புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!
பொதுக்கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுக்கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கற்பழிப்பை தடுக்க முடியாது!

அன்மையில் தலை நகர் டெல்லியில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு தற்போது இறந்த செய்தி இன்று நட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. மாநில அரசிற்கும், மத்திய அரசிற்கும் பெரும் தலைவலி ஏற்படும் அளவிற்கு போராட்டங்கள் தினம் தினம் தொடர்கின்றன. இக்குற்ற செயலுக்காக சட்டத்திருத்தம்  கொண்டு வரவேண்டும்  என்று தலைவர்களால் பேசப்படுகிறது. இது போன்ற குற்றம் இனி நடைபெறக்கூடாது என்று நீதிமான்களும் பேசிவருகின்றனர். ஆனால் இந்திய அரசால் இக்குற்றத்தை முற்றிலும் அல்ல ஓரளவிற்கு கூட தடுத்துவிடமுடியாது. ஆம் இந்தியாவில் நிலை அந்தளவிற்கு மோசமாக உள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் ரீதியாக பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த தாக்குதலில் பெரும்பாலும் பெண்கள் கற்பழிக்கப்படுகிறாள். இந்த கற்பழிப்பில் ஈடுபடுபவர்கள்: நாட்டை பாதுகாக்கும் இராணுவம், நாட்டு மக்களை பாதுகாக்கும் காவல்துறை, நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிபர்கள், பாதிப்பிற்குள்ளாகும் பெண்ணின் தந்தை மேலும் அதிகாரமற்றவர்களில் சிலர் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. சில நடுநிலையாளர்கள் அரபு நாடுகளைப் போல் இக்குற்றத்தில் ஈடுபடும்  குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. அதிகாரத்தில் இருப்பவர்களே இப்படிப்பட்ட கொடுமைகளை செய்யும் பொழுது எப்படி குற்றவாளிகளை கடுமையாக தண்டிப்பார்கள்? ஒரு கால் கற்பழிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு என்று சிறப்பு படை அமைத்தால் ஆளும் கட்சியினர், எதிர்கட்சியினர் உட்பட பல கிரிமினல்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டியது வரும்.

நம் நாட்டில் நடக்காத ஒரு சமூக கொடுமை நடந்துவிட்டது போல் டெல்லியில் பரபரப்பாக்கப்பட்டு வருகிறது. காரணம் கற்பழிக்கப்பட்டது மருத்துவம் படிக்கும் ஒரு உயர் ஜாதிவகுப்பை சார்ந்த இளம் பெண்.

அனுதினமும் கஷ்மீரில் பெண்கள், இளம் பெண்கள், சிறுமிகள்  என்று கையில் அகப்படும்  பெண்களின் கற்பை சூரையாடுவது என்பது கஷ்மீர் ஆப்பிள் சாப்பிடுவது போல் என்று வர்ணிக்கும் இந்திய இராணுவத்தை கண்டித்து இது போல் போராட்டம் நடத்த அனுமதித்தது உண்டா? குஜராத்தில் காப்பாற்றுங்கள் என்று காவல் துறையினரை பார்த்து கெஞ்சிய நமது சகோதரிகளின் கையை பிடித்து சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளிடம் ஒப்படைத்த காவல்துறையினரை தண்டிப்பது போன்ற செய்திகளை தீர்ப்புகளாக, மின் ஊடகங்கள் தற்போது செய்தியை பரப்புவதுபோல் பரப்பியதுண்டா? அல்லது கற்பழிப்பிற்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று பேசிய தமிழக முதல்வர் மதுரை புறநகரில் காவல்துறையால் காவல் நிலையத்தில் வைத்து கணவனை கட்டிப்போட்டு தலித் பெண்ணை கற்பழித்த காக்கி உடையில் இன்று பணியாற்றி வரும் ஓநாய்களைத் தண்டித்தீர்களா? இல்லை. காரணம் இவர்களெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்கள் மற்றும் சிறுபான்மையினர்.

உண்மையில் இந்திய நாட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றால், பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் காந்தியடிகள் கூறியது போல் உமர் (ரழி) ஆட்சியை இந்தியாவில் கொண்டு வரவேண்டும் என்பதை அமுல்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் அரபுலகை போல் தண்டிக்க வேண்டும்.  பெண்களும் தங்களின் கவர்ச்சிகலை மறைக்க வேண்டும். இது தான் பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.
Ler Mais

மாவீரன் திப்பு சுல்த்தான்: ஒரு வரலாற்று பார்வை.

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. 1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.


1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம். மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது..“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவின் அமைச்சர் பூர்ணய்யா செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.திப்புவின் புலி - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி இவை எல்லாம் இன்றும் ஆங்கில ஆட்சியின் எதிர்ப்பை திப்பு சுல்தான் எப்படி வெளிபடுத்தினார் என்பதற்கு இன்றும் சான்றாக திகழ்கின்றன.

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெள்ளை தளபதி வெல்லெஸ்லி.

படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

உலகில் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.
Ler Mais

முஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை!

வளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அமைப்புச் சார்ந்தவர்களாக  இருந்தாலும் சரியே! அதுவல்லாமல் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் முன்னேறிய நிலையிலும், மற்ற சில சமூகங்களில் பலர் பின் தங்கிய நிலையில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது நாட்டின் இறையான்மைக்கு எதிரானது. எனவே பின் தங்கிய சமூகங்களுக்கு குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் வஞ்சிக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் நிலை உயர வேண்டும் என்றால் இடஒதுக்கீடு அவசியம். அப்படி செய்தால் தான் அவர்களின் சமநிலை உயரும்.

இடஒதுக்கீடு ஒரு வரலாற்று பார்வை!

நமது இந்திய தேசத்தில் சுதந்திரமும், குடியரசு உருவாக்கமும் முஸ்லிம்களை பொருத்த மட்டில் சில வேதனைக்குரிய அம்சங்களை கொண்டுள்ளன. தேசப்ரிவினையின் போது ஏற்பட்ட கலவரங்கள், இடப்பெயர்வுகள் இவையெல்லாம் முஸ்லிம்களை தேசத்தை பிரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் நமது இந்திய தேசத்தில் சுதந்திரமும், குடியரசு உருவாக்கமும் முஸ்லிம்களை பொருத்த மட்டில் சில வேதனைக்குரிய அம்சங்களை கொண்டுள்ளன. தேசப்ரிவினையின் போது ஏற்பட்ட கலவரங்கள், இடப்பெயர்வுகள் இவையெல்லாம் முஸ்லிம்களை தேசத்தை பிரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் பார்க்கப்பட்டு வருகிறது. இதனுடைய விளைவு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பெற்றிருந்த பல உரிமைகளை இழக்க நேரிட்டது. இடஒதுக்கீடு தனி வாக்காளர் தொகுதி, அமைச்சரவை பிரதிநிதித்துவம் ஆகியவை அவர்களுக்கு மறுக்கப்பட்டன.

சுதந்திரத்திற்கு முன் முஸ்லிம்களின் சமூக நிலைகளை ஆராய்ந்த ஆங்கிலேய அரசு அவர்களது சமூக நிலைகளை உயர்த்த இடஒதுக்கீட்டை வழங்கியது.

1929ல் மெட்ராஸ் மாகாணத்தில் மட்டும் முஸ்லிம்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
பின்பு 1934ல் இந்தியா முழுவதும் அனைத்து அரசு பதவிகளிலும் முஸ்லிம்களுக்கு 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.


சுதந்திரத்திற்கு பின் 1947, செப்டம்பரில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 25% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

1950ல் நமது இந்த்ய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது பட்டியல் வகுப்பினர்களுக்கு (தலித்) 15% இடஒதுக்கீடும், பழங்குடியினருக்கு 7.5% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டது. ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்ககும், முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது.

சுதந்திரத்திற்கு பின் முஸ்லிம்களின் பின் தங்கிய நிலைகளை ஆராய இந்திய அரசால் பல கமிஷன்கள் உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட கமிஷன்கள் அனைத்தும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் அரசு சிறப்பு திட்டம் தீட்டி அவர்களை முன்னேற்ற வேண்டும் என்றும் அதற்கு இடஒதுக்கீடு அவசியம் என்றும் பரிந்துரை செய்தது.




Ler Mais

புரோக்கர் வேலை பார்க்கும் "துக்ளக் சோ"

நாடாளுமன்றத்தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில் பா.ஜ.க அழுத்தமாகவும், திரும்பத்திரும்ப சொல்லக்கூடியது என்னவென்றால் தாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கின்றோம் என்பதுதான். இந்தக்கூட்டணி இயற்க்கையானது என்றும் இந்தக் கூட்டணி வெற்றிபெற்றால் துணை பிரதமர் செல்வி ஜெயலலிதா தான் என்றெல்லாம் உசுப்பேத்தி விடுகின்றனர்.



இச்சமயத்தில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் மத்தியில் புரோக்கர் வேலையும் செய்து வரும் துக்ளக் சோ மட்டும் ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் என்று பெரிய ஐஸ் வைத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதா செய்த ஊழல் தொடர்பான வழக்குகளை தற்போது பா.ஜ.க ஆட்சி செய்து கொண்டிருக்கும் கர்நாடக மாநிலத்தில் தான் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டு வருபவர் ஒரு ஆச்சாரியார் தான். இவரை கர்நாடக பாஜக அரசு கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக கடந்த ஆகஸ்ட் மாதம் நியமித்தது.

கடந்த 08.02.2012 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைப்பற்றி ஆங்கில நாளேட்டிற்கும் இவர் அளித்த பேட்டியில் "ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக அரசு என்னை தொடர்ந்து வற்புறுத்தியது, சொத்து குவிப்பு வழக்கின் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் என்ற பதவியே எனக்கு போதும். அந்த வழக்கினை நேரமையாக செய்து முடிப்பேன்" என்று சூளூரைத்துள்ளார்.

அதாவது அரசின் தலைமை வழக்கறிஞர் என்ற பதவியை இலஞ்சமாக கொடுத்து விட்டு அதற்கு பதிலாக சொத்து குவிப்பு வழக்கின் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பதவியை இராஜினாமா செய்யும் படி கர்நாடக பாஜக அரசு இவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. ஆனால் நேர்மையான இந்த ஆச்சாரியார் வழக்கறிஞர் இந்த மனிமகுடம் தேவையில்லை என்று தூக்கி எறிந்துவிட்டார். ஜெயலலிதாவிற்காக பாஜகவிடம் தூதுசென்றவர் யார் என்றால் மிஸ்டர் கிளீன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் துக்ளக் சோ தான் புரோக்கர் வேலை செய்தவர் ஆவார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியை மனதில் வைத்துக்கொண்டு, மனிதர்களின் எதிரிகளான ஃபாசிஸ கும்பலின் பாஜகவோடு கூட்டணி வைத்தால் பெருத்த ஏமாற்றத்தை மக்கள் வழங்குவார்கள். அதற்குண்டான விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.
Ler Mais

அரசு பயங்கரவாதத்தின் கோர முகம்!

imagesCAO89234
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் சிறையில் அடைப்பு!
மாவோயிஸ்ட் இயக்கத்தை சார்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒரு பெண்மணியை வீட்டில் தங்கவைத்தார் எனக்கூறி ராஜஸ்தான் மாநிலத்தில் மனித உரிமை ஆர்வலரும், பி.யு.சி.எல் பொதுச் செயலாளருமான கவிதா ஸ்ரீவஸ்தவா மீது போலீஸ் நடவடிக்கைகள்!

பல்வேறு தீவிரவாத வழக்குகளில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பி.டி.பி அரசியல் கட்சியின் தலைவரும், நோயாளியும், ஊனமுற்றோருமான அப்துல்நாஸர் மஃதனி சிறையில் அடைக்கப்பட்டு மனித உரிமைகள் மறுப்பு! -இந்திய திருநாட்டில் நடந்துக்கொண்டிருக்கும் அரசு பயங்கரவாதத்தின் சில கோரக்காட்சிகள் தாம் இவையெல்லாம்.

இத்தகைய நிகழ்வுகளையெல்லாம் தலைமையேற்று நடத்துவது ஹிந்துத்துவா பாசிஸ்டுகள் ஆளும் மாநில அரசுகளும், அவர்களுக்கு நாங்கள் என்ன சளைத்தவர்களா என கேட்கும் காங்கிரஸ் அரசுமாகும்.

சஞ்சீவ் பட்டை நரேந்திரமோடி வஞ்சம் தீர்ப்பதற்கு காரணம் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் நரேந்திரமோடியின் கொடூர முகத்தை அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததே!

அதேவேளையில் பி.யு.சி.எல் பொதுச் செயலாளர் கவிதா ஸ்ரீவஸ்தவா மீது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு பாய்வதற்கு காரணம் பரத்பூர் கலவரம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் என்ற நிலையில் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்திய போராட்டமாகும். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், சட்டீஸ்கரில் ஹிந்துத்துவா பாசிச அரசுக்கு எதிராகவும் எழும் குரல்களை அடக்கி ஒடுக்கவே இத்தகைய அடாவடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கர்நாடகா மாநிலத்தை ஆளும் பா.ஜ.க பாசிச அரசு பொய் வழக்கு ஒன்றை சுமத்தி அப்துல் நாஸர் மஃதனியை ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்துள்ளது. இது போதாது என மோடியின் தோழி ஜெயா ஆளும் தமிழகத்திலும் மேலும் ஒரு வழக்கை அவர் மீது சுமத்தியுள்ளனர்.

ஹிந்துத்துவா பாசிஸ்டுகள் ஆளும் மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும், பாசிஸ்டுகளுக்கு நெருக்கமானவர்கள் ஆளும் மாநிலங்களிலும் ஒடுக்கப்படும் சிறுபான்மையின, பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவர்களை அடக்கி ஒடுக்க முயல்வதைத்தான் இச்சம்பவங்கள் எடுத்தியம்புகின்றன.

குஜராத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக காந்தீயவாதிகள் கூறும் குற்றச்சாட்டை மறுக்கவியலாது. சஞ்சீவ் பட்டை ஒரு தீவிரவாதியைப் போல நடத்துகிறார்கள் என அவரது மனைவி சுவேதா பட் குற்றம் சாட்டுகிறார்.
கவிதா ஸ்ரீவஸ்தவாவுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சச்சார், தேசிய ஆலோசனை குழு உறுப்பினர் ஹர்ஷ் மந்தர், சமூக சேவகி ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் கண்டித்துள்ளனர்.

மஃதனிக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களையும் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். ஆனால்,இவ்வளவு எதிர்ப்பு குரல்கள் எழுந்த பிறகும் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளும், மதசார்பற்ற வேடம் போடுவோரும் தங்களது அட்டூழியத்தை தொடரத்தான் செய்கின்றார்கள்.

இந்திய சட்டத்தில் காணக்கிடக்கும் சில ஓட்டைகளை பயன்படுத்தி இவர்கள் இத்தகைய அராஜகங்களை புரிந்து வருகின்றனர். ஊழலுக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திய மத்திய தரவர்க்கத்திற்கு இதுப்பற்றியெல்லாம் கவலை இல்லை! அதிகார மமதையில் ஆட்டம் போடும் இவர்களின் கொட்டத்தை அடக்க மக்கள் சக்தி கிளர்ந்தெழ வேண்டும்! இல்லையேல் இந்தியாவை ஜனநாயக நாடு என பெருமை பேசுவது வெற்று தத்துவமாகவே மாறும்!

 
அ.செய்யது அலீ.
 
நன்றி: தூது ஆன்லைன்
Ler Mais

பல விதமான இராமாயணக் கதைகள்...!

சமீபத்தில் அக்டோபர் 11 ஆம் தேதி அன்று டெல்லி பல்கழைக்கழகம் பி.ஏ பட்டாதாரிகளுக்கான பாடப்பிரிவில் இருந்து ஏ.கே. ராமானுஜம் என்பவர் எழுதிய "முன்னூறு விதமான இராமாயண கதைகள்" என்ற கட்டுரையை நீக்க முடிவெடுத்தது. இந்தியக்கலாச்சாரம் என்ற பாடத்தில் இடம்பெற்ற இந்த கட்டுரையில் இந்துக்கள் கடவுளாக வணங்கும் அவதாறப்புருஷணான இராமணுக்கு பல கதைகள் இருப்பதாக கூறுகிறது. பல்கழைகழகத்தின் நான்கு நிர்வாகிகள் ஒன்று கூடி விவாதித்த போது இறுதியாக இளநிலை பட்டாதாரி மாணவர்களால் கடவுளாகக் கருதப்படும் இராமனுக்கு இத்தகைய கதைகள் இருப்பதை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அதனை நீக்கி விடலாம் என்று முடிவெடுத்திருக்கின்றனர்.


 

பாடத்திட்டத்தில் இந்த கட்டுரை சேர்த்ததிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவ அமைப்பான ஏ.பி.வி.பி (அகில பாரதீய வித்யார்த்த பரிஷத்) மாணவர்களைக்கொண்டு கடந்த 2008ஆம் ஆண்டுகளில் போராட்டங்களிலும் வன்முறைகளிலும் ஈடுப்பட்டிருக்கிறது.

வரலாற்று ஆசிரியரான ஏ.கே. ராமானுஜம் எழுதிய "ராமானுஜம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு" (ஆக்ஸ்ஃபோர்டு 1999) என்ற புத்தகத்தில் இருந்து இக்கட்டுரை எடுக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து புனே நகரில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் ஷாஹத் கண்காட்சி அடித்து நொறுக்கப்பட்டது. காரணம் இராமாயணம் பற்றிய விதவிதமான கதைகளை கொண்ட புத்தகங்கள் இடம்பெற்றிருந்ததால் ஆர்.எஸ். எஸ் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள். "ஜதகா" என்ற புத்த மத பதிப்புகளின் இராமனும் சீதையும் சகோதர சகோதரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். இது அவர்களுடைய நம்பிக்கைக்கு அவமரியாதை ஏற்படுத்துகிறது என்று கூறி ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அந்த பதிப்பகத்தையும் அடித்து நொறுக்கியுள்ளார்கள். ராமானுஜம் எழுதிய கட்டுரைகளில் இராமனுக்கு பலவிதாமான கதைகள் இருப்பதாக கூறுகிறார். அவைகளைப்பற்றி சிறிது பார்ப்போம்.!


பல்வேறு வகையான இராமாயணக்கதைகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு புத்த இராமாயணம், ஜெய்ன இராமாயணம், வால்மிகி எழுதிய இராமாயணம் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பவுலா ரிச்மான் என்ற பெண் எழுதிய "பல்வேறு விதமான இராமாயணங்கள்" என்ற புத்தக்கத்திலும் இவற்றைப்பற்றி விரிவாக கூறியுள்ளார். வால்மிகி எழுதிய இராமாயணத்தில் கூட பல்வேறு  விதமான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இந்த அரசியல் வாதிகள் தங்களது அரசியல் செல்வாக்கை உயர்த்திக்கொள்வதற்காக அத்தகைய விளக்கங்களை ஏற்றுக்கொள்வதில்லை. மத நம்பிக்கை என்று வெறுமனே வாய்வார்த்தையில் கூறுவிட்டு அரசியல் செல்வாக்கிற்காகவும், இந்துக்கள் மத்தியில் மத துவேஷத்தை ஏற்படுத்துவதற்காக மட்டுமே இராமன் என்கிற கதாபாத்திரத்தை உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்து மதத்தில் மட்டுமே சகிப்புத்தன்மை இருப்பதாகவும் மற்ற மதங்களில் அதை காண முடியாது என்று வெற்றுப்பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.


இராமாயணத்தை பற்றி கூறும் ஒவ்வொருவரின் விளக்கங்களையும் படித்து ஆராய்ந்து பார்த்தால் இராமாயணம் என்ற கதை எந்தளவிற்கு உண்மை என்பது தெரிந்துவிடும். வால்மிகி எழுதிய இராமாயணமாகட்டும், துலசிதாஸ் எழுதிய இராமாயணமாகட்டும் அல்லது தொலைக்காட்சி சேனல்களில் ராமானந்த் சாகர் தயாரிப்பில் ஒளிப்பரப்பப்படும் இராமாயணம் ஆகட்டும் இப்படி ஒவ்வொன்றும் மற்றொன்றோடு ஒப்பிட்டு பார்க்கும்போது பெருமளவில் வித்யாசப்படுகின்றன. இராமாயணக்கதைகள் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு பெங்காளி, காஷ்மீரி, தாய், சின்ஹாலா, தமிழ், திபத்தியன், இது போக இன்னும் எண்ணற்ற மேற்கத்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் தரும் செய்தி என்னவென்றால் இதில் ஒன்று கூட மற்றொன்றோடு பொருந்தவில்லை.


மற்ற மொழிபெயர்ப்புகளை ஏற்க மறுக்கும் இவர்கள் வால்மிகி எழுதிய இராமாயணத்தை மட்டுமே உண்மை என்று தங்களது அரசியல் இலாபத்திற்காக நம்புகின்றனர். அன்றைய கால ஜாதிமுறையையும், வர்ணாசிரமக்கொள்கையையும் மீண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கும் இவர்கள் வால்மிகி எழுதிய இராமாயணத்தை மட்டும் ஏற்றுக்கொள்வதற்கான முக்கிய காரணமாகும்.


இராமாயணக்கதைகளில் உள்ள வித்தியாசங்களை ஒருவர் படிக்கும்போது சுவாரஸ்யமாகவும் அதே சமயம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது. "தசரத ஜதகா" என்ற புத்த இராமாயணத்தை படிக்கும்போது அதில் இராமனுக்கு சீதா மனைவியாகவும் அதே சமயம் சகோதரியாகவும் இருந்திருக்கிறார் என்று கூறுகிறது. மேலும் இராமனின் தந்தையான தசரதன் அயோத்தியின் மன்னர் இல்லை என்றும் வாரனாசியின் மன்னர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சத்திரிய பாரம்பரியத்தில் தங்களது குலத்தூய்மையை பராமரிப்பதற்காகவும், தூய்மை படுத்துவதற்காகவும் சகோதரனும், சகோதரியும் திருமணம் செய்துகொள்வது பழக்கத்தில் இருந்து வந்ததாகவும் கூறுகிறது இந்த இராமாயணம். மேலும் இராமன் புத்தரை பின்பற்றினார் என்றும் கூறுகிறது.

அதே போன்று ஜெயின மத இராமாயணத்தில் இராமன் ஜெயின மத போதகராக இருந்தார் என்றும், அஹிம்சையை போதித்தார் என்றும் கூறுகிறது. புத்த மத இராமாயணத்திற்கும் ஜெயின மத இராமாயணத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையானது இரு இராமாயணங்களும் இராவணனை யோக்கியவன் என்றும், ஆன்மீக முனிவராக இருந்தார் என்றும், நியாயமாக நடந்து கொண்ட ஒரு அரசர் என்றும், அறிவுள்ள கம்பீரமான அரசர் என்றும் கூறுகிறது.

தெலுங்கு பிராமணர்களின் பிரபல "இராமாயண பாடல்கள்" ஒன்றில் சூர்பனகை  இராமனை பழிவாங்கியதாக கூறுகிறது. தாய் மொழியில் உள்ள இராமாயணத்தில் சீத்தாவினால் அவமானம் இழந்த சூர்ப்பனைக்காக அவளது மகள் இராமனை பழிவாங்குவதாக கூறப்படுகிறது. இதில் ஆச்சரியத்தக்க செய்தி என்னவெனில் ஹனுமனை பற்றிக்கூறும்போது அவர் பிரம்மச்சாரி அல்ல என்றும், பயபக்தி கொண்டவன் அல்ல என்றும் ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் இரண்டு கலந்த ஒரு படைப்பாக இருந்தான் என்றும் கூறுகிறது. அத்தோடு நிற்கவில்லை, இலங்கையில் உள்ள வீடுகளில் திருட்டுத்தனமாக படுக்கை அறையை உற்று நோக்குபவனாக இருந்தான் என்றும் கூறுகிறது. வால்மிகி, கம்பர் மற்றும் தமிழ் இதிகாசங்களில் வருகின்ற இராமாயணத்தை பொறுத்தவரை இன்னொருவரின் மனைவி தூங்கிக்கொண்டிருக்கும்போது கூட அவளை பார்ப்பது ஹனுமனை பொறுத்தவரை பாவச்செயலாகு. ஆனால் தாய் மொழியில் இருக்கின்ற இராமாயணத்தில் கதை வேறு விதமாக உள்ளது. அவ்வாறிருந்தும் ஹனுமன் இன்று வரை தாயை பொறுத்தவரை சிறந்த கதாநாயகனாக கருதப்படுகிறான். ஜெயின் இராமாயணத்தை போன்றே தாய் இராமாயணத்திலும் இராவணனின் வம்சாவழியே குறிப்பிடப்பட்டுள்ளது இராமனின் வம்சாவழியை அல்ல.
இராமாயணம் என்பது உயர் ஜாதியினரான பிராமணர்களுக்கும் கீழ் ஜாதியினர்களான ராக்ஷ்ர்களுக்கும் நடக்கும் யுத்தமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலாதிக்கத்தை உயர்த்தவே இவ்வாறான கதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் வால்மிகி எழுதிய இராமயணத்தையே படித்திருந்தனர். இராமன் தலித்தாக இருந்த சம்புகனை கொன்றதே அம்பேத்கருக்கு இந்து மதத்தின் மீதும் இராமாயணத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. இராமாயணம் பற்றி அம்பேத்கர் கேள்வி எழுப்பும் போது சீதை கற்பமடைந்தபோது அவளுக்கு எதிராக வந்த வதந்திகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற ரீதியில் அவளை அக்னிபரிட்சை செய்ய சொன்னது எந்த வகையில் நியாயம்? என்று கேட்டுள்ளார். இராவனனை ஒழித்து சீதையை மீட்டுக்கொண்டு வந்ததது சீதைக்காக அல்லாமல் தன்னுடைய கவுரவத்திற்காகத்தான் என்று இராமன் கூறுகிறான்.

இராமாயணத்தை பற்றி தந்தை பெரியார் கூறும் போது வட இந்திய ஆரியர்களுக்கும் தென் இந்திய திராவிடர்களுக்கும் இடையே நடந்த போரை இராமாயணம் என்கிற பெயரில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். திராவிடர்களை கீழ் ஜாதியினர் என்றும் ஆரியர்களை உயர் ஜாதியினர் என்று விவரிக்கும் இராமாயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். சுய மரியாதை இயக்கத்தை தொடங்கிய தந்தை பெரியார் தீண்டாமை கொள்கையை விதைக்க நினைக்கும் இராமாயணத்திற்கு எதிராக தமிழகத்தில் கடுமையான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.


மனுஸ்மிதியை எதிர்த்த அம்பேத்கர் ஒரு முறை இராமனின் புகைப்படத்தை தீயிட்டு கொழுத்த முயன்றார். அம்பேத்கரை பொறுத்தவரை இராமன் என்ற கதாபாத்திரம் தலித் மக்களை அடிமைபடுத்த நினைக்கும் உயர் ஜாதி இந்து என்றே எண்ணினார். பெரியார் இராமாயணத்தை பற்றி மேலும் கூறுகையில் இராவணம் ஒரு திராவிடன் என்றும் தனது தங்கை சூர்பனகை இராமனால் அவமானத்திற்கு ஆளாக்கப்பட்டதன் விளைவே இராமனை பலிவாங்குவதற்காக சிதையை கடத்தினான். மற்றபடி இராவணன் நல்லவன் என்றும், சிறந்த ஆட்சியாளனாக விளங்கினான் என்றும் கூறுகிறார்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனோடு தொடர்புகொண்ட அரசியல் வாதிகளின் தலையீட்டால் தான் இராமாயணம் பற்றிய இந்த செய்திகள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இராமன் என்பவன் யார்? எத்துனை ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவன்? அவன் வாழ்ந்ததற்கான வரலாற்றுச்சான்றுகள் எதாவது உள்ளதா? என்று பார்க்கும் போதும், இராமாயணம் பற்றிய வெவ்வேறு கதைகளை பார்க்கும்போதும் இது வெறும் கட்டுக்கதையே என்பது தெளிவாகிறது. வெறும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு  ஒரு சமூகத்திற்கு எதிராக இவர்கள் தொடுத்து வரும் போர் இவர்களுக்கே கேடாக அமையும் என்பதை வெகு சீக்கிரமே உணர்ந்து கொள்வார்கள்.


இராமன் தான் எனது கடவுள், அவர் ஒரு அவதாரப்புருஷன், இராமர் கோயிலை அயோத்தியில் கட்டியே தீருவோம் எனறு ரதயாத்திரை நடத்தி 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமாயிருந்த அத்வானியின் வீட்டு பூஜை அறையில் இராமர் சிலையே கிடையாதாம்! என்பது கூடுதல் தகவல்.


நன்றி : டூசர்கில்ஸ்
தமிழில்: முத்து

.


Ler Mais

உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று


உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று. உடல் கொஞ்சம் வெயிட் அதிகமாகிவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சாப்பாட்டைக்குறை, உடற்பயிற்சி செய் என ஏகப்பட்ட அறிவுரை. நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது.

மேலும், நாம் டி.வி.யில் காணும் சில விளம்பரங்கள் “பதினான்கு நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம்” என்றும், மற்றும் சில விளம்பரங்கள் “தினமும் நான்கு நிமிடங்கள் செய்தாலே அழகான உடல்கட்டு கிடைக்கும்” என்று கூறுகின்றன.

இந்தக் கட்டுரை உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களது குழப்பங்களை அகற்றவும், தவறான கருத்துக்களை நீக்கி, தெளிவு பெற்று, நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தை அடையவும் உதவும் சிறிய முயற்சியாகும்.

கருத்து:1 
 
தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுக்க வேண்டும்.இது ஒரு தவறான கருத்து.நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை.

இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.

கருத்து:2 
வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது. இதுவும் தவறான கருத்து.எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல் மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை.

ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

கருத்து:3 
எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதுவும் ஒரு தவறான கருத்து.வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது.

வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும்.
இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

கருத்து:4 

நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று. நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்) கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.

நாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை.
இதனால் இரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன.

ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும்.

கருத்து:5
ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோரிகளை எரிக்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது.
மிகத் தவறான கருத்து.நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல.
ஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம். தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன.
எனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம்.

கருத்து:6 
தசைகள் விரிவுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.இதுவும் தவறான கருத்து.இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும்.

ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

கருத்து:7

நமது சுவாசமும், இதயத் துடிப்பும், உடற்பயிற்சி செய்து முடித்த 3-5 நிமிடங்களுக்குள் சீராக வேண்டும். சரியான கருத்து.
உடற்பயிற்சி முடிந்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் என்று பொருள்.
அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாகவும், குதூகல உணர்வுடனும் செய்வது அவசியம்.

*கருத்து:8 
ஒரு நாளில் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?
20 நிமிடங்களாவது நாம் ஒரு நாளில் உடற்பயிற்சி செய்வது அவசியம் கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன.
நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது.

குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

வனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பது, நாம் உடற்பயிற்சி ஆரம்பித்த போது நமது ஆரோக்கியம், உடல் தகுதி முதலியவை (Physical Fitnes) எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அமையும்.

சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம். ஆனால் ஒன்று நிச்சயம். எவராக இருப்பினும், நாளை, நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக்யமாக வாழலாம்.
Ler Mais

மதுவில் விழும் தேசம்...

எப்போது மதுப்பழக்கத்துக்குப் பெரும்பாலோர் அடிமையாகிவிட்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பு ஆண்கள் தாங்களாகவே கருத்தடை செய்யாமல் வீட்டில் பெண்களையே கருத்தடை செய்யச் சொல்வார்கள்.இப்போது அதற்குப் பதிலாக தமிழக அரசே (கடந்தகால அரசும், தற்போதைய அரசும்) இலவசமாக ஆண்களுக்கான கருத்தடை (வாசக்டமி) செய்து தருகிறது. எப்படி என ஆழ்ந்து சிந்தித்தால் புரியும்.மதுப்பழக்கம், முன்பு எப்போதாவது அதுவும் ஆண்களில் மிகச் சிலரே அந்தப் பழக்கத்தை வைத்திருந்தனர்.

அதுவும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மட்டுமே. இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.திருப்பூர், அனுப்பர்பாளையம் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் குடித்துவிட்டு வந்ததாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். நிலைமையின் தீவிரம் புரிகிறதா? பெரும்பாலான ஆண்களுக்கு இந்தப் பழக்கம் தொற்றும் அபாயம் உண்டாகிவிட்டது.இதற்குப் பல காரணங்கள் சொன்னாலும், முன்புபோல் மறைமுகமாக ஊரின் ஒதுக்குப்புறங்களில் விற்கப்பட்ட மது, இப்போது வார்டுகள்தோறும் அரசே கடைவிரித்து விற்பனை செய்கிறது. 

ஏதோ பெயரளவுக்குச் சில குறிப்பிட்ட பள்ளி, கோயில்கள் அருகில் கடை கூடாது என்று சட்டம் வேறு.2003-ம் ஆண்டு டாஸ்மாக் மூலம் ரூ.3,469 கோடியாக இருந்த வருமானம், 2010-ல் ரூ.14,750 கோடியாக வளர்ந்துள்ளது என்பதில் இருந்தே குடிப்பழக்கத்தின் வளர்ச்சியை நம்மால் யூகிக்க இயலும். கருத்தடை என்று சொன்னதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், தொடர்ந்து குடிப்பழக்கம் இருக்கும் ஒருவருக்கு ஆண்மைத் தன்மை நிச்சயமாகப் பாதிக்கப்படும்.

அதுபோக தனது உழைப்பின் முக்கியமான பங்களிப்பை இந்தக் குடிப்பழக்கத்துக்குச் செலவிடும் நிலைக்கு அந்த நபர் உள்ளாகிறார்.அதையும் மீறி கருவுறும் பெண்களுக்கு எம்மாதிரியான குழந்தைகள் பிறக்கும் என்பதை நாமே சற்று யூகித்துக்கொள்ள இயலும். நோஞ்சான்களாகவும், பலவீனமானவர்களாகவும், நோயுள்ளவர்களாகவும், எதையும் சாதிக்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.அப்படி ஒரு தலைமுறை தேவைதானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

அதற்குத் திருமணம் செய்யாமலே அல்லது குழந்தை பெறாமலே இருந்துவிடலாம். இதைத் தவிர, எத்தனையோ பிரச்னைகள் குடிப்பழக்கத்தால் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட நேரத்தில் குடிக்க  இயலாவிட்டால் ஏற்படும் மனஇறுக்கம் பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன. பலவிதமான தவறுகளுக்குக் காரணமாகிறது. குடும்பத்தில் பல பிரச்னைகளுக்கும் இந்தக் குடிப்பழக்கம் காரணமாகிறது. பொய், திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சூது என பல தீய வழிகளுக்கும் இது வழி வகுக்கிறது.

முன்பு ஏதாவது விசேஷம் அல்லது ஒரு மகிழ்ச்சியான செய்தி என்றால், அனைவரும் "பார்ட்டி' வைக்கச் சொல்வார்கள். உடனே அருகில் உள்ள டீக்கடையில் ஸ்வீட், காரம், காபி என்று "பார்ட்டி' தந்தாலே பெரிய விருந்தைப் போன்று இருந்தது. அதற்கும் மேல் விருந்து என்றால், ஒரு நல்ல ஹோட்டலுக்குச் சென்று உண்பது என்பதுதான் உயர்ந்தபட்ச விருந்தாக இருந்தது.இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் "பார்ட்டி, பார்ட்டி' என்று உடனே மதுவகைகளைத்தான் நோக்கமாகக் கொண்டு விருந்துகள் நடைபெறுகின்றன. அந்த அளவுக்கு இந்தத் தீயபழக்கம் புழக்கத்துக்கு வந்துவிட்டது.இன்னும் பல விஷயங்களில் இந்தத் தீயபழக்கம் சமுதாயத்தில் புரையோடிப்போய் உள்ளது. 

பொருளாதார நஷ்டம் ஒருபுறம், சமூக அந்தஸ்து இழப்பு மறுபுறம். அடிமை மனப்பான்மை ஒருபுறம் என பலவிதங்களில் பாதிப்பு.இதில் ஒரு முக்கியச் செய்தி என்னவென்றால், எதற்கெடுத்தாலும் வெளிநாட்டினரை மேற்கோள் காட்டுவதுபோல, இந்த விஷயத்திலும் வெளிநாட்டினரைச் சுட்டிக்காட்டி, அவர்களெல்லாம் தினமும் குடிக்கிறார்கள் என்று அவர்களையெல்லாம் குடிகாரர்களாக நினைத்துக் கொள்வது எந்த வகையில் நியாயம்?அந்தந்த நாடுகளின் தட்பவெப்பநிலைக்கேற்ப அங்கே அந்தப் பழக்கத்தை அவர்கள் மேற்கொள்கிறார்கள். அதுவும் அளவோடு என்று சொன்னால் இங்குள்ளவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.

காரணம், இவர்களுக்கு எதையும் அளவோடு செய்வது என்பது இயலாது என்பதால்.எது எப்படியோ, நாம் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாவதால் நமக்குத்தான் பாதிப்பு என்பதை உணர்ந்து சிறிதுசிறிதாக இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுதலே ஒரு சரியான தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: எஸ்.ஏ. முத்துபாரதி (தினமணி)
Ler Mais

இவரை நினைவிருக்கிறதா?

பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியின் படைகள் லிபியாவை ஆக்கிரமித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த காலகட்டத்தில் தனது முதுமையான வயதிலும் கூட லிபிய மக்களின் விடுதலைக்காக இத்தாலிய படையை எதிர்த்து போரிட்டு ஷஹீதான உமர் முஃக்தார் அவர்கள் பிறந்த தினம் செப்டம்பர் 16. 

உமர் முஃக்தார் (1862 - செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.

சிறு வயது வாழ்க்கை


16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.

1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.

இத்தாலி- துருக்கி யுத்தம்

1911- ஒக்டோபர் மாதம் இத்தாலி- துருக்கி யுத்த காலம் அது. அட்மிரல் லுயிஜி பராவெல்லியின் தலைமையில் சென்ற இத்தாலிய கடற்படை அணி லிபிய கரையோர கிராமத்தைக் கைப்பற்றியது. “லிபியர்களே! உடனடியாக சரணடையுங்கள். இல்லையேல் திரிப்போலி நகரைத் துவம்சம் செய்துவிடுவோம்.” என அட்மிரல் பராவெல்லி கூறினான்.
லிபியர்கள் சரணடையவில்லை. மாறாக, தலைநகரைவிட்டு வேறிடங்களுக்கு மறைந்தனர். விளைவு 3 நாட்களாக முசோலினியின் படை திரிப்போலியின் மீது குண்டு மாரி பொழிந்தது. திரிப்போலிடேனியன்ஸ் என்ற பெயரில் ஒரு புது பிரகடனத்தை இத்தாலி வெளியிட்டது.

இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே உக்கிரப் போர் மூண்டது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முஃக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.
உமர் முஃக்தார் அவர்களை இத்தாலிய படைகள் கைது செய்து, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படம்

உமர் முஃக்தார் தொழில் ரீதியாக குரானை போதிக்கும் ஆசிரியராக இருந்தார். ஆனாலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர்தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு இவரே ஆசானாக இருந்து கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். பாலைவனங்களில் போர் புரியும் தந்திரங்களையும் அறிந்தவர். பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். இருப்பினும் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முஃக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு தளர்ந்தது இறுதியில் இத்தாலியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதணைடனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் ஒமர் முக்தார் என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உமர் முஃக்தார் அவர்களின் தியாக வரலாறு அற்புதமானவை. இன்று நமது இந்திய தேசத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் அந்நிய சக்திகளிடம் அடகுவைக்கும் நிலை இருந்து வருகிறது. உமர் முஃதார் அவர்களைப் போன்று இந்தியாவிலும் உலமாக்கள் மன உறுதியுடன் அந்நிய சக்திகளை எதிர்த்து போராடுவதற்கு முன்வர வேண்டும்.

Ler Mais

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஒரு பார்வை!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் இயக்கத்தை பற்றி விமர்சிப்பவரா நீங்கள்? அதனுடைய செயல்பாடுகள் இதுவரை உங்களுக்கு என்னவென்று தெரியவில்லையா? பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் இயக்கத்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் மனதிலே உதிக்கின்றனவா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கு பதில் தரும் என்று நம்புகிறேன்...!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகள்
 

நாமறிந்த வகையில் நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்பு இது ஒரு மதசார்பற்ற நாடு என்று நம் முன்னோர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஃபாசிஸ சங்கப்பரிவாரங்களால் இந்த நாட்டை இந்து நாடாக மாற்றியே தீர வேண்டும் என்ற நோக்கத்தோடு நீண்ட கால திட்டங்களை தீட்டி அதன் விளைவாக நாடு முழுவதும் கலவரங்களை ஏற்படுத்தி முஸ்லிம் சமுதாயத்தின் உயிரும், மானமும் மலிவாக பலியாக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் வி.டி. இராஜ சேகர் போன்ற மாற்று சமுதாய தலைவர்களே ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட அதே வழிமுறைகளைத்தான் இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்த காலச் சூழ்நிலையில், இந்தியாவில் இஸ்லாம் நிலை நிறுத்தப்படவேண்டும்,  இஸ்லாமிய சமுதாயம் மானத்தோடும், கண்ணியத்தோடும், தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற உண்ணத இலட்சியங்களோடு இஸ்லாத்தை முழுமையான வாழ்க்கை நெறியாகக் கொண்டு  கேரள மாநிலத்தில் ஒரு சில சகோதரர்களால் சரியான மாற்று திட்டங்களோடும், அடித்தளத்துடனும் துவங்கப்பட்டதுதான்  இந்த "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" என்று இந்திய மக்களால் அறியப்படும் ஒரு தேசிய இயக்கமாகும்.
ஸ்பெயினில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை விளக்கும் வரைபடம்

இன்று இதன் வளர்ச்சி பல மாநிலங்களை கடந்து தேசிய அளவில் குறிப்பாக வட மாநிலங்களில் பலமாக அடித்தளமிட்டுவருகிறது. இதே லட்சியத்தோடு சமுதாயத்தில் பல்வேறு கிளைகளையும் உருவாக்கி ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபடுத்த வேண்டும் என்ற உண்ணத நோக்கோடு பல துணை பிரிவுகளை நாடு முழுவதும் உருவாக்கி நடத்தி வருகிறது. கொள்கையே இல்லையென்றால் ஒரு அமைப்பால் இவ்வளவு தூரம் வளர்ச்சியை அடைய முடியாது என்பது சிந்திப்பவர்களுக்கு தெளிவாக விளங்கும் என கருதுகிறேன்.

ஓரளவு வளர்ச்சி அடைந்த பிறகு இயக்கத்தின் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவது என்பது எல்லா அமைப்பிற்கும் பொதுவான விஷயம். அதன் அடிப்படையில் தமிழகத்தில் இயக்கம் வளர்ச்சி அடைந்த பிறகு எம்.என்.பி (மனித நீதிப் பாசறை) என்ற பெயர் சூட்டிய பிறகு கொள்கைக்கு மாற்றமில்லாத வகையில் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் இயக்கத்தின் ஆரம்ப கால கட்டத்தில் ஜனநாயகம் கூடாது என்று நிலையில் செயல்பட்டாலுல், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வாழக்கூடிய முஸ்லிம்களின் அவல நிலையை பார்க்கும்போது, இந்தியாவில் எல்லா குடிமக்களுக்கும் சமமான நீதியும், சுதந்திரமும், பாதுகாப்பும் கிடைக்கச்செய்யவேண்டுமென்றால் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்கள் பங்கெடுத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று அறிந்தவுடன் நாம் முன்னர் இருந்த நிலையை  விட்டு முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக எல்லா ரீதியான போராட்டங்களையும் செயல்படுத்த தொடங்கினோம்.

"உங்களுக்கிடையே கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள், அப்படியானால் உங்களுடைய பலம் குன்றிவிடும், நீங்கள் கோழைகளாகிவிடுவீர்கள்" என்று திருமறைக்குர்ஆன் வசனத்திற்கேற்ப சமூகத்தின் ஒற்றுமைக்காக போராடி வரும் இயக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.


சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பல சமூகப்பணிகளை பாரபட்சமின்றி செய்து வருகிறோம். கடந்த 2004ஆம் ஆண்டு தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட‌ கடலூர் மாவட்டம் முதற்கொண்டு பல இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். யூதர்களால் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டும், மேலை நாட்டவர்களால் பொருளாதார தடையின் மூலமாக கடுமையான நெருக்கடிக்கு ஆளான பாலஸ்தீன மக்களுக்காக வீதிதோறும் இறங்கி மக்களிடம் பொருளாதாரத்தை வசூலித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்தோம். அதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்னால் பீஹாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒவ்வொரு மஸ்ஜிதுகள், முக்கிய பஜார்கள் என பல்வேறு இடங்களில் தமிழகம் முழுவதும் வசூலித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். மேலுமா சில ஆண்டுகளுக்கு முன்னால் குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பல்லாயிறக்கணக்கான மக்கள் வீட்டை இழந்து, குடும்பத்தை இழந்து, அநாதைகளாயினர். அவர்களின் துயரை துடைக்க நம்மாலான முயற்சியாக மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் வீடுவீடாக சென்று துணிமணிகளை பெற்று அவர்களுக்காக அனுப்பி வைத்திருக்கிறோம்.

பிஹாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்.

அதே போன்று ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் ஃபித்ரா கடமையுள்ளவர்களிடமிருந்து ஃபித்ரா பணத்தை வசூலித்து ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்யும் பணியை கடந்த பல வருடங்களாக செய்து வருகிறோம். மாவட்டம் ரீதியாக வசூல் செய்த பணத்தின் கணக்கு விபரங்களை ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்திற்கு பிறகு வெளிவரும் "விடியல் வெள்ளி" என்னும் பத்திரிக்கையில் வெளியிட்டு வருகிறோம்.


கோவை சிறைவாசிகளுக்காக தொடர்ந்து நமது இயக்கம் போராடி வருகிறது. ஆர்ப்பாட்டங்கள் வாயிலாகவும், சட்டத்தின் மூலமாகவும்  ஒவ்வொரு வருடமும் தமிழக அரசுக்கு 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுபவர்களுக்கு கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றோம்.

 கோவை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

பாப்புலர் ஃப்ரண்டின் பொருளாதார நிலை:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முழு நேர ஊழியர்களுக்கு வாழ்வாதாரத்திற்காக உதவித்தொகை இயக்கத்தின் உறுப்பினர்கள் தரும் மாத சந்தாவிலிருந்து கொடுக்கப்படுகிறது. மேலும் ரமலான் மாதத்தில் ஜகாத் வசூலித்து அதன் மூலம் சமூகப் பணிகளை செய்து வருகிறது. மேலும் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் மாநாடுகளாக இருந்தாலும் சரி, பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் சரி, மற்ற நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, ஒவ்வொன்றிற்கும் சமூக பணிகளில் அக்கறை உள்ளவர்களிடம் சென்று அவர்களால் இயன்ற பொருளாதார உதவியை செய்யுமாறு கேட்டதின் அடிப்படையில் அவர்கள் வழங்கும் பணத்தைக் கொண்டு இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

 நிர்வாகிகள் தேர்வும் செய்யும் முறை:

பாப்புலர் ஃப்ரண்டின் கிளை நிர்வாகிகள் முதற்கொண்டு தேசிய நிற்வாகிகள் வரை ஜனநாயகத்தின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகிறார்கள். இங்கே தனி மனித ஆதிக்கத்திற்கு இடமில்லை.  இங்கே தன்னாட்சி செய்யும் தனி நபர்கள் கிடையாது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை  தெளிவான ஜனநாயக முறையில் (இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு) புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் முறையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாப்புலர் ஃப்ரண்டில் கட்டுப்படுதலும், செயல்பாடுகளும் தான் முக்கியமே தவிர தனி நபர்களுக்கு முக்கியத்துவமில்லை.

சுதந்திர தின அணிவகுப்பு:


இந்திய நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை, சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதியில்லை என்று சங்கப்பரிவாரங்களும், உளவுத்துறையினரும் கைகோர்த்து செயல்பட்ட காலச் சூழ்நிலையில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் தனது கொடி அணிவகுப்பை நடத்தி "உங்களை அழித்தொழிக்க எங்கள் படை தயாராகிவிட்டது!" என்று அச்சுறுத்திய  நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எடுத்துக்கொண்ட சிறப்பான செயல்திட்டம் தான் முஸ்லிம்களின் சுதந்திர  போராட்ட தியாகங்களை வெளிக்கொண்டு வரும் முகமாகவும், சுதந்திர தினத்தை தடையின்றி நெஞ்சு நிமிர்த்தி கொண்டாடுவோமென்றும், இஸ்லாத்தின் எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க நாங்களும் தயாராகிவிட்டோமெனவும் எழுச்சியுடன் சுதந்திர தின அணிவகுப்பினை நடத்தி வருகிறது.

அதில் ஒரு பகுதிதான் பேண்டு வாத்திய முறையும். பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் தேசியக்கொடிக்கு மதிப்பவர்கள். ஆனால் அதற்கு ஒரு சக்தி இருப்பதாகவோ அல்லது அதை வணங்கவோ செய்கிறார்கள் என்று கூறுவது கடைந்தெடுத்த முட்டாள்த்தனம்.

"எண்ணங்களை பொறுத்தே செயல்கள் அமையும்" என்பது நபிமொழி. அல்லாஹ் உங்கள் உடைகளையோ, உடைமைகளையோ பார்ப்பதில்லை மாறாக உங்களது உள்ளங்களைத்தான் பார்க்கின்றான் என்பது குர்ஆன் கூறும் வார்த்தைகள். பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் ஏக இறைவனைத் தவிர யாரையும், எதையும் வணங்கமாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கின்றார்கள்.

தீவிரவாதத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஒருபோதும் ஆதரிக்காது:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "ஜிஹாத்" என்ற பெயரில் நடக்கும் குண்டுவெடிப்பு போன்ற முட்டாள்த்தனமான செயல்களை ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை, அதனை செய்ததும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து வெறிபிடித்த இயக்கங்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வகுத்துத்தந்திருக்கக்கூடிய வழிமுறைகளை பின்பற்றி சமுதாய இளைஞர்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், அறிவிரீதியாகவும் பலப்படுத்தும் பணிகளைத்தான் செய்து கொண்டிருக்கிறது.



மஹாத்மா காந்தி அவர்கள் இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபாவான ஹஜ்ரத் உமர் (ரழி) அவர்கள் செய்த ஆட்சியை போன்று கொண்டு வரவேண்டும் என்று விரும்பினார். அது போன்ற ஆட்சி முறையை கொண்டு வர முடியாவிட்டாலும் கூட அதற்கான முயற்ச்சிகளைத்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எடுத்து வருகிறது. நன்மையை ஏவி திமையை தடுக்கும் பணியில் அரசியலும் உண்டு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பாக தென் இந்தியாவில் (கேரளா, கர்நாடகா, தமிழ் நாடு) மட்டுமே செயல்பட்டு வந்த பாப்புலர் ஃப்ரண்ட் தற்போது வட மாநிலங்களில் அதிக அளவில் வளர்ந்து வருகிறது (அல்ஹம்துலில்லாஹ்!) அதற்கான ஆரம்பம்தான் பி.ஜே.பி சங்கப்பரிவாரங்களின் கோட்டையாக இருந்த ராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் கடுமையாக போராடினார்கள். இறைவன் அருளால் வெற்றி பெற்றார்கள்.

தோழமை உணர்வு:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எந்த போராட்டங்களாக இருந்தாலும் சரி அவ்வனைத்திலும் சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகளை அழைக்காமல் இருந்ததில்லை. என்ன தான் சமூக இயக்கங்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்த சமூகத்தின் மீது கொண்ட அக்கறையின் பொருட்டு சமூகத்தின் எல்லா இயக்க நிர்வாகிகளையும் நமது நிகழ்ச்சிகளுக்காக அழைத்துள்ளோம். அதே போன்று அவர்கள் அழைத்தும் நமது நிர்வாகிகள் கலந்தும் கொண்டிருக்கிறார்கள்.
தமுமுக‌வைச் சேர்ந்த சகோதரர் ஹாஜா கனி

சகோதரர் லியாகத் அலி (சிறுபான்மை புரட்சி இயக்கம்)

சகோதரர் முனீர் (இந்திய தவ்ஹீத் ஜமாத்)
எஸ்.எம்.ஹிதாயத்துல்லா (தமிழ் இலக்கிய கழகம்) மற்றும் பலர்

கே.எம்.ஷரீஃப் (தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் நாடு)
ஷரீஅத் பாதுகாப்பு பேரவை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் நாடு தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில்


இன்று அல்லாஹ்வினுடைய உதவியைக்  கொண்டு நமது இயக்கம் பல்வேறு பரினாமங்களாக வளர்ந்து அடர்த்தியான வேறுடன் இன்று இந்திய தேசம் முழுவதும் பரவி வருகிறது. "பாப்புலர் ஃப்ரண்ட்" என்று கோஷமிட்டால் "ஜிந்தாபாத் ஜிந்தாபாத்" என்று கூறுவதற்கு எல்லா மாநிலங்களிலும் நமது சகோதரர்கள் உண்டு (குஜராத் உட்பட). சுதந்திரம், நீதி மற்றும் பாதுகாப்பு அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் போராடிவருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் தங்களது செல்வாக்கினை பயன்படுத்தி எப்படியாயினும் பாப்புலர் ஃப்ரண்டை தடை செய்ய வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர். அதனுடைய வெளிப்பாடு தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக இன்று ஊடங்களால் வெளியிடப்படும் அவதூறு செய்திகள்.

"அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்! ஆனால் அல்லாஹ்வோ சூழ்ச்சியாளர்களெக்கெல்லாம் சூழ்ச்சியாளன்" எனவே அல்லாஹ்வுடைய உதவியை கொண்டு லட்சியத்தை நிச்சயமாக ஒரு நாள் அடைந்தே தீருவோம்! இன்ஷா அல்லாஹ்!

எனவே ஊடகங்கள் தரும் செய்தியை அப்படியே நம்பி விடவேண்டாம். அது நல்ல செய்தியாக இருந்தாலும் சரியே! ஏனென்றால் அல்லாஹ் கூறுகிறான்...

முஃமீன்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியை கொண்டு வந்தால், அதை தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள் (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம், பின்னர் நீங்கள் செய்ததைப் பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல் குர்ஆன் 49:6)


யாவற்றை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

ஆக்கம் - முத்து
Ler Mais

யார் இந்த அப்சல் குரு?

04ndgvb01_L-G_sends_128866fயார் இந்த அப்சல் குரு ?    காஷ்மீரில் தீவிரவாதம் வேர் விட்டு வளரத் தொடங்கிய நேரத்தில், இளைஞனாக இருக்கும் துரதிருஷ்டத்தை பெற்றவர்தான் இந்த அப்சல் குரு.   காஷ்மீர் சமுதாயத்தில் நிலவி வந்த அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருந்தார் மக்பூல் பட்.  தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டார் என்று 1984ம் ஆண்டு  மக்பூல் பட் தூக்கிலிடப் படுகிறார்.  ஐக்கிய முஸ்லீம்கள் கூட்டணி என்று ஒன்று அமைக்கப் பட்டு, இஸ்லாமியர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்குகிறது.  
Ler Mais

தினமலர் என்னும் தரம்கெட்ட உலகமகாபொய்யர்கள்

ஏன் திடீரென தினமலர் பற்றி? தினமலரைப் பற்றி மட்டும்தான் எப்போதுமே எழுதலாம்! ஏனெனில் தினம் தினம் ஏதாவது விஷத்தை கக்கும் கேவலத்தை செய்வது தினமலர் மட்டுமே. கட்டுரையின் இறுதியில் வைகோவைப் பற்றிய தினமலரின் சேட்டையைக் குறிப்பிட்டுள்ளேன். அதற்குமுன் கீழே தினமலரின் பொறுக்கித்தனங்களுக்கு வகைக்கு ஒன்றாக உதாரணங்கள் கொடுத்துள்ளேன்.

பல வருடங்களுக்கு முன், வாஜ்பாய் இந்தியப் பிரதமராகவும், முஷாரஃப் பாகிஸ்தான் அதிபராகவும் இருந்த காலகட்டம் அது. அப்போது ஐ.நாவில் பல்வேறு நாடுகள் பங்கேற்ற ஒரு மிக முக்கியமான மாநாட்டைப் பற்றி தினமலர் இப்படி செய்தி வெளியிட்டது, " மாநாட்டில் வாஜ்பாய் முஷாரஃப் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்று. இந்தியா, பாகிஸ்தான் மட்டுமன்றி உலகமே இரு நாடுகளின் சிதைந்து கொண்டிருக்கும் உறவை பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் போது தினமலர் ஏதோ இருநாட்டு பிரதிநிதிகளையும் 'நாய்' போல சித்தரித்து 'உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என செய்தி வெளியிட்டிருந்தது. முதன்முதலில் தினமலர் என்ற செய்தித்தாள், மேஜை துடைக்கக்கூட லாயக்கில்லாத காகிதமாகப் பட்டது அன்றுதான். பத்திரிக்கை என்றால் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு தினமலர் மட்டுமே சரியான உதாரணம்.



மேலே இருக்கும் படத்தில் உள்ள பெண்களைப் பாருங்கள். கல்லூரி மாணவிகளின் உடை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது தினமலர் வெளியிட்ட படம் இது. அரை பக்கத்திற்கு இந்த ஆறு மாணவிகளை candid (தங்களை யாரோ படம் பிடிப்பது, படம் பிடிக்கப்படுபவருக்கு தெரியாது) ஆக படம்பிடித்து வெளியிட்டிருந்தது.  எவ்வளவு பெரிய பொறுக்கித்தனம் இது? இதே விஷயத்தை செல்ஃபோன் வைத்து செய்பவனை தானே 'ஈவ் டீசிங்' எனப் பிடித்து சிறையில் தள்ளுகிறார்கள்? இப்படி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் ஆறு அப்பாவி மாணவிகளின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்து, அவர்களின் படத்திற்கு கீழே "ஆபாசமாக உடையணியும் மாணவிகளை மக்கள் எதிர்க்கவேண்டும்" என்று குறிப்பு வேறு வெளியிட்டிருந்த தினமலரை என்ன செய்வது? அதன் ஆசிரியரை அல்லவா முதலில் பிடித்து உள்ளே தள்ளியிருக்க வேண்டும்? இப்படியொரு தப்பான செய்திக்காக தங்கள் பெண்பிள்ளைகளின் படம் செய்தித்தாளில், அதுவும் முதல் பக்கத்தில் வந்திருப்பதைப் பார்த்த அந்த பெற்றோர் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்? இதுதான் தினமலர் தனக்கு இருப்பதாகக் கூறிக்கொள்ளும் சமூக அக்கறையா?

இது போன்ற ஏராளமான கேவலம் பிடித்த செயல்களை தினமலர் செய்து கொண்டே தான் இருக்கிறது. காரைக்குடியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் சந்திப்பில் ஓய்வு நேரத்தில் நாற்காலியில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த துணைவேந்தர்கள் மூவரை தூங்கும்போது படம் பிடித்து அந்தப் படத்தின் கீழ் தன் பாணியில் நக்கலாக செய்தியும் போட்டிருந்தது தினமலர். 
தூங்கும் போது ஒருவரை படம் எடுக்கலாமா? நம் தனிப்பட்ட நண்பர்களிடம் கூட நாம் செய்யக் கூசும் செயல் அது. அந்தப் படத்தைப் பார்த்த லட்சக்கணக்கான மாணவர்களின் மனதில் எந்த விதமான தாக்கத்தை அது உண்டு பண்ணியிருக்கும்? துணைவேந்தர்களின் குடும்பங்கள் எவ்வளவு வெட்கியிருப்பார்கள்? நூற்றுக்கணக்கான கல்லூரிகளையும் லட்சக்கணக்கான மாணவர்களையும் வழிநடத்தும் துணைவேந்தர்களை தூங்கும் poseஇல் படமெடுத்து நக்கலடித்து பொறுக்கித்தனம் செய்த தினமலருக்கு என்ன சமூக அக்கறை இருக்கிறது?

இது மிகவும் முக்கியமான உதாரணம். என்னை மிகவும் பாதித்த மனம், கொதிக்கச் செய்த இன்னொரு செய்தி இது. அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்டு ஒரு இந்தியப் பேராசிரியர் இறந்த செய்தியை கீழ்க்கண்டவாறு வெளியிடுகிறது தினமலர். "அமெரிக்காவில் இந்தியப் பேராசிரியருக்கு சதக் சதக். துடிதுடித்து இறந்தார்" என்று. எவ்வளவு இரக்கமின்மை! எவ்வளவு வக்கிரம்! ஒரு உயிரிழப்பின் வலியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் லட்சணம் இதுதானா!? மரணத்தில் கூட எவ்வளவு நக்கல்?!! அந்தப் பேராசியர் குடும்பம் எவ்வளவு வருந்தியிருக்கும்? இதுதான் மனிததன்மையை காப்பாற்றுவதாக சூளுரைக்கும் பத்திரிக்கையா?

அரசியல்வாதிகளையும், No parkingயில் வண்டியை நிறுத்தும் பொதுமக்களையும் கண்டிக்கவும், படமெடுத்து போடவும் என்ன தார்மீக உரிமை இருக்கிறது இந்த தினமலருக்கு? 


புவனேஷ்வரி என்ற துணைநடிகை சில நடிகைகளின் பெயரை சொல்லிவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக அந்த நடிகைகளின் படத்தையெல்லாம் பெரிதாகப் போட்டு, அந்த நடிகைகள் விபச்சாரம் செய்தார்கள் என்ற செய்தி நிரூபிக்கப்படும் முன்னரே அச்செய்தியை 'Fact'ஆக சித்தரித்து படத்துடன் செய்தி வெளியிட்ட தினமலர், அதன் முதலாளிகளில் ஒருத்தனான 'அந்துமணி ரமேஷ்' மீது நிருபர் உமா பாலியல் புகார் தெரிவித்தபோது அந்த செய்தியையும் 'Fact' ஆகவெ கருதி வெளியிட வேண்டியதானே? ஆனால் தினமலர் எபப்டி react செய்தது என கீழே பாருங்கள்.

புவனேஷ்வரி சொன்னால் உடனே எல்லா நடிகைகளும் விபச்சாரிகளாம். ஆனால் உமா என்ற நிருபர், அதுவும் தினமலர் நிருபர், அந்துமணி ரமேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்னபின் அவனை மக்கள் முன் நிரபராதி ஆக்க சாம-தான-பேத-தண்ட வழிகளையெல்லாம் உபயோகித்தது தினமலர். பல தொலைக்காட்சிகளில் மிகத் தெளிவாக, நடந்த அசிங்கங்களை புட்டுப்புட்டு வைத்த   அந்தப் பெண் நிருபரை, நாக்கூசாமல் மனநோயாளி என்றெல்லாம் செய்தி வெளியிட்டது தினமலர். உமா என்ற நிருபர் ஏழு வருடம் வேலை பார்த்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவில்லையாம். புகார் அளித்தவுடன் தான் தெரிகிறதாம். ஒருகட்டத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் தினமலருக்கே பைத்தியம் பிடித்துவிட நிலையில் அது வெளியிட்ட படத்துடன் கூடிய செய்தியைக் கீழே பாருங்கள்.


மேலே உள்ள படத்தில் நிருபர் உமா தெளிவாக 'தனக்கு சேர வேண்டிய settlementகளை கொடுங்கள்' எனக் கேட்டு அந்த ராஜினாமா கடிதத்தை எழுதியுள்ளார். யாராவது தான் பணிபுரிந்த அலுவலகத்தில் இருந்து தனக்கு பணம் வரவேண்டியிருக்கும் போது, அதைக் கேட்டு அளிக்கும் ராஜினாமா கடிதத்திலேயே புகாரும் கொடுப்பார்களா? அதுவும் அந்த அலுவலகத்தின் முதலாளியே பொறுக்கித்தனம் செய்யும் போது எப்படி அவரிடமே புகாரும் கொடுக்க முடியும்? மக்கள் எதைச் சொன்னாலும் நம்புவார்கள் என்ற அபார நம்பிக்கையை தினமலர் தனக்குள் வளர்த்துக் கொண்டுவிட்டது. இதற்கு மக்களும் மூல காரணம். இந்த லட்சணத்தில் பா.கே.ப என்று வாரமலரில் பெரிய plucker போல கட்டுரை எழுதுவதும் அல்லாமல் அந்துமணி பதில்கள் என்ற தலைப்பில் ஊருக்கு உபதேசம் செய்யும் நித்யானந்தா வகையறா தான் இந்த அந்துமணி. ஒவ்வொரு வாரமும் இந்த ஆள் எழுதும் கட்டுரையில் உ.பா (உற்சாக பானமாம்.) குடித்ததைப் பற்றியும், தனக்கு அந்தப் பழக்கம் இல்லையென்றும் மறக்காமல் எழுதுவான் இந்த அந்துமணி ரமேஷ் என்ற பாலியல் குற்றவாளி.  

அந்துமணி ரமேஷின் இரு முகங்கள்
நடப்பு விஷயத்திற்கு வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு வைகோ இமயம் தொலைக்காட்சியில் தினமலர் தன்னைக் கேவலப் படுத்தியதைப் பற்றி வருத்தப்பட்டிருந்தார். அதாவது பொடாவில், தினமலரின் மாறாப்பாசத்தை தன்னகத்தே கொண்டே ஜெயலலிதா தன்னை சிறையில் தள்ளிய போது தன்னைப் பற்றிய பயோடேட்டாவை வெளியிட்ட தினமலர், கூடவே, "வைகோவுக்கு மிகவும் பிடித்த உணவு ஆட்டுக்கறி. ஆனால் சிறையில் அது போடப்படுவதால் வைகோவுக்கு மகிழ்ச்சிதான்" என தன் திமிர்த்தனத்தைக் காட்டியிருந்ததாகவும், அதனால் தான் மிகவும் வேதனை உற்றதாகவும் பேசியிருந்தார் வைகோ. 

தொலைக்காட்சியில் தன் மானம் போனதை உணர்ந்த தினமலர் உடனே அடுத்தநாள் கீழ்க்கண்டவாறு செய்தி வெளியிடுகிறது, "வைகோ என்ற நல்லவர் தேர்தலை புறக்கணித்ததால் மக்களுக்கு தான் நஷ்டம்" என்று நல்லவிதமாக நடிக்கிறது. எப்படிப்பட்ட கேவலமான பத்திரிக்கை பாருங்கள்.

வைகோ நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் சொல்ல தினமலர் யார்? மக்கள் தினமலரிடம் கருத்தா கேட்டார்கள்? வைகோவின் செயல்களையும், பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் மட்டும் அப்படியே வெளியிடுவதுதானே உன் வேலை? அதையெல்லாம் படித்து வைகோ மீதான கருத்தை மக்கள் உண்டாக்கிக்கொள்வார்கள். ஆனால் பெரிய Inception படத்தின் கதாநாயகன் போல மக்கள் மூளையில் கருத்துக்களைப் பதியச் செய்கிறது இந்த தினமலர்.

வாசகர் கடிதம் என்ற பெயரில் தானே எழுதி ஒவ்வொரு பெயரில் வெளியிடும் கீழ்த்தரமான செயலையும் தினமலர் பல ஆண்டுகளாக செய்தே வருகிறது! அதற்கு ஆதாரம் கீழே! தினமலரிலும், காலைக்கதிர் என்ற தினமலர் குழுமத்தின் மற்றொரு பத்திரிக்கையிலும் வெவ்வேறு பெயர்களில் வெளிவந்த ஒரே கடிதம்!


பத்திரிக்கை என்றால் செய்தியைச் சொல்வதா? கருத்தைச் சொல்வதா? செய்தித்தாள் எனச் சொல்கிறோமா? கருத்துத்தாள் எனச் சொல்கிறோமா? தினமலர் காலம்காலமாக செய்வது இதைத்தான், அதாவது செய்திகளை தனக்கு வேண்டிய பாணியில் அல்லது தொனியில் போட்டுவிட்டு அதனுடன் சேர்த்து நஞ்சு தடவிய தன் கருத்தையும் மக்கள் மனதில் திணித்துவிடுகிறது. தினமலருக்கு கைவந்த கலை இது.

இது போன்ற சமூகப்பொறுப்புணர்வே இல்லாத பத்திரிக்கைகளை மக்கள் கண்டிப்பாய் இனங்காண வேண்டும். ஒரு பத்திரிக்கையின் பணி என்பது உண்மையான செய்தியை மக்களிடம் அளித்துவிட்டு, அச்செய்தி பற்றிய கருத்தை மக்களே சிந்தித்து உண்டாக்கிகொள்ள வழிவகுப்பதேயன்றி விஷக்கருத்துக்களையும், நஞ்சுப் பரப்புரைகளையும் மக்கள் மனதில் பதிய வைப்பதல்ல. தினமலரை கண்டிப்பாகப் புறக்கணிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. ஊடகப் புல்லுருவிகளை சுத்தப்படுத்தினால் மட்டுமே நாடு சுத்தப்படும்.

Ler Mais

தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்!


இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரினதும் பொழுது போக்கு அம்சமாக எது திகழ்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டால் டி.வி பார்த்தல் என்ற பதில்தான் அவசரமாக கிடைக்கும்.

புத்தகம் வாசித்தல், குர்ஆன் ஓதுதல், பாடப் புத்தகங்களைப் படித்தல், நல்ல கட்டுரைகளை எழுதுதல், படித்துக் கொடுத்தல், தாய், தந்தைக்கு உதவுதல், தெரிந்தவர்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லிக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளை பொழுது போக்காக்க் கொண்டவர்கள் மிகச் சிலர் தான் இருக்கிறார்கள்.

வாழ்வில் முன்னேர வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் ஊசலாடுகிறது. ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்தும் முறைதான் அவர்களுக்குத் தெரியவில்லை. இல்லையில்லை தெரிந்து கொள்ள ஆசைப்படவில்லை.
Ler Mais

வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?. உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!.

சிந்திக்கும் வைக்கும் அருமையான கட்டுரை. சகோதரர் அவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்கட்டும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!. 
Ler Mais

செவிடன் காதில் ஊதிய சங்கு

ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், இந்த ஆட்சியைத் தூக்கி எறியலாம் என்கிற நம்பிக்கையை மக்களாட்சி முறை அளிப்பதால், மக்கள் மனதிற்குள் கொதித்தபடி விலைவாசி ஏற்றத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ler Mais

உணரப் படாத தீமை சினிமா

‘நம் பிள்ளைகளுக்குப் பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா மீசை முளைக்க வைத்து விட்டது. இந்த அழுக்குத் திரை சலவை செய்யப்படுமா? இல்லையெனில்… மக்களைச் சுருள வைக்கும் திரைப்பட சுருளையெல்லாம்
ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்’ சினிமாவை குடித்து, உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்துவின் வைர வரிகள். சினிமா என்ற சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் ஒருவரால் கூட சினிமாவுக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியவிலை.
Ler Mais

வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!

சட்டம் தெரிந்தவன் சண்டைக்காரன் என்பார்கள். ஏனெனில், ஏதோ கொஞ்ச, நஞ்சம் தெரிந்த சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஏதாவதொரு சிக்கலில் மாட்டி விடுவார்கள். ஒரு சிலருக்கு மட்டுமே நேர்ந்த இந்நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இன்று நாட்டையும், மக்களையும் பாடாய்படுத்திக் கொண்டு உள்ளது.
இதற்கான அடிப்படைக் காரணங்கள் தான் என்னென்ன?

Ler Mais

கல்வியில் நகரத்தை மிஞ்சும் கிராமங்கள்


எம் புள்ள டாக்டர் ஆவணும்... என்ஜினீயர் ஆவணும்... என்று எல்லா பெற்றோரும் கனவு காண்கிறார்கள்.

 
பிள்ளைகளின் படிப்புக்காக பலர் நகரங்களுக்கு குடிபெயர்கிறார்கள். நகர்ப்புற பள்ளிகளில் படித்தால்தான் நல்ல மதிப்பெண் வாங்க முடியும். மாணவர்களின் அறிவுத்திறன் வளரும் என்ற தவறான எண்ணம்தான் இதற்கு காரணம்.  
Ler Mais
 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010