புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

புதுடெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தர்ணா போராட்டம்

9 டிசம்பர், 2011

புதுடெல்லி: பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆன பிறகு, பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6ஆம் தேதி அன்று தலை நகர் புதுடெல்லி உட்பட இந்தியாவின் பல நகரங்களில் பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைய வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு நிகழ்ச்சிகளையும் போராட்டங்களையும் நடத்தியது.


Chairman addressing in the Protest demanding to rebuild Babari Masjid
பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்ட வலியுறுத்தி புதுடெல்லி ஜந்தர் மந்தர் அருகில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானவர்கள் இதில் கலந்து கொண்டனர். தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான அவர்கள் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பஹரு பர்கி, மஜ்லிஸே முஷவ்வராவின் டாக்டர் அன்வருல் இஸ்லாம், எஸ்.டி.பி.ஐயின் டெல்லி மாநில ஒருங்கினைப்பாளர் அப்துல் ரஷீது ஆகவான், மெளலானா கலீமுல்லாஹ் சித்தீகி மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.
Babar Masjid Protest in New Delhi 2011

பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும், அப்படியானால் கோடிக்கணக்கான முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்படும். நீதி நிலை நாட்டப்படவேண்டுமெனில் பாபரி மஸ்ஜித் மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட்டே தீர வேண்டும். முன்னால் காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம ராவ் முஸ்லிம்களுக்கு அதே இடத்தில் பாபரி மஸ்ஜித் கட்டித்தரப்படும் என்று கூறிய வாக்குறுதியை பாப்புலர் ஃப்ரண்ட் நினைவுபடுத்துகிறது.

பிரச்சினை தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகள் இன்னமும் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன. அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தடைவிதிக்கப்பட்டு தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பாபரி மஸ்ஜிதை இடத்த குற்றவாளிகளின் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்கும் இன்று வரை தீர்வு காணப்படவில்லை.
பாபரி மஸ்ஜித் இடிப்பு விவகாரத்தை விசாரிக்க மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட லிபர்ஹான் கமிஷன் வெளியிட்ட அறிக்கையை அமுல்படுத்த மத்திய அரசு தயாராகாதது வேதனை அளிப்பதாக உள்ளது.


இதன் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய அரசுக்கு கீழ் கண்ட கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்துகிறது:


1. சர்ச்சைக்குரிய உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடைவிதித்துள்ள உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை விரைந்து முடிப்பதற்காக பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.


2. லிபர்ஹான் கமிஷனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த 68 நபர்களும் குற்றவாளிகள் என அறிவித்து அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க்கப்பட வேண்டும்.

3. பாராளுமன்றத்தில் பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்பதற்காக சட்டத்தை இயற்ற வேண்டும்.
ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

 
Babar Masjid Protest in New Delhi 2011

1 விமர்சனங்கள்:

misba சொன்னது…

Alla hu akbar. Soon we will build Babar masjid Insha Allah

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010