புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

கர்நாடக மாநில கேம்பஸ் ஃப்ரண்டின் புதிய தலைவராக துஃபைல் தேர்வு

4 ஏப்ரல், 2012

பெங்களூர்: கேம்பஸ் ஃப்ரண்டின் கர்நாடக மாநில நிர்வாகிகளின் கூட்டம் ஏப்ரல் 1 ஞாயிற்றுகிழமை அன்று பெங்களூரில் நடைபெற்றது. இதில் புதிய தலைவராக துஃபைல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tufail

வருடத்திற்க் ஒரு முறை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் முறை நடைபெறுவது வழக்கம் அதன்படி கர்நாடக மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பொதுச்செயலாளராக அப்துல் ரஹீம், துணைத்தலைவராக மெஹஃபூஸ் அஜன், செயலாளர்களாக ஹைதர் ஹபீப் மற்றும் சொஹைல் மற்றும் பொருளாளராக தஃப்ஸீர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இனி வரக்கூடிய ஒருவருடத்திற்கான கேம்பஸ் ஃப்ரண்டின் கர்நாடக மாநில நிர்வாகிகளாக செயல்படுவார்கள்.

காலை 10:15 மணியளவில் கேம்பஸ் ஃப்ரண்டின் சிகப்பு நட்சத்திரம் பொறிக்கப்பட்ட நீல் நிற கொடியை ஏற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார் முஹம்மது ஷாகிர். முஹம்மது துஃபைல் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநில தலைவர் முஹம்மது இலியாஸ் தும்பே உரையாற்றும்போது மாணவர்கள் சமூக மாற்றத்திற்காக பாடுபட வேண்டும். வெறும் படிப்பிற்காக மட்டுமே தங்களுடைய‌ நேரங்களை செலவிடாமல் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடிக்கும் வகையில் சமூக சேவைகளில் ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்த தேசத்தின் எதிர்காலமே மாணவர்கள் கையில் தான் இருக்கிறது. நல்ல அரசியல்வாதிகளாக, வழக்கறிஞர்களாக, நல்ல குடிமக்களாக உருவெடுக்க வேண்டும். மாணவர்கள் நேர்ம்றையான அரசியலில் ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Delegates Meet

மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் துவார்கந்த் உரையாற்றும்போது  மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசாங்கத்தால் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவித்தொகைகளை கல்விக்காக முழுவதும் பயன்படுத்திக்கொண்டு சமூக வளர்ச்சிக்காக உறுதுணையாக இருக்க வேண்டும். அதனை அவர்கள் சரிவர பயன்படுத்த தவறினால சங்கப்பரிவாரங்களால் அத்தகைய உதவித்தொகைகள் தவறான பாதையில் செலவழிக்கும் அபாயம் ஏற்பட்டுவிடும் என அவர் எச்சரித்தார்.

ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், கல்வி வணிகமயமாக்கப்படுதல் போன்றவற்றிற்கு எதிராக மாணவர்கள் போராடவேண்டும். முஸ்லிம்க‌ள், தலித்க‌ள் மற்றும் இன்னபிற பிற்படுத்த சமூகங்கள் அனைத்து ஒன்றினைந்து சங்கப்பரிவார சக்திகளை முற்றிலுமாக அழிக்க முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சமூக சேவகரான வடகரை நாகராஜ் கலந்து கொண்டு புதிய தலைவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவர்கள் பின்னர் வரக்கூடிய தலைமுறையினருக்கு சிறந்து முன் உதாரணமாக திகழ வேண்டும் என கேட்டுக்கொண்டார். சாத்பாவனாவின் ஒருங்கினைப்பாளர் இஷரத் நிஜார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மத்தியில் கருத்து பரிமாற்றம் செய்தார். அதில் மாணவர்கள் நேர்மறையான சமூக மாற்றத்திற்காக உழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநிலம் முழுவதும் அதிக அளவில் நடத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

Delegates Meet

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில தலைவர் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், மாணவர்கள் இனி வரும் காலங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார். இறுதியாக துணைத்தலைவர் மெஹபூப் ஹசன் நன்றியுரைன் நிகழ்த்த நிகழ்ச்சி நிறைவுற்றது.

Delegates Meet

2 விமர்சனங்கள்:

CAMPUS FRONT OF INDIA TRICHY சொன்னது…

NEW LEADERS CONGRATES ALL WORK SUCCESS BEST WISHES!!

vidialvelli.blogspot.com சொன்னது…

Congrates for Karnataka Champus Front New Leaders

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010