புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு யாத்திரை

11 ஏப்ரல், 2012

புதுடெல்லி: இன்று தீவிரவாத தாக்குதல்களும், சட்டவிரோத கைதுகளும் தேசத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் அதேசமயம் தேசத்தின் அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் உருமாறி வருகின்றது என்பதை நாம் அறிவோம். தீவிரவாத தாக்குதல்களினாலும், சட்ட விரோத கைதுகளாலும் சகோதரத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.



கடந்த காலங்களில் மத பாகுபாடின்றி இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்ந்திருக்கின்றனர். அத்தோடுமட்டுமல்லாமல் இரு சமூக மக்கள் மத்தியில் தங்களது கஷ்டங்களையு, பிரச்சனைகளையும் பகிர்ந்து கொண்டு மதநல்லிணக்கத்தோடு வாழ்ந்திருக்கின்றனர். இது தான் நம் இந்திய தேசத்தின் பல நூற்றாண்டுகளின் வரலாறு. இப்பேற்பட்ட ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் வேறு எந்த தேசத்திலும் கண்டுவிடமுடியாது.

தீவிரவாத தாக்குதல்கள் அனைத்தும் நீங்கி தேச மக்கள் மதநல்லிணக்கத்தோடும் அமைதியாக வாழ வேண்டும் என நாம் உண்மையிலேயே விரும்பினால் தீவிராவாத தாக்குதல்களுக்கான காரணங்களை முழுமையாக ஆராய வேண்டுமே தவிற முன்கூட்டிய அனுமானித்து இவர்கள் தான் தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணம் என்று நினைத்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது குற்றம் சுமத்திவிடக்கூடாது. அப்படி செய்வதினால் தொடர்ந்து அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள். மேலும் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் கேடாகவும் இது அமைந்துவிடும்.

சமீபத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அப்பாவிகள் என்றும் நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். மனித உரிமை பாதுகாப்பிற்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்.

எனவே சட்டவிரோத கைதுகளுக்கு எதிராகவும், தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராகவும் இந்திய மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை மாபெரும் யாத்திரை நடைபெறவுள்ளது. குதாய் கித்மத்கர், என்.ஏ.பி.எம், மிஷன் பாரதியம், என்.சி.ஹெச்.ஆர்.ஓ, அன்ஹாத், சத்பாவ மிஷன் மற்றும் இன்ன பிற மனித உரிமை அமைப்புகள் ஒன்றினைந்து இந்த விழிப்புணர்வு யாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஏப்ரல் 12ல் புது டெல்லியில் தொடங்க இருக்கும் இந்த யாத்திரை ஆக்ரா, போபால், புர்ஹான்பூர், மாலேகான், ஹூப்லி, பெங்களூர், சென்னை, நெல்லூர் வழியாக ஏப்ரல் 21 அன்று ஹைதராபாத் வந்தடைகிறது. இந்த யாத்திரையின் துவக்க நாளான நாளைய தினம் புதுடெல்லி பாட்லா ஹவுஸ் அருகேயுள்ள மஸ்ஜிதே கலீலுல்லாஹ் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. நிறைவு நாளான ஏப்ரல் 22 அன்று ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் அருகே பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010