற்றது போன்று தான் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கமலஹாசன் தெரிந்தோ தெரியாமலோ இப்படத்திற்கு ஏற்றதாகவே பெயரை சூட்டியுள்ளார். திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே டி.டி.ஹெச் தொடர்பாக சர்ச்சைகள், துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் படத்திலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளனவா என்ற சந்தேகம் என படிப்படியாக விஸ்வரூபம் எடுத்தது கமலின் விஸ்வரூபம். படத்தை இஸ்லாமிய தலைவர்களுக்கு போட்டுக்காட்டியது அதனை தொடர்ந்து தடை செய்யக்கோரி மனு அளித்ததை தொடர்ந்து தமிழக அரசு படத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து முறையிட்ட கமல் தரப்பினருக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய மீண்டும் விஸ்வரூபத்திர்கு தடை.

இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருந்ததால் முஸ்லிம்கள் இப்படத்தை எதிர்த்தார்கள். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையோ இது தமிழக அரசுக்கு கமல் தர்பபினருக்கு இடையே உள்ள சிக்கல் என்பது போன்ற நிலை ஏற்பட்டுவருகிறது. நிலை எதுவாக இருக்கட்டும் இனியும் இது போன்ற திரைப்படங்கள் வெளிவரக்கூடாது என்பதே நமது நிலை. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஃபக்ருதீன் தந்தி டி.வி.யில் இன்று இரவு 7:45க்கு திரைப்பட இயக்குனர்களுடன் நேரடியாக இது தொடர்பாக விவாதத்தில் ஈடுபடுகிறார்.

Ler Mais

வி‌ஸ்வரூப‌த்து‌க்கு ‌மீ‌ண்டு‌ம் தடை - ஐகோ‌ர்‌ட் அ‌திரடி

நடிக‌ர் கம‌ல்ஹா‌ச‌ன் நடி‌த்து‌ள்ள ‌வி‌‌ஸ்வரூப‌ம் பட‌த்து‌க்கு த‌‌மிழக அரசு ‌வி‌தி‌த்த தடையை ‌நீ‌க்‌‌கிய செ‌ன்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற த‌னி ‌நீ‌‌திப‌தி உ‌த்தரவு‌க்கு, உய‌ர் ‌நீ‌திம‌ன்ற முத‌ன்மை அம‌ர்வு தடை ‌வி‌தி‌த்து‌ள்ளது.


இ‌ஸ்லா‌மிய‌‌ர்க‌ளி‌ன் எ‌தி‌ர்‌ப்பை‌த் தொட‌ர்‌ந்து ‌வி‌ஸ்வரூப‌ம் ப‌ட‌த்து‌க்கு த‌மிழக அரசு தடை ‌வி‌தி‌த்தது. இ‌ந்த தடையை எ‌தி‌‌ர்‌த்து நடிக‌ர் கம‌ல்ஹாச‌ன், செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு தொட‌ர்‌ந்தா‌ர். இ‌ந்த வழ‌க்கை ‌விசா‌‌ரி‌த்த ‌நீ‌திப‌தி வெ‌ங்க‌ட்ரா‌ம‌ன், ‌வி‌ஸ்வரூப‌ம் பட‌த்து‌க்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த தடையை ‌நீ‌க்‌கினா‌ர். இதை எ‌தி‌ர்‌த்து த‌மிழக அரசு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற முத‌ன்மை அம‌ர்வு மு‌ன்பு மே‌ல்முறை‌யீடு செ‌ய்தது.

இ‌ந்த மே‌ல்முறை‌யீ‌ட்டு மனு உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற த‌ற்கா‌லிக தலைமை ‌நீ‌திப‌தி எ‌‌லி‌ப்பி.த‌ர்மாரா‌வ், அருணா ஜெக‌தீச‌ன் ஆ‌கியோ‌ர் கொ‌ண்டு முத‌ன்மை அம‌ர்வு மு‌ன்பு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, த‌‌மிழக அர‌சி‌ன் தலைமை வழ‌க்க‌றிஞ‌ர் நவ‌நீ‌த‌கிரு‌ஷ்ண‌ன் ஆஜரா‌கி வா‌திடுகை‌யி‌ல், ‌வி‌ஸ்வரூப‌ம் பட‌த்தா‌ல் த‌மிழக‌த்‌‌தி‌ல் ச‌ட்ட‌ம்- ஒழு‌ங்கு ‌பி‌ர‌ச்சனை ஏ‌ற்படு‌ம் எ‌ன்று‌ம் இதனா‌ல் பட‌த்து‌க்கு தடை ‌வி‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

இத‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌‌ரி‌வி‌த்து நடிக‌ர் கம‌ல்ஹாச‌‌ன் தர‌ப்‌பி‌ல் ஆஜரான மூ‌த்த வழ‌க்க‌றிஞ‌ர் ‌பி.எ‌ஸ்.ராம‌ன், த‌மிழக அரசே ச‌ட்ட‌ம்- ஒழு‌ங்கு ‌பிர‌ச்சனையை தூ‌ண்டு‌விடுவதாக கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர். இருதர‌ப்பு வாத‌த்தையு‌ம் கே‌ட்ட ‌நீ‌திப‌திக‌ள், ‌வி‌ஸ்வரூப‌ம் பட‌த்து‌க்கு தடை ‌வி‌தி‌த்ததோடு, பட ‌விவகார‌ம் கு‌றி‌த்து வரு‌ம் 4ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் த‌மிழக அரசு ப‌தி‌ல் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ உ‌த்தர‌வி‌ட்டு வழ‌க்கு ‌விசாரணையை வரு‌ம் 6ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌‌ளிவை‌த்தன‌ர்.

உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தடையா‌ல் ‌வி‌‌‌ஸ்வரூப‌ம் பட‌ம் வெ‌ளியாவ‌தி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌சி‌க்க‌ல் ஏ‌‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனை தொடர்ந்து கமலஹாசன் தான் தமிழ் நாட்டை விட்டே போகப்போவதாகவும், தான் மனதளவில் மிகவும் வேதனைப்படுவதாகவும் பத்திரிக்கையாளர்களிடம் கூறிவருகிறார். சகலகலா வல்லவனாக, உலக நாயகனாக உலா வரும் கமலஹாசனால் இயற்றப்பட்ட இதுபோன்ற நச்சுக்கருத்துள்ள படம் வெளியானால் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் உணர்வுகள் புண்படும் என்பதை மட்டும் அவரால் ஏன் புரிந்து கொள்ள இயலவில்லை? "உன்னைப்போல் ஒருவன்" என்ற படத்திற்கு பின்னர் இது போன்று முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் திரைப்படம் எடுக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை காற்றில் பரக்க விட்டதேன்....?
Ler Mais

பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ், பிஜேபியை கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை  கண்டித்தும், குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் சங்கப்பரிவார அமைப்புகல் தான் என்று உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் கருத்தை ஆதரித்தும், சங்கபரிவார அமைப்புகளை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும்  எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று 30.01.2013 மாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா, தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுஸைன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிலால், திருவள்ளூர் மாவட்ட தலைவர் புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

" இந்நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களுக்கு மூல காரணமாக இருக்கக்கூடிய சங்கபரிவார அமைப்புகள் முதன் முதலாக தேச தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்து தீவிரவாத கணக்கை துவக்கி வைத்தனர். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட தினமான இன்று சங்கப்பரிவார அமைப்புகளின் தீவிரவாத செயல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காந்தியை கொலை செய்த சங்கப்பரிவார அமைப்புகள் இன்று வரை தமது தீவிரவாத செயல்களை  தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தடை செய்யப்பட வேண்டிய இந்த சங்கப்பரிவார அமைப்புகள் தொடர்ந்து தீவிரவாத செயல்களை நிகழ்த்தி வருகின்றன.

நாட்டில் நடந்த முக்கியமான குண்டுவெடிப்புகளுக்கு மூல காரணம் சங்கப்பரிவார அமைப்புகள் என்று உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த சங்கப்பரிவார அமைப்புகள் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய சுசில் குமார் ஷிண்டே அவர்களும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.

சங்கப்பரிவார அமைப்புகளின் சதிகளை கண்டறிந்து உள்துறை அமைச்சகம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய காவி பயங்கரவாதம் எனப்படும் சங்கப்பரிவார அமைப்புகளின் செயல்பாடுகல் தடுத்து நிறுத்தப்படவில்லை. இது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை தருகிறது.

சங்கப்பரிவார அமைப்புகளை கண்காணிக்க வேண்டிய காவல்துறை முஸ்லிம் சமூகத்தை மட்டும் குறிவைத்து சுற்றி சுற்றி வருகின்றனர். உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள காவி பயங்கரவாதம் தொடர்பான அறிக்கை மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதனை மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். யு.ஏ.பி.ஏ சட்டத்தின்படி முஸ்லிம்கள் மீதும் நக்ஸல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் காவல்துறை காவி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?

உளவுத்துறையானது சங்கபரிவார் அமைப்புகளை தீவிரமாக கண்காணித்து  பயங்கரவாத செயல்களிலிருந்து நம் தேசத்தை பாதுகாக்க முன்வர வேண்டும். இந்த கடமையும் பொறுப்பையும் உணர்ந்து மத்திய அரசு செயல்பட வேண்டும். சங்கப்பரிவார் அமைப்புகளின் தீவிரவாத செயல்களை கண்டித்து போராட்டம் நடத்தும் அமைப்புகளை குற்றவாளியாக காவல்துறை சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே இந்த  நாட்டில் உள்ள முஸ்லிம்களும், தலித்களும் ஒடுக்கப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மதச்சார்பற்ற அமைப்புகளும் ஒன்றினைந்து காவி பயங்கரவாதத்திடமிருந்து தேசத்தை மீட்டெடுக்க ஓரணியில் திரள வேண்டும்.

காந்தியை கொலை செய்தபோதே இந்த சங்கப்பரிவார் அமைப்புகள் முழுமையாக தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். கடந்த கால ஆட்சியாளர்கள் செய்ய தயங்கிதால் சங்கப்பரிவார அமைப்புகள் மீண்டும் மீண்டும் சதி செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே மத்திய அரசு உடனடியாக சங்கப்பரிவார அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதாக தெஹ்லான் பாகவி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, தொகுதி, வட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Ler Mais

முஸ்லிம்களின் உணர்வுகளை நடுநிலையோடு சீர்தூக்கிப்பார்க்க வேண்டும்!

கமல்ஹாசனின் "விஸ்வரூபம்" திரைப்படத்திற்கு முஸ்லிம்களின் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், திரைப்படதுறையினரும் சமூக ஆர்வலர்களும் பல கருத்துக்களை வெளியிட்டனர். பல கருத்துக்கள் ஆதரவாகவும், சில கருத்துக்கள் எதிராகவும் வெளியிட்டனர்.

திரைப்படத்துறையில் கம்ல்ஹாசன் அவர்கல் பல்வேறு புதுமைகளையும், முற்போக்கு சிந்தனைகளையும் ஏற்படுத்திவரும் நிலையில், விஸ்வரூபம் போன்ற மத உணர்வுகளை புண்படுத்தும் திரைப்படம் தடைகளையும் பின்னடைவையும் ஏற்படுத்தும் என்பதை தெரிவிக்கின்றோம்.

முஸ்லிம் தலைவர்களோ, இஸ்லாமிய சமுதாயமோ, கமல்ஹாசனை எதிரியாக பார்க்கவில்லை. ஆனால் அவருடைய விஸ்வரூபம் திரைப்படத்தின் கதைக்கரு ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் இல்லை. உலகத் திருமறையாம் திருக்குர்ஆனையும், இஸ்லாமிய வழிபாட்டு முறைகளையும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் மூலம் என்பதாக திரைபப்டத்தில் காட்டப்படுகிறது.

இத்திரைப்படம் முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய ஒரு தவறான சித்திரத்தை - சித்தாந்தத்தை பொது சமூகத்தில் உருவாக்கும். இது போன்ற படங்கள் வருங்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

சமூக தளத்தில் தனி நபர் நஷ்டத்தைப்பற்ரி சிந்திப்பவர்கள், கோடிக்கணக்கான முஸ்லிம்கள் இதுவரை சந்தித்துள்ள இனி சந்திக்கவுள்ள நஷ்டங்களையும் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து அறிக்கை வெளியிடுவது நல்லது. பணத்தை சம்பாதித்துவிடலாம். ஆனால் திரைப்படத்தின் மூலம் மக்கள் உள்ளங்களில் பதியவைத்துள்ள கருத்துக்களை அழித்துவிடமுடியாது.

இத்திரைப்படத்தை அவர் உள் நோக்கத்துடன் எடுத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் புதுமைகளை விரும்பும் அவரை அமெரிக்கா தவறாக பயன்படுத்திக்கொண்டது. உள் நோக்கம் இல்லை என்பதற்காக இதனை நாம் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் விஸ்வரூபம் ஏற்படுத்தும் விளைவுகள் பாரதூரமானவை.

"சிவப்பு சித்தாந்தம் பேசும் தோழர்கள்", அமெரிக்காவை நியாயம் கற்பிக்கும் இத்திரைப்படத்தை ஆதரிப்பது ஏன் என்றூ தெரியவில்லை. கட்சிகளும், திரைப்படத்துறையினரும் சமூக தளத்தின் பொறுப்பை உணர்ந்து மத உணர்வை புரிந்து நடு நிலையோடு பார்க்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.
Ler Mais

பாப்ப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மருத்துவ முகாம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்டம் ஆர்.கே நகர் தொகுதியின் சார்பாக செரியன் நகரில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் முஹம்மது ஷேக் அன்சாரி அவர்கள் துவக்கிவைத்தார். ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் இரத்த வகை கண்டறிதல், கண் சிகிச்சைக்கான ஆலோசனைகள், பல் சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டது. அகர்வால் மருத்துவமனை மற்றும் சிந்தாமணீ பல் மருத்துவமனையோடு  இணைந்து நடைபெற்ற இம்மருத்துவ முகாமின் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.





Ler Mais

சுஷில்குமார் ஷிண்டே மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை

சங் பரிவார் தீவிரவாதம்: சுஷில்குமார் ஷிண்டே மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை..!

இதோ ஆதாரங்கள் - பதில் கூறட்டும் பார்க்கலாம்!

தங்களை சுத்த சுயம் பிரகாசிகளாகக் காட்டிக் கொள்ளும் இந்த வீராதி வீரர்கள், நமது சில கேள்விகளுக்கு விடை கூறட்டும்!

1. மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் எல்லாம் லேபிளை மாற்றிக் கொண்ட சங் பரிவார் அல்லாமல் வேறு யார்?

இந்திய இராணுவத்தில் ஊடுருவி, அங்குள்ள RDX என்ற சக்தி வாய்ந்த வெடி மருந்து, பொருள்களைக் கடத்தி, பயிற்சி தந்து பிறகு சிக்கிக் கொண்டு, சிறைவாசம் அனுபவிப்பதோடு, காவி அணிந்த சந்நியாசி வேடம் தரித்து தாங்கள் செய்த வன்முறைகளை - இஸ்லாமியர்கள் மீது பழி போட்டவர்கள் இவர்களைத் தவிர வேறு யார்?

2. அண்மையில் வெளியான செய்தியில் இவர்களின் முக்கிய புள்ளியான ஒருவர்தான் (உயர்ஜாதி பார்ப்பனர் அவர்) குஜராத் சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ வைத்து கொளுத்தியது (கோத்ரா ரயில் எரிப்பு) அய்தராபாத் குண்டு வெடிப்பு ஆகிய எல்லாவற்றுக்கும் சூத்திரதாரிகளாக இருந்தனர் என்ற செய்தி சென்ற வாரம் வரவேயில்லையா? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 13.1.2013).

புலன் விசாரணை செய்த ஆய்வு நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டு ஏடுகளில் வெளி வந்துள்ளதே!

3.பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளின் பட்டியலில் இவர்கள் அமைப்பினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா - இல்லையா?

உ.பி. முதல்வர் கல்யாண்சிங் என்ன கூறினார்?

4. அந்நாள் உ.பி. முதல் அமைச்சர் கல்யாண் சிங் தந்த ஒரு பேட்டியில், இவர்களை நம்பித்தான் நான் உத்தரவாதம் அளித்தேன்; ஆனால் இவர்கள் இடித்து தரைமட்டமாக்கி என்னை குற்றம் புரிந்தவர்கள் பட்டியலில் இடம் பெற வைத்தனர் என்று மனம் நொந்து கூறவில்லையா? அந்த இடிப்பின் எதிர்வினையாகத் தானே நாட்டில் 3000, 4000 பேர்கள் கொல்லப்பட்டதும், ரத்த ஆறு ஓடியதுமான கோரத் தாண்டவம்! இது நடைபெற்றதற்கு மூல காரணம் யார்? தென்காசியில் சொந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு - இந்து முன்னணியினர் ஒருவரைக் கொன்று, அதை முஸ்லீம்கள்மேல் பழி போட்டு, மதக் கலவரம் ஏற்பட்டு மோதல்களுக்குப்பிறகு, இவர்களே நடத்திய நாடகம் என்ற உண்மை ஒப்புதல் வாக்குமூலம் வரவில்லையா?

காந்தியாரைக் கொன்றவன் யார்?

5. தேசப்பிதா காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு பயிற்சிக்கூடம் ஆர்.எஸ்.எஸ். என்பதும், அவர் சம்பவத்திற்குமுன் விலகியிருந்தார் என்பது புறத்தோற்றம் அல்லவா! அதனை மறுத்த நிலையில், அவரது தம்பி கோபால் கோட்சே - பூனாவில் தனது அண்ணன் நாதுராம் விநாயக் கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தவர் என்பதை ஏன் இவர்கள் மறைக்கிறார்கள் என்று பிரண்ட் லைன் ஆங்கில ஏட்டிற்குப் பேட்டி அளித்த போது சொல்லவில்லையா?

6. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா?

7. டெல்லியில் பச்சைத் தமிழர், அ.இ.காங்கிரஸ் தலைவர் காமராஜரை பட்டப் பகலில் அவர் வீட்டிற்குத் தீ வைத்து உயிருடன் கொளுத்த முயன்றவர்கள் சங் பரிவார் தீவிரவாதிகளும், நிர்வாண சாமியார்களும், ஆன (பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயரில்) சங் பரிவார் தீவிரவாதிகள் அல்லாமல் வேறு யார்?

8. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அன்றைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்து, விவாதித்துக் கொண்டு இருக்கையில் கையை முறுக்கி வன்முறையில், ஈடுபட்டு பிறகு விரட்டப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அல்லவா?

ஆதாரம் இல்லாமலா பேசுகிறார்- உள்துறை அமைச்சர் ஷிண்டே?

உண்மையை ஊடகங்களின் ஓங்காரச் கூச்சல் மூலமாக, மறைத்துவிட முடியாது. திரு. ஷிண்டே அவர்கள் உள்துறை அமைச்சர்; ஆதாரங்கள் இல்லாமலா அவர் பேசுவார்? நடைபெற்ற நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன? ஹிந்துத்துவா பேசுவோர்தானே! வழக்கு நீதிமன்றத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தமாக நடக்கும் நிலையில் இதுபற்றி உள்துறை அமைச்சர் பேசலாமா? என்ற அருள் உபதேசம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.காரரை - உணர்வாளரை ஆசிரியராகக் கொண்டுள்ள தினமணி நாளேடு?

என்னே திடீர் ஞானோதயம்! ஏன் இதே வாதம் 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்திலும், டில்லி தனி நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிற நிலையில் இவர்கள் எவ்வளவு எழுதினார்கள் - பேசினார்கள் - விமர்சித்தார்கள்? பேசு நா இரண்டுடையாய் போற்றி போற்றி என்ற அண்ணாவின் ஆரிய மாயை வரிகள்தான் இவர்களைப்பற்றி நம் நினைக்கு வருகிறது.

தாழ்த்தப்பட்டவர் என்பதாலா?

மாண்புமிகு ஷிண்டே அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை அமைச்சராக இருப்பது என்பது பார்ப்பன உயர் ஜாதி வர்க்கத்திற்கு உறுத்தலாகத் தானே இருக்கும்; அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும்!

ஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது? நடுநிலையாளர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும்!

கி.வீரமணி தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.1.2013

நன்றி: விடுதலை,22-01-2013.
Ler Mais

கேப்டன் தொலைக்காட்சியில் சகோ அஹமது ஃபக்ருதீன்

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஃபக்ருதீன் அவர்கள் கேப்டன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விஸ்வரூபத்திற்கு எதிரான முஸ்லிம்களின் போராட்டங்களைப்பற்றி எடுத்துக்கூறினார்.



Ler Mais
 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010