புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

இடஒதுக்கீடு போராட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:

22 ஏப்ரல், 2012


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்களி நிறைவேற்றப்பட்டன‌

1. முஸ்லிம்கள் மிகவும் பிந்தங்கிய நிலையில் இருந்ததால் தான் சுதந்திரம் பெறும் முன்பேஅவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற பின்பும் நமது நாட்டின் மக்கள் தொகையில் (2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) 13.4% முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். சுதந்திரம் பெற்ற பின் முஸ்லிம் சமூகத்தின் நிலை மேலும் மோசமானதே தவிர எந்தவொரு முன்னேற்றமும் அடையவில்லை. இந்நிலையில் மத்திய அரசு சுதந்திரம் பெற்ற பின் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டை ஒரேடியாக ரத்து செய்தது எந்த வகையிலும் நியாயமில்லை. எனவே சமூக நீதியின் அடிப்படையில் கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முஸ்லிம் சமூகத்தினை முன்னேற்ற முஸ்லிம்களுக்கு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையான 10% தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுப் பணிகளில் உடனடியாக அமுல்படுத்திட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது.

2. வகுப்புரிமை ஆணையின் மூலம் 1948ம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் 7% தனி இடஒதுக்கீடு வழங்க்கப்பட்டிருந்தது. வகுப்புரிமை ஆணையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்த போது தான் முஸ்லிம்களுக்கு தனியாக 7% இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 1948ம் ஆண்டு வகுப்புரிமை ஆணை ரத்து செய்யப்பட்டு மீண்டும்  இடஒதுக்கீடு வழங்கிய போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிடவில்லை. மாறாக பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டனர். சச்சார் கமிஷனின் ஆய்வுப்படி இடஒதுக்கீடு, சலுகை கிடைக்கப்பெறாத முன்னேறிய முஸ்லிம்களின் நிலை, இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இடஒதுக்கீடு அனுபவித்து வரும் ஹிந்து சமூகத்தினரைவிட மோசமானதாக இருக்கிறது என்று கண்டறிந்துள்ளார். எனவே முஸ்லிம்களால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுடன் போட்டி போட இயலாது. 2007ம் ஆண்டில் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் இந்த 3.5% இடஒதுக்கீடு முஸ்லிம் சமூகத்தை, முன்னேற்றிட நிச்சயமாக போதுமானது கிடையாது. பிற சமூகங்களுக்கு  விகிதாச்சார இடஒதுக்கீடு வழங்கிய போது 5.6% மக்கட்தொகையுடைய முஸ்லிம்களுக்கு வெறுமனே 3.5% இடஒதுக்கீடு வழங்கியது பாரபட்சமாகும். எனவே சமூக நீதியின் அடைப்படையிலும்  சம நீதியின் அடிப்படையிலும் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்ட அதே 7% இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கும் வகையில் தமிழகத்தில் தற்போதுள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கும் வகையில் தமிழகத்தில் தற்போதுள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% உயர்த்தி வழங்கிட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாட் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

3. ரோஸ்டர் முறையினால் மீண்டும் முஸ்லிம்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. குறைவான காலியிடங்கள் இருக்கும் பணிகளால் ரோஸ்டரின் சுற்றில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு கிடைக்க சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் மாவட்ட ரீதியாக காலியிடங்களை நிரப்புவதிலும் முஸ்லிம்கள் மீண்டும் பல ஆண்டுகள், காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே அனைத்து அரசு அலுவலகங்களிலும் 69% இடஒதுக்கீட்டின்படி எந்தெந்த சமூகங்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதோ, அந்த சமூகங்களை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு புதிதாக பணியில் அமர்த்தும் போது முன்னுரிமை கொடுக்க வேண்டும். அனைத்து அரசுப் பணிகளிலும் அனைத்து சமூகத்திற்கும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வரை ரோஸ்டர் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், அதன் பின்னர் உரிய பிரதிநிதித்துவத்தை பாதிக்காத வகையில் ரோஸ்டர் முறை குறித்து குறுகிய காலத்திற்குள் நிபுணர் குழு ஆய்வு நடத்தி, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடர்ந்திட வழிவகை செய்திட வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

4. உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீடு 50% தாண்டக்கூடாது என்ற தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டும். 24.3% மக்கள் தொகையுடைய தலித் மற்றும் பழங்குடியினர் சமூகத்திற்கு விகிதாச்சார இடஒதுக்கீட்டின் படி 22.5% இடஒதுக்கீடு வழங்கும் போது, 52% மக்கள் தொகையுடைய பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை, உச்ச நீதிமன்ற ஆணை தடுப்பது பாரபட்சமாகும். நாட்டில் 84.8%  இடஒதுக்கீடு வழங்கியே ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும்போது மொத்த இடஒதுக்கீடு 50% தாண்டக்கூடாது என்று உத்தரவிடுவது சமூக நீதிக்கும் சமநீதிக்கும் உகர்ந்தது அல்ல. எனவே உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டிற்கான 50% தடையை மறு ஆய்வு செய்ய தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் சட்ட இயற்றி சமூக நீதிக்கொள்கையை பாதுகாத்திட வழிவகை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

5. வேறு மதங்களலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறுபவர்கள் ஏற்கனவே அனுபவித்த இடஒதுக்கீடு சலுகைகள் பறிக்கப்படுகிறது. ஒரு மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறுவதால் அவரது மத நம்பிக்கைதான் மாறுகிறதே தவிற அவரது கல்வி மற்றும் சமூக சூழ்நிலைகள் மாறுவதில்லை. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று கூறும் அரசு மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு சலுகையை மட்டும் பறிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. எனவே மதம் மாறுபவர்களின் சமூக மற்றும் கல்வியின் முன்னேற்றம் கருதி ஒருவர் மதம் மாறுவதால் அவர் பெற்று வந்த சலுகைகளை பறிக்காமல் அரசு தொடர்ந்து வழங்கிட வேண்டூம் என மத்திய அரசு மற்றும் தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

6.  10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.



0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010