லக்னோ: பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான எல்.கே. அத்வானியை பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கின் குற்றப்பதிரிக்கையில் சேர்க்க வேண்டும் என பாபரி மஸ்ஜிதி மிட்புக்குழுவின் தலைவரும் வழக்கறிஞருமான ஜஃபரியாப் ஜீலானி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜஃப்ரியாப் ஜீலானி அவர்கள் கூறும்போது பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் அத்வானிக்கு எதிராக இருந்த குற்றச்சாட்டுகளை முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு குற்றப்பத்திரிக்கையில் இருந்து நீக்கியது. எங்களுடைய கோரிக்கை என்னவெனில் மத்திய அரசாங்கம் அத்வானிக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிக்கையை தயார் செய்த்து உச்ச நீதிமன்றத்தை அனுக வேண்டும் என்பதே. காரணம் பாபரி மஸ்ஜித் இடிப்பு சம்பவத்தில் அத்வானி ஒரு முக்கிய பங்கு வகித்தார் என்பது சந்தேகத்திற்கு இடமின்று லிபர்ஹான் கமிஷனின் அறிக்கையின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது என்று கூறினார்.
இது தொடர்பாக பாபரி மஸ்ஜித் மீட்புக்குழு சிறப்பு பிரார்தனைகளை மேற்கொள்வதோடு பிரதமர் மற்றும் உத்திர பிரதேச முதலமைச்சர் ஆகியோருக்கு நினைவு பத்திரத்தை வழங்கும் என்று கூறினார். சி.பி.ஐ அதிகாரிகள் முறையான விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது தகுந்த குற்றப்பத்திரிக்கையை தயார் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இத்தருணத்தில் முஸ்லிம்கள் அமைதிகாத்து சமுதாயத்தில் எந்த தீங்கும் ஏற்படாதவாரு தங்களது போராட்டங்களை நடத்த வேண்டும் என்று மீட்புக்குழுவின் சார்பாக கேட்டுக்கொண்டார்.
பாபரி மஸ்ஜித் மீட்புக்குழுவின் தலைவர் வழக்கறிஞர் ஜஃபரியாப் ஜீலானி |

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக