தாஃவா - இஸ்லாமிய அழைப்புப் பணி
இஸ்லாத்தைப் பிற சமுதாய மக்களுக்கு அறிமுகப்படுத்தும் அழைப்புப் பணியை நமது டிரஸ்டின் வாயிலாக கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக நாம் செய்து வருகிறோம். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை என அனைத்துப் பகுதிகளிலும் நமது அழைப்புப் பணிகள் சிறப்புடன் நடைப்பெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
கடந்த வருடம் மட்டும் 662 கிராமங்களில் நாம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். ( 2010 வருடம்)
அழைப்புப் பணியை சீரிய முறையில் செவ்வனே செய்வதற்காக தஃவா குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தாஃவா குழுக்கள் மூலமாக தாஃவா நடைபெற்று வருகிறது.
தாஃவா சுற்றுப் பயணங்கள்:
அழைப்புப் பணியை ஒவ்வொரு வீட்டு வாசல்களும் கொண்டு செல்லும் வழிமுறைதான் தாஃவா சுற்றுப் பயணிகள். இதன் மூலம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று ஓரிடத்தில் மக்களை ஒன்று கூட்டி அவர்களைப் படைத்த இறைவன் பால் அழைக்கின்றோம். இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிந்துணர்வு இதன் மூலம் களையப்படுகின்றது. கிராமங்கள் தோறும் நாம் செய்யும் தாஃவா சுற்றுப் பயணங்களில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நூல்கள் இலவசமாக
வழங்கப்பட்டு வருகின்றது.
இதுவரை இஸ்லாத்தை அறிமுகம் செய்த கிராமங்கள் - 5912
கடந்த வருடம் நடத்திய தாஃவா சுற்றுப்பயணங்கள் - 7
7 நாட்கள் செய்யும் ஒரு தாஃவா சுற்றுப்பயணத்துக்காண செலவு ரூபாய் 15,000/-
இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கான பயிற்சி வகுப்புகள் ( D.O.C )
இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய விரும்புவோருக்கு அதற்கான வழிமுறைகள் பயிற்சி முகாம்கள் கற்றுத் தரப்படுகின்றது.
இஸ்லாமிய தகவல் மையம் (IIC)
இஸ்லாத்தை அறிய விரும்புவோர் பயனடையும் பொருட்டு இஸ்லாமிய தகவல் மையம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றது. புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்களிடமிருந்து சான்றிதழ் வாங்குதல், அரசு பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்தல் போன்ற சட்ட உதவிகளையும் செய்து வருகின்றோம்.
இஸ்லாத்தை தழுவியவர்களுக்கான திருமண ஏற்பாடு:
புதிதாக இஸ்லாத்தை தழுவும் நமது சகோதர, சகோதரிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்படுகின்றது.
கடந்த வருடம் நாம் நடத்தி வைத்த திருமணங்கள் - 27
புதிதாக இஸ்லாத்தை ஏற்ற கிராமங்களில் பள்ளிவாசல் கட்டுதல் மற்றும் இமாம்களை நியமித்தல்:
அல்லாஹ்வின் மாபெரும் கருணையினாலும் தங்களின் பெரும் பொருளாதார ஒத்துழைப்பாலும் புதிதாக இஸ்லாத்தை தழுவிய கிராமங்களில் பள்ளிவாசல்கள் கட்டும்பணியும் இமாம்கள் நியமித்து பராமரிக்கும் பணியும் நடைபெற்று
வருகின்றது.
கட்டி முடிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் - 3
கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் பள்ளிவாசல் - 1
இதுவரை 6 கிராமங்களில் இமாம்கள் நியமித்து பராமரித்து வருகின்றோம்.