புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பாப்புலர் ஃப்ரண்ட் பற்றி டெக்கன்கிரோனிக்கல் வெளியிட்ட‌அவதூறு செய்தி

25 செப்டம்பர், 2011


இந்த தேசத்தை வல்லரசாக மாற்றவிடமாட்டோம்!
இந்த தேசத்தை அந்நியர்களிடம் அடமானம் வைப்போம்!
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுப்போம்!
இந்தியாவில் ஜாதிக்கொடுமையை ஒழிய விடமாட்டோம்!
சிறுபான்மை மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை கொடுக்கமாட்டோம்!
ஃபசிஸசங்கப்பரிவார கூட்டத்தினருக்கு பல்லக்கு தூக்குவோம்!

இவற்றிற்காக எங்களை எதிர்க்கும் அமைப்பாக நீங்கள் இருந்தால்....! உங்களை தடை செய்து, உங்களை முடக்குவதற்கான‌ எல்லா வேலைகளிலும் ஈடுபடுவோம்!

இப்படிக்கு,

இந்திய அரசாங்கம் + உளவுத்துறை + ஊடகங்கள்



ஆம்! இதுதான் இன்றைய நிலை....

சுதந்திரம், நீதி, பாதுகாப்பு இந்தியாவில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி புதிய பாதையில் புதிய இந்தியாவை உருவாக்கும் பாரதூரமான பணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இது ஆட்சியாளர்களுக்கும், ஆதிக்க வர்கத்தினருக்கு இனிக்கவா போகிறது?

சில வருடங்களுக்கு முன்னால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தென் மாவட்டங்களான கேரளா, தமிழ் நாடு மற்றும் கர நாடாகாவில் மட்டுமே இயங்கி வந்த இயக்கமாக இருந்தது. ஆனால் அல்லாஹ்வுடைய கிருபையை கொண்டு இன்று இந்திய தேசம் முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கால்பதித்து ஆக்கப்பூர்வமான பல பணிகளை செய்து வருகிறது.  ஒரு தேசிய இயக்கம் தன்னுடைய தேசிய அலுவலகத்தை தென் இந்தியாவில் வைத்திருப்பது அவ்வளவு பொருத்தமாக இருக்காது என்பதனால் சமீபத்தில் தன்னுடைய தேசிய தலைமை அலுவலகத்தை தலை நகரமாம் டெல்லிக்கு மாற்றியது.

இதனால் பொறுக்க முடியாத உளவுத்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான செய்திகளை பத்திரிக்கைகளில் பிரசுரிக்க தூண்டி வருகிறது. அதன் அடிப்படையில் டெக்கன் கிரோனிக்கல் பத்திரிக்கை இன்று பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான பல செய்திகளை  பிரசுரித்துள்ளது. நிச்சயமாக இது டெக்கன் கிரோனிக்கல் ஆசிரியரின் தலையில் உதித்தது அல்ல என்பது நமக்கு நன்றாகவே புலப்படுகிறது. டெக்கன் கிரோனிக்கம் வெறும் அம்புதான், அதனை எய்தவர்களோ உளவுத்துறையினர் என்பதை யாரும் சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

அப்பத்திரிக்கையில் வெளியிட்ட செய்தியின் விபரம் வருமாறு:





பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு தனது தலை அலுவலகத்தை கேரளாவிலிருந்து டெல்லிக்கு மாற்றிவிட்டதாகவும், மாவோயிஸ்டு தீவிரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பச்சப்பொய்யை தெரிவித்துள்ளது. மேலும் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களுக்கு மறைமுகமாக ஆயுத பயிற்ச்சி வழங்கப்பட்டதாகவும், வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்துவதற்கு பயிற்ச்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரசுரித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் அரசாங்கத்தால் இன்னும் தடை செய்யப்படாத இயக்கமாக இருந்தாலும், உளவுத்துறையினர் அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட வருவதாக தெரிவித்துள்ளது. (இவர்கள் தான் குண்டுவைத்து பல அப்பாவி மக்களை கொன்று குவித்த ஆர்.எஸ்.எஸ் திவிரவாத இயக்கத்தை தண்டிக்க முடியாத வக்கற்றவர்களால் இதைத்தானே செய்ய இயலும்!). 

வழக்கம் போல் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் தடை செய்யப்பட்ட இயக்கமான சிமிக்கு தொடர்பு இருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பாப்புலர் ஃப்ரண்டோபோபியாவால் ஊடகங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்ற தலைப்பில் ஏற்கனவே நமது வலைப்பூவில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். பாப்புலர் ஃப்ரண்ட் செயல்படாத மாநிலங்களில் இருந்து வெளிவரும் பத்திரிக்கைகளில் கூட இது போன்ற செய்திகள் வெளியிடப்படுவது வாடிக்கைதான்.

இந்தியாவி செயல்படும் பெரும்பாலான ஊடகங்கள் உளவுததுறையின் ஊதுகுலலாகத்தான் செயல்படுகிறார்கள் என்பது எல்லோராலும் அறியப்பட்ட உண்மை.


டெக்கன் கிரோனிக்கல் தான் வெளியிட்ட இந்த அவதூறான செய்திக்கு பதில் சொல்லியே தீரவேண்டும். டெக்கன் கிரோனிக்கலின் இந்த செயலுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் சட்டரீதியான போராட்டங்களில் ஈடுபடும்.

"அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்..! ஆனால் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மிகப்பெரும் சூழ்ச்சியாளன் அல்லாஹ்வே.....!" என்ற திருமறைக்குர்ஆன் வசனத்திற்கேற்ப இந்த தேசவிரோத கும்பல்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அல்லாஹவுடைய கிருபையை கொண்டு இப்படிப்பட்ட சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்து சமூகப்பணிகளிலும், சமூகத்திற்காக நடத்தப்படும் போராட்டங்களிலும் முன்னின்று பாப்புலர் ஃப்ரண்ட் செயல்படும்! இன்ஷா அல்லாஹ்!




செய்தி: முத்து

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010