புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஃபோபியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஊடகங்கள்

19 ஆகஸ்ட், 2011


இந்தியாவில் தற்போது சில மீடியாக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு பிடித்த இலக்காக மாறியுள்ளது. சமீப காலமாக தொலைக்காட்சி சேனல்களிலும்,  நாளிதழ்களிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய தவறான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் மீதான் மீடியாக்களின் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும்தான் என்று இல்லாமல் எல்லா மாநிலங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் இருக்கின்ற பெரும்பாலான மொழிகள் வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களில் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் இயக்க உறுப்பினர்கள் அறவே இல்லாத மாநிலங்களிலும் இத்தகைய மீடியாக்களின் தாக்குதல்கள் இருந்து வருகிறது.


தற்போது இயங்கி வரும் மீடியாக்கள் வெளியிடும் அறிக்கைகள் எப்பொதும் வேடிக்கையாகவும் அதேசமயம் அந்த ஊடகங்களின் நம்பகத்தன்மையை இரு முறை யோசிக்க வேண்டிய நிலையிலேயே இருக்கின்றன. ஒரு அறிக்கையோ அல்லது செய்தியையோ வெளியிடும்போது அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை இத்தகைய மீடியாக்கள் சோதிப்பதில்லை. அப்படியே ஒரு தவறான செய்தியை வெளியிட்டுவிட்டாலும் பின்னர் உண்மை நிலை அறிந்தவுடன் தான் வெளியிட்ட செய்தி தவறு என்பதை மீண்டு பிரசுரிக்க வேண்டும் இதை பெரும்பாலான மீடியாக்கள் செய்வதில்லை. ஊடகங்களின் நெறிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதில்லை. கடந்த சில மாதங்களாக இந்த ஊடகங்களை பார்க்கும்போது அவர்கள் வெளியிட்ட அபாண்டமான, அப்பட்டமான பொய் குற்றச்சாட்டுகளை நம்மால் சுட்டிக்காட்ட இயலும்.

சமீபத்தில் வெளியாகிய சில அறிக்கைகளை படிக்கும்போது இது போன்ற ஊடக தாக்குதல்கள் தற்செயலாய் ஏற்பட்டது அல்ல என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக‌ சதி வலை பின்னப்படுவதை உணரலாம்.
எல்லா ஊடகங்களும் இப்படித்தான் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது என்றாலும் ஊடகங்களில் சில பிரிவுகள் இருக்கின்றது, அவை சங்கப்பரிவார சித்தாந்தத்தை நோக்கி சரிந்திருக்கும் ஊடகங்களாக இருக்கின்றன.

இத்தகைய மீடியாக்கள் முஸ்லிம்கள் மீதும், இந்திய முஸ்லிம்களின் வலிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் போராடும் இயக்கங்கள் மீதும் காழ்புணர்ச்சியோடு செயல்படுகின்றனர். முஸ்லிம் சமூகத்தின் அப்பாவி இளைஞர்கள் எவ்வாரெல்லாம் திவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு விசாரணை உட்படுத்தப்பட்டதையும், பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதையும் நாம் அறிவோம். இதற்கு ஒரு நல்ல உதாரணம் சில வருடங்களுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட பெங்களூரைச்சேர்ந்த டாக்டர் ஹனீஃப். தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட டாக்டர் ஹனீஃபை அப்பாவி என ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்ட போதிலும் இந்திய பத்திரிக்கைகள் தொடர்ந்து ஹனீஃபை தீவிரவாதியாகவே சித்தரித்து செய்திகள் வெளியிட்டுக்கொண்டிருந்தது.






இந்த மீடியாக்களின் இந்த விஷமப்பிரச்சாரத்தால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் இன்று தீவிரவாத கண்ணோட்டத்துடனே பார்க்கப்படுகிறார்கள். படித்த முஸ்லிம் இளைஞர்கள் தான் தீவிரவாத இயக்கங்களில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனரா? என்று கருத்து கணிப்புகள் நாளிதழ்களில் கேட்கும் அளவிற்கு இந்த பிரச்சாரம் அமைந்துவிட்டது. புதுடெல்லியில் நடைபெற்ற பாட்லா ஹவுஸ் போலி எண்கவுண்டர் விவகாரத்திலும் அப்பாவி இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை இந்த மீடியாக்கள் நியாயப்படுத்தின.  இத்தகைய செய்திகளிலிருந்து இந்தியாவில் செயல்படும் மீடியாக்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லிம் இயக்கங்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவது ஊர்ஜிதமாகிறது.

கடந்த ஜூலை மாதம் 13அம் தேதி அன்று மும்பையில்  நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம துரதிஷ்டவசமானதும், மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். ஆனால் எந்த ஒரு விசாரணையும் முடிவடையாத நிலையில், யார் இந்த தாக்குதலை நிகழ்த்தினார்கள் என்பதும் உறுதி செய்யப்படாத நிலையில் இந்த மீடியாக்கள் முஸ்லிம்களை இந்த குண்டுவெடிப்போடு தொடர்பு படுத்தி செய்திகள் வெளியிட்டன. இந்த சம்பவம் நிகழ்ந்து சிறிது நாட்களுக்கு பின்னர் புனேயில் வெளிவரும் "மிட் டே" என்ற பத்திரிக்கை பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய அவதூறான செய்தியை வெளியிட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கமும் அதனோடு தொடர்புடைய தடை செய்யப்பட்ட மற்ற இயக்கங்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று செய்தி வெளியிட்டது. மராட்டிய மொழியில் வெளிவரும் பத்ரிக்கையான "லோக் மாத்" இன்னும் ஒரு படி மேலே போய் அரசியல் கட்சியாக செயல்பட்டு வரும் எஸ்.டி.பி.ஐ கட்சி இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம என செய்தி வெளியிட்டது. இவ்வாறு செய்தி வெளியிட்ட பத்திரிக்கையின் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று கேள்வி எழுப்பும்போது மஹாராஷ்டிரா மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையின் தூண்டுதலின் பேரில்தான் செய்திகள் வெளியிட்டதாகவும், மறுநாளே மறுப்பு செய்தி வெளியிடுகிறோம் என்றும் கூறுகின்றனர். ஆனால் அது அத்தோடு நின்றுவிடுவதில்லை.

பாப்புலர் ஃப்ரண்டிற்கு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக நாட்டில் பல்வேறு பத்ரிக்கைகள் பொய்யான் செய்திகளை வெளியிட்டது, சில ஆங்கில பத்திரிக்கை உட்பட. மீரட், ஜெய்பூர், பெங்களூ,கொச்சி போன்ற நகரங்களில் வெளிவரும் பத்திரிக்கைகள் இவ்வாறு எந்த ஒரு ஆதாரமும் இல்லாத‌ அவதூறு செய்திகளை பரப்பியது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது இந்த மீடியாக்கள் பெரும்பாலும் கூறும் குற்றச்சாட்டு தடை செய்யப்பட்ட இயக்கமான சிமியுடன் தொடர்பு உண்டு என்பதுதான். ரகசிய பாதுகாப்பு படையின் மூலமாக இந்த செய்தி தங்களுக்கு கிடைத்ததாக இந்த மீடியாக்கள் கூறுகிறது. இத்தோடு மட்டுமல்லாம் இன்னும் எண்ணற்ற கற்பனை கதைகளை இந்த மீடியாக்கள் வெளியிடுவதில் எந்த ஒரு குறைபாடும் வைத்திடவில்லை. இல்லாத ஒரு இல்லாத ஒரு இயக்கமான (இந்தியன் முஜாஹிதீன்)னோடு பாப்புலர் ஃப்ரண்ட்டை தொடர்பு படுத்தி செய்திகள் வெளியிடுவது இவர்களின் வாடிக்கையாகிவிட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேறு எந்த இயக்கத்தோடும் தொடர்பு கிடையாது. இவை போன்ற அப்பட்டமான செய்திகளை வெளியிடும் எந்த பத்திரிக்கையாயினும் இதுவரை எந்த ஒரு ஆதாரப்பூர்வமான சாட்சிகளை வெளியிட்டதில்லை. இவை போன்ற முட்டாள்தனமான செய்திகளை வெளியிட்டுவிட்டு தங்களை "உளவுத்துறை" என்று கூறுவது வேடிக்கயாக இருக்கிறது. இவ்வாறான பத்திரிக்கைகள் தவறான செய்திகளை வெளியிட்ட போது நாம் இதனை கண்டித்து மறுப்பு கடிதம் எழுதியும் இது வரை எந்த ஒரு பத்திரிக்கையும் அதனை பிரசுரித்ததில்லை. இதிலிருந்து இவர்களின் இரட்டை நிலையை நாம் அறிந்து கொள்ளலாம். எத்தனையோ கேள்விகளை இந்த பத்திரிக்கை ஆசிரியர்களிடம் கேள்வி கேட்ட பின்னரும் இதுவரை அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் வந்ததில்லை. இவ்வாறான பொய்யான செய்திகள் வெளிவந்த போதும் எந்த ஒரு பத்திரிக்கையும் நம்முடைய கருத்தினை கேட்பதற்கு நம்மை தொடர்பு கொள்ளாதது வேதனை அளிப்பதாக உள்ளது. எல்லாவிதமான தீவிரவாதத்திற்கு எதிராகவும், தேசவிரோத செயல்களுக்கு எதிராகவும் பாப்புலர் ஃபரண்ட் முன் நின்று போராடக்கூடிய இயக்கமாகும்.

மும்பை குண்டு வெடிப்பிற்கு பிறகு மீரட்டிலிருந்து வெளிவரும் பத்திரிக்கையான "தயினிக் ஜகரம்" என்ற பத்திரிக்கை மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இயக்கத்தை தடை செய்துள்ளது என்றும் அதன் தலைவர்கள் இன்று தலைமறைவாகிவிட்டனர் என்று செய்தி வெளியிட்டது. தென் இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான "தி ஹிந்து" பத்திரிக்கை பாப்புலர் ஃப்ரண்ட் தடை செய்யப்படவேண்டிய இயக்கம் என்று வெளியிட்டிருக்கிறது. நடுநிலையான இந்தியக்குடிமகன் பத்திரிக்கையின் இந்த விஷமத்தனமான செய்திகளை நன்கு உணர்ந்து கொள்வான். தேசிய அளவில் செயல்பட்டுவரும் புதிய சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்யப்பட்ட இயக்கம் என்று கூறுவது எதேர்சயாகவோ அல்லது தவறுதலாகவோ கூறப்பட்ட செய்தி அல்ல மாறாக அதன் வளர்ச்சியை தடுப்பதற்காக திட்டமிடப்பட்ட சதியேயாகும். ஆரம்பகாலகட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தென் இந்தியாவில் மட்டுமே இயங்கி வந்த இயக்கமாக இருந்தது. தற்போது சமீபகாலங்களில் இதன் வளர்ச்சி வட இந்தியாவை நோக்கி வேகமாய் பாய்ந்து வருவதன் காரணத்தால் தான் இத்தைகைய பொய் பிரச்சாரங்கள் அரங்கேற்றப்படுகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடி வருகிறது. சுதந்திர தின அணிவகுப்பு, பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலம் சுதந்திர வேட்கையை மக்களின் கொண்டு சேர்க்கின்றது. ஆனால் கடந்த வருடம் கர்நாடகாவில் ஒரு பத்திரிக்கையில் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் ஆக்ஸ்ட் 15 ம் தேதி மைசூரில் பாகிஸ்தானின் தேசியக்கொடியை ஏற்ற முயற்ச்சித்ததாக செய்தி வெளியிட்டது. இத்தகைய முட்டாள்தனமான செய்தியை பத்திரிக்கைகளுக்கு கொடுத்தது அங்குள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவனாவான். ஆனால் மீடியாக்கள் இந்த செய்தி உண்மையானதுதானா? என்பதை ஆராய்ந்து வெளியிடாமல் உடனே பத்திரிக்கையில் பிரசுரித்தது. இதனை கண்டித்துடன் மைசூரில் நடந்தது என்ன? என்பதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் பேட்டி அளித்தத்போது அதனை எந்த பத்திரிக்கையும் பிரசுரிக்கவில்லை. மைசூரில் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை அரசாங்கம் சுதந்திர தினத்தை கொண்டாட விடாமல் தடுத்தையும் எந்த பத்திரிக்கையும் வெளியிடவில்லை.

ஊடகங்களின் பார்வையில் முஸ்லிம்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுவது, தேசியக்கொடியை ஏற்றுவதும் குற்றச்செயலாக பார்க்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு லக்னோவில் பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவரை சுதந்திர தினத்தை கொண்டாட விடாமல் தடுத்து காவல்துறையினரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். இந்த அநீதியான செய்திகளை மக்களுக்கு தெரிவிக்காமல் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் சுதந்திர தினத்தன்று பிரச்சனைகளில் ஈடுபடுவதாக பத்திரிக்கைள் செய்தி வெளியிட்டு வருகிறது.

தற்போது தொலைக்காட்சி செய்தி சேனல்களும் இந்த பந்தயத்தில் சேர்ந்துள்ளன. சமீபத்தில் சிறந்த ஆங்கில தொலைக்காடி செய்தி சேனலான சி.என்.என் கடந்த மே மாதம் 30ம் தேதி செய்தி வெளியிட்டது. அதாவது அல்கொய்தா இயக்கத்திற்கும் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் தடைசெய்யப்படுமா? என்றும் செய்தி வெளியிட்டது. மேலும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக செய்தி வெளியிட்டது.

இந்த கட்டுக்கதையின் தொடர்ச்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்தின் உறுப்பினர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டதாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் பிரான்ஸை உருவாக்குவதற்காகவும், அல்கொய்தா இயக்கத்திற்கு உறுப்பினர் சேர்பதற்கு செயல்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. இது மிகப்பெரிய ஆதாரமற்ற அபாண்டமான் குற்றச்சாட்டாகும். பாப்புலர் ஃப்ரண்டிற்கு இந்தியாவை தவிர்ந்து வேறு எங்கும் உறுப்பினர்கள் இல்லை. சி.என்.என் ஐ தொடர்பு கொண்டு கேட்டதற்கு "ரகசிய பாதுகாப்பு படை" தான் இந்த செய்தியை அவர்களுக்கு கொடுத்ததாக கூறியது. பின்னர் கடுமையான நெருக்கடி கொடுத்தவுடன் உள்துறை அமைச்சகம் தாம் இந்த செய்தியை கொடுத்ததாக கூறியது. இப்பேற்பட்ட  பொய்யான் செய்திகள் அந்த நாள் முழுவதும் எல்லா சேனல்களிலும் ஒளிப்பரப்பாகியது. ஆனால் இதற்கான மறுப்பு செய்தி எந்த சேனலிலும் ஒளிப்பரப்பு செய்யப்படவில்லை.

இதிலிருந்து ஊடகங்களில் சில பாப்புலர் ஃப்ரண்டின் மீது அவதூறு பிரச்சரத்தை மேற்கொண்டு வருவதை அறியலாம். முஸ்லிம் சமூகத்தை சக்தி படுத்தவும், நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடி வருகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இவை போன்ற தவறான செய்திகளை சவாலாக எடுதுக்கொள்ளும். வடக்கிலும், தெற்கிலும், மேற்கிலும், கிழக்கிலும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு ஆதரவு பெருகி வருகிறது. அநியாயக்காரர்களால் ஒரு போதும் பாப்புலர் ஃப்ரண்டின் வளர்ச்சியை தடுத்துவிடமுடியாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு

கே.எம். ஷரீஃப்
தேசிய பொதுச்செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010