புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

தொலை நோக்கு பார்வை கொண்ட வாக்குறுதிகள்: நெல்லை முபாரக்

1 ஏப்ரல், 2011

கடயநல்லூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் முபாரக்
கடையநல்லூர் சட்டமன்ற
வேட்பாளர் முஹம்மது முபாரக் அவர்கள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கடையநல்லூர் தொகுதி மக்களுக்காக அறிவித்துள்ளார்கள்.

வாக்குறுதிகள் யாவுமே தொலைநோக்கு பார்வையுள்ள மக்களின் நலன் ஒன்றையே மையப்படுத்தும் வாக்குறுதிகள் . கடையநல்லூர் தொகுதி மக்களை இவை வெகுவாக கவர்ந்துள்ளது என்பதில் ஆச்சர்யமேதுமில்லை.

மக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேலைவாய்ப்பு, சுதந்திரம், நீதி, பாதுகாப்பு போன்ற உயர்ந்த விழுமியங்களை பேணிக் காக்கும் நோக்கிலேயே இவ்வறிக்கைகள் எளிய நடையில் அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல .

உதாரணமாக கடையநல்லூரை தனி தாலூக்கா வாகவும் , தென்காசியை தனி மாவட்டமாகவும் உருவாக பாடுபடுவது என்ற அவரின் ஒற்றை வாக்குருதியிலேயே கடையநல்லூர் தொகுதி மக்களின் அனைத்து தேவைகளையும் உணர்ந்துள்ள ஒரே வேட்பாளர் இவர்தான் என்கின்ற முடிவுக்கு வந்துவிடலாம் .

தற்போது திருநெல்வேலி மாவட்ட அரசு அலுவலகங்கள் அனைத்துமே மிக தொலைவில் அமைந்துள்ளதால் அடிக்கடி பொதுமக்கள் சென்று வர மிகுந்த சிரமத்திற்குள்ளகின்றனர். மருத்துவமனை யாகட்டும், மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரியாகட்டும் அவை அனைத்துமே மிக தொலைவில் அமைந்துள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு கடையநல்லூர் தொகுதி வாழ் பொதுமக்கள் உள்ளாகியுள்ளனர் என்பதை அனைவரும் அறிவர்.வெகுஜன மக்களின் உணர்வுகளை மதிக்க தெரிந்த வேட்பாளரை கடையநல்லூர் மந்திரி மஜீத் போன்ற ஒருசிலரை தவிர தொகுதி மக்கள் இதுவரை கண்டதில்லை என்பதே உண்மை.

தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவானால் நமது தென்காசி மாவட்டத்தில் தனி மருத்துவக் கல்லூரி முதற்கொண்டு அனைத்து அரசு அலுவலகங்களும் நலத்திட்டங்களும் மக்களுக்கு எட்டும் தூரத்தில் அமைந்துவிடும் என்ற காரணத்தால் இக்கோரிக்கைகள் வெகுஜன மக்களின் நிறைவேற கனவாக இதுவரை இருந்துவந்துள்ளது. இதைப்பற்றி பேசிய முபாரக் அவர்களுக்கு நல்ல வரவேற்பும் செல்வாக்கும் கிடைத்துள்ளது

கடையநல்லூர் ஐ பொறுத்தவரையில் வேலைவாய்ப்பற்ற ஆண் பெண் பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம். வேட்பாளர், இவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கெடுத்து உள்ளாரோ என்னவோ தெரியவில்லை இத்தகைய வேலைவய்பற்ற இளைஞர்களின் கல்வியறிவையும் திறமையையும் நாட்டு மக்களுக்காக சிறப்பான முறையில் முறையாக பயன்படுத்தவேண்டும் என்கின்ற நன்னோக்கில் சுய தொழில் மற்றும் தொழில் முன்னேற்றம் அடைய தொழிற் பூங்காக்கள் தொழிற்பேட்டைகள் அமைய பாடுபடுவேன் என்கின்ற வாக்குறுதியை அளித்துள்ளார்கள் .

தொலைகாட்சி பெட்டி தருவேன் டாஸ்மாக் கடைகளில் வேலை வாய்பை ஏற்படுத்துவேன் என்ற அரசியல் வாதிகளின் வாக்குறுதிகளுக்கு மத்தியில், மக்களை சுயமரியாதையுள்ளவர்களாக நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களை ஈடுபாட்டுடன் பங்கேற்க வைக்க தூண்டுகோலாக அமையவுள்ள இந்த வாக்குறுதிகள் தொகுதி வாக்காளர்களை சிந்திக்க வைத்துள்ளது.

இதே போன்று கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது என்ற வாக்குறுதியும் முக்கியமானது. கடையநல்லூரில் எந்த கிழமைகளில் எப்போது தண்ணீர் வரும் என்று யாருக்குமே தெரியாது. இரவு நடுநிசி நேரத்தில், அதிகாலை நான்கு மணி என தண்ணீர் திறந்து விட எந்த வித வரையறையோ கட்டுப்பாடோ இல்லை . அறிவிக்கப்படாத மின்வெட்டை போலவே அறிப்பில்லாமல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது . இதுபோன்ற மக்கள் பிரச்சினைகளை சரியாக உணர்ந்துள்ள ஒரே வேட்பாளர் முபாரக் அவர்கள் தான் என்று அவர்களின் தேர்தல் அறிக்கையின் மூலம் அறியமுடிகிறது, இதனால் எதிர்கட்சிகள் வட்டாரத்தில் சிறு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சுகாதார சீர்கேட்டை முற்றிலும் ஒழிப்பது என்ற கோரிக்கை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி நீண்டகாலமாக முனிசிபாலிட்டி அளவில் நீண்ட காலமாக போராடி வரும் பிரச்சினை. குப்பைகளை கொட்டி அதிலுள்ள பிளாஸ்டிக் பொருட்களை கூட அப்புறப் படுத்தாமல் எரித்துவிடுவது நகராட்சியின் வழக்கமாக உள்ளது. இதே போன்று பல வீடுகளுக்கு முறையான கழிப்பிட வசதிகள் கடையநல்லூர் நகராட்சி செய்து கொடுக்காததை சுட்டிக்காட்டியும் ரேசன் கடைகளில் அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய மளிகை பொருட்கள் கடத்தப்படுவதையும் நகர தலைவர் நைனா முஹம்மது தலைமையில் கண்டித்து போராடி வந்திருக்கிறது.

மற்றொரு முக்கியமான பிரச்சினை விவசாய நிலங்களை பாதுகாப்பது விவசாயிகளையும் விவசாயத் துறையையும் பாதுகாப்பது என்பது தான். கடையநல்லூர் சுற்றுவட்டாரத்தில் தொழிற்சாலைகள் எதுவுமில்லாத காரணத்தாலும் பெரும்பாலானோர் வெளிநாடுகளை கூலி வேலை செய்ய சென்று பணம் சம்பாதித்து விட்டு ரியல் எஸ்டேட் இல் பணத்தை முதலீடு செய்வர். பணப் புழக்கம் அதிகமான காரணத்தால் வருமானம் தராத அந்த ஒரே நிலத்தையே பலர் அவர்களுக்குள்ளாகவே மாற்றி மாற்றி விற்று மனை புரோக்கர்களுக்கு நிரந்தர வருமானத்தை கொடுத்துவந்திருக்கின்றனர் . இத்தகைய புரோக்கர்களால் போட்டிகள் அதிகமாகி நிலத்தின் விலை செயற்கையாக உயர்ந்து விவசாய நிலங்கள் அனைத்தும் தற்போது வீட்டுமனைகளாக மாறியுள்ள அவலம். இது குறு மதியாளர்களுக்கு பணத்தை ஈட்டிக்கொடுத்தாலும் நாட்டின் மீது அக்கறையுள்ள பரந்த தொலை நோக்கு பார்வையுள்ள நன்மக்களுக்கு வருத்தத்தையே அளித்து வந்திருக்கிறது . மக்களின் இந்த நியாயமான உணர்வுகளையே எஸ் டி பி ஐ வேட்பாளரான முபாரக் அவர்களும் தேர்தல் வாக்குறுதிகளாக பிரதிபலித்து உள்ளார்கள்

இதே போன்று, அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய தடையாக உள்ள இடை தரகர்களையும் தடங்கல்களையும் அப்புறப்படுத்துவது,பொது மருத்துவமனையை நவீனப்படுத்துவது, தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கைகளை எடுப்பது, அரசு இயந்திரங்களில் புரையோடிக்கிடக்கும் லஞ்சம் லாவண்யம் மனித உரிமை மீறல் அதிகார துஷ்பிரயோகம் இவற்றை களைந்து ஜனநாயகம் மலரச்செய்வது, விலைவாசி உயர்வு மின் தட்டுப்பாடு போன்ற நீண்டகால மக்கள் பிரச்சினைகளை தீர்க்க குரல் கொடுப்பது , முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை ஐந்து சதவீதமாக உயர்த்துவது வக்ப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது , இளைஞர்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்குவது உலமா நல வாரியத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது, தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வர பாடுபடுவது, எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாட்டும் அப்பாவி இளைஞர்களின் விடுதலைக்காக குரல் கொடுப்பது போன்ற மக்களின் உண்மையான பிரச்சினைகளை சரியாக கண்டறிந்த வேட்பாளருக்கு ஒட்டுமொத்தமாக வாக்களிக்க கடையநல்லூர் தொகுதிவாள் பொதுமக்கள் ஆர்வமுடன் நாட்களை எண்ணி வருகின்றனர்

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010