புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

டெக்கன் கிரோனிக்கல் வெளியிட்ட அவதூறு செய்தி - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

28 செப்டம்பர், 2011

கடந்த ஞாயிற்றுகிழமை (25.09.2011) டெக்கன் கிரோனிக்கல் பத்திரிக்கையின் சென்னை பதிப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை பற்றியான தவறான செய்தியை பிரசுரித்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.  "பாப்புலர் ஃப்ரண்ட் ஷிஃப்ட்ஸ் டு டெல்லி" "பாப்புலர் ஃபரண்ட் டெல்லிக்கு மாற்றம்" என்ற தலைப்பில் வெளிவந்த அந்த செய்தியில் அவதூறான, ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டுள்ளது. டெக்கன் கிரோனிக்கலில்ன் ஆசிரியர்கள் தாங்கள் வெளியிட்ட இந்த கட்டுரையை மறுபரிசீலனை செய்து உண்மையான செய்தியை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

 டெக்கன் கிரோனிக்களில் வெளியிடப்பட்ட அந்த கட்டுரை தவறான‌ மற்றும் ஆதாரமற்ற செய்திகளை கொண்ட கட்டுரையாக தொடங்குகிறது. அந்த கட்டுரையின் ஆரம்பம் இப்படியாக தொடங்குகிறது "பாப்புலர் ஃப்ரண்ட் தன்னுடைய தலைமை அலுவலகத்தை பாதுகாப்பு கவலையின் காரணமாக கேரளாவிலிருந்து டெல்லிக்கு மாற்றியுள்ளது." இதில் தவறான விஷயம் என்னவென்றால் இதனால் வரை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைமை அலுவலகம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயல்பட்டுவந்தது. இதைக்கூட தெரிந்து வைத்துக்கொள்ளாமல் சகட்டுமேனிக்கு கட்டுக்கதைகளை வெளியிடுவது பத்திரிக்கை தர்மத்திற்கு எதிரானது.




மதிப்பிற்குரிய ஆசிரியர் நம்ரதா பிஜி அஹூஜா அவர்களே! தங்களுடைய பத்திரிக்கை நிருபர் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பல அவதூறான செய்திகளை வெளியிட்டுள்ளார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவோயிஸ்டு தீவிரவாதிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயல்வதாகவும், பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களுக்கு கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு பியிற்ச்சி அளிக்கப்படுவதாகவும், மேலும் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயிற்ச்சி அளிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். பாப்புலர் ஃப்ரண்ட் இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை முற்றிலுமாக மறுக்கிறது. இவை போன்ற தேச விரோத செயல்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஒருபோதும் உடந்தையாக இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு குற்றச்சாட்டை கூறும்போது தகுந்த ஆதாரத்துடன் கூறவேண்டும், இது வரை பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்  என்று எந்த ஊரிலும் புகார் இருந்ததில்லை. இத்தைகைய ஆதாரமற்ற செய்திகள் மக்களிடன் பாப்புலர் ஃப்ரண்ட் மீது இருக்கும் நம்பகத்தன்மையை பாதிப்பதாக அமைகிறது. இது போன்ற எல்லா அவதூறான குற்றச்சாட்டுகளையும் வன்மையாக கண்டிக்கிறோம்.


பாப்புலர் ஃப்ரண்டின் தீவிரவாத செயல்களை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்களாம். இது முற்றிலும் அவதூறானதே. இது நாள் வரை பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் எந்த தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டதில்லை. மேலும் தடை செய்யப்பட்ட இயக்கமான சிமிக்கும் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் தொடர்பு இருப்பதாக கூறுவது உங்களின் கற்பனையேயாகும்.

 வகுப்புவாத சக்திகளின் தூண்டுதலாலும், உளவுத்துறையின் தூண்டுதலாலுமே இவ்வாறான செய்திகளை பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக உங்களது நிருபர் வெளியிட்டுள்ளார் என்பது எங்களால் உறுதியாக கூறமுடியும்.
தென் இந்தியாவில் நல்ல நிலையில் வளர்ந்து வருவதோடு மட்டுமல்லாமல், சிறுபான்மையினர் அதிகமாக படிக்கும் பத்திரிக்கையான் டெக்கன் கிரோனிக்கலிடமிருந்து இத்தகைய அவதூறான செய்திகள் வெளியிடப்படுவது வருத்தத்தை அளிக்கிறது.


உளவுத்துறை ஒரு செய்தியை அளிக்கும் போது அதில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என்பதைக்கூட பார்க்காமல் அப்படியே வெளியிடுவது ஒரு பத்திரிக்கையின் செயலாகுமா?

தேசிய தலைமை அலுவலகத்தை டெல்லிக்கு மாற்றுவது கூட ஒரு குற்றச்செயலா? என்பதை கூறுங்கள்...

 ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் இயக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவாகும். சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக போராடும் இயக்கங்களுடன் ஒன்றினைந்து பாப்புலர் ஃப்ரண்ட் செயல்பட்டு வருகிறது. இத்தைகைய போராட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் முன் நின்று செயல்படும்.


பத்திரிக்கை மற்றும் உளவுத்துறையின் இத்தகைய சதி வேலைகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு சவாலாக ஏற்றுக்கொள்கிறது.
சுதந்திரம், நீதி, பாதுகாப்பு எல்லா மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே பாப்புலர் ஃப்ரண்டின் லட்சியம், இலக்கு. இந்த பாதையில் எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் அவற்றை முறியடித்து பாப்புலர் ஃப்ரண்ட் முன்னேற்றிச்செல்லும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி வரும் காலங்களில் உண்மை தகவலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு

கே.எம்.ஷரீஃப்
தேசிய பொதுச்செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
புதுடெல்லி.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010