புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சாய்பாபா இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா சிறப்பான இடத்தை பிடித்திருக்கும்!

26 ஏப்ரல், 2011

கடந்த 24.04.2011 அன்று காலை 7:30 மணி அளவில் புட்டர்பத்தியில் பல லட்சக்கணக்கான மக்கள் கடவுளாக வண்ங்கி வந்த புட்டர்பத்தி சாய்பாபா தன்னுடைய 85வது வயதில் மரணமடைந்தார். அற்புதங்களை நிகழ்த்துவதும் முன்அறிவிப்புகள் செய்வது கடவுள் என்னும் தன்மையை கொடுத்து விடாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் சாய்பாபா.


கடந்த 2000ஆம் ஆண்டில் தனது மடத்தில் வைத்து நடைபெற்ற ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றில் தான் 96வது வயதில் தான் மரணம் அடைவேன் என்று கூறியிருந்தார் சாய்பாபா. அவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த கடைசி நேரத்டில் கூட அவரது பக்தர்கள் பாபா மீண்டும் ஒரு அதிசியம் நிகழ்த்தி குணமடைந்து தங்களுக்கு அருள் ஆசி வழங்குவார் என்று எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் நம்பியது போன்று பாபா சுகம் அடைந்து திரும்பி வரவில்லை மாறாக கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட நிலையில் தான் அவர்களுக்கு காட்சி அளித்தார். அவரை கடவுளாக நம்பி மூட நம்பிக்கையில் திளைத்திருந்த பல லட்சக்கணக்கான அவருடைய பக்தர்களுக்கு அன்று நன்றாக விளங்கி இருக்கும் அவர் கடவுள் இல்லை என்று.

சத்ய சாய்பாபா ஏழை எளிய மக்களுக்கு எத்தனையோ சேவைகளை செய்திருக்கலாம் ஆனால் அவற்றையெல்லாம் விட இந்தியா நாட்டிற்கு அவரால் ஏற்பட்ட பாதிப்புகள் அதை விட பெரியது. தனது செல்வாக்கின் மூலமாக அவர் ஏற்படுத்திய பாதிப்பு அறிவியல் ரீதியான முன்னேற்றத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஒரு சமயம் இந்தியாவில் அறிவியல ரீதியான செய்பாடுகள் மெச்சத்தக்க வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த வேலையில் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்தும், செயல்பட்டதும்  தான் அவர் செய்த மிகப்பெரிய தவறாகும். இதற்கு உடந்தையாக செயல்பட்டது அவர்களுடைய பக்தர்களான பெரும் பெரும் அரசியல்வாதிகளும், பிரபலங்களும்தான்.

நான் பலமுறை வெளிப்படையாக சாய்பாபா ஒரு பித்தலாட்டக்காரர் என்பதை நிரூபித்துள்ளேன். நான் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ பகுத்தறிவு கொண்ட பல பேர் சாய்பாபாவை பொய்யர் என்றும் பித்தலாட்டக்காரர் என்பதை நிரூபித்துள்ளனர். இருந்த போதிலும் அரசியல்வாதிகளின் செல்வாக்கினால் இதனால் அவரின் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டதுமில்லை அவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுமில்லை. பாலியல் குற்றச்சாட்டுகள், கொலை குற்றச்சாட்டுகள் என இதுவரை எத்தனையோ குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்த போதிலும் இதனால் வரை அது விசாரணை செய்யப்படாமல் நிலுவையிலேயே உள்ளது.

சத்ய சாய்பாபா பல முறை தன்னை கடவுள் என்றும், தாமே அகில உலகத்தையும் படைத்ததாக கூறி சில தந்திரங்களை செய்து பல மக்களை நம்ப வைத்துள்ளார். சாய்பாபா தனது சிறு வயதிலேயே தனது சாதுர்யத்தாலும், தந்திர புத்தியாலும் பல மக்களை கவர்ந்துள்ளார். இந்த செயல்பாட்டினால் ஏழைகள், பாமர மக்கள் என அனைவரையும் வசியம் செய்திருக்கிறார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனது இந்த தந்திரத்தால் பெரும் பிரபலங்களை கவர்ந்துள்ளார். அவர்களில் மந்திரிகள், பிரதம மந்திரிகள், ஜனாதிபதிகள், முதன்மை நீதிபதிகள், சினிமா, விளையாட்டு பிரபலங்களும் என அனைவரையும் வசியம் செய்திருக்கிறார் சாய்பாபா.

சத்திய சாய்பாபா தன்னுடைய இந்த செயல்பாட்டில் மிகப்பெரும் வெற்றியை பெற்றார் என்று தான் சொல்லவேண்டும். காரணம் பல பிபலங்கள் தாமாகவே முன்வந்து இவரின் பக்தர்களாக சேர்ந்தனர். அன்றைய கால கட்டத்தில் அதிக அளவில் அரசியல் தலைவர்கள் இவரின் பக்தர்களாக மாறிக்கொண்டிருந்த சமயத்தில் பலரும் தங்களுடைய காரியம் நிறைவேற தாங்களும் வந்த பக்தர்களாக சேர்ந்தனர். இன்னும் பெரும் பண்க்கார முதலைகள் தங்களுடைய கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு கூட சாய்பாபாவின் பக்தர்களாக மாறினர்.

இவரிடம் பக்தர்களாக வந்து சேருவதற்கு முக்கிய காரணமே பணம் சம்பாதிப்பதற்காகத்தான். அதிலும் அதிலும் வெளிநாடுகளில் இவரின் பக்தர்கள் மூலமாக பல கிளைகளை தொடங்கி அதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்தார்கள். தெலுங்கு மொழியை தவிற வேறு எந்த மொழியும் சாய்பாபாவிற்கு பேசத்தெரியாததும், அதே போன்று தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் ஒரு வெளிநாட்டிற்கே பயணம் செய்திருந்த சாய்பாபாவிற்கு இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளும், பக்தர்களும் உண்டு என்றால் சும்மாவா?

சாய்பாபா பல சமூக சேவைகளை செய்துள்ளார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, ஆனால் அவர் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டது இதை விட பெரியது. மருத்துவமனைகள் அமைப்பது, பள்ளிக்கூடம் கட்டுவது போன்ற செயல்களை இந்தியாவில் மாஃபியா கும்பல்கள் கூட செய்யத்தான் செய்கிறது.

கடந்த 2005 டிசம்பர் மாதம் சாய்பாபாவின் பக்தராக இருந்த அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருந்தேன். இதனால் அவரை அதற்கு எந்த பதிலும் வரவில்லை. சாய்பாபாவிற்கு எதிராக கூறப்பட்ட கிரிமினல் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து அந்த கடித்தத்தை அனுப்பியிருந்தேன். அவர் செய்த சமூக சேவைகள் அவர் செய்த குற்றங்களை மறைப்பதற்குத்தான் என்றால் அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது விசாரணை கூட செய்யாதது இந்திய நாட்டிற்கு மிகப்பெரும் அவமானமாகும். காவி உடை அணிந்திருப்பவர்கள்  சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கக்கூடிய இத்தகைய செயலை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா? என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

சத்திய சாய்பாபா இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரும் அழிவை ஏற்படுத்திவிட்டார். அவருடைய அணுகுமுறைகள் இந்திய அரசியலின் நிலையை மாற்றிவிட்டது. இனி எத்துனை நபர்கள் அவரைப் பின் தொடரப்போகிறார்களோ தெரியவில்லை? ஆக மொத்தத்தில் சாய்பாபா இல்லாமல் இருந்திருந்தால் சர்வதேச நிலையில்  இந்தியா நாடு சிறப்பான இடத்தை பெற்றிருக்கும்.


Sanal Edamaruku
President
Indian Rationalist Association & Rationalist International

தமிழில்: முத்து
நன்றி   :  மில்லிகெஜட்

2 விமர்சனங்கள்:

பெயரில்லா சொன்னது…

very good article

KR.தினேஷ் சொன்னது…

காவி உடை அணிந்த கயவர்களை வெளி உலகிற்கு எடுத்து கட்டும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் , பகுத்தறிவு மென் மேலும் வளரவும் , அதனை ஆதரிக்கவும் செய்யும் உங்களின் தலையாய பணிக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்....

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010