மங்களூர்: இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாணவர் இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பிரதிநிதிகளின் கூட்டம் மங்களூர் டவுண்ஹாலில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய ஆலோசனைக்குழு தலைவர் அனீஸ் அஹமது இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மாணவர்கள் மத்தியில் அரசியல் சக்தியை உருவாக்கும் இயக்கங்கள் மத்தியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னின்று செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இன்று இந்தியாவில் செயல்பட்டு வரும் பல மாணவ அமைப்புகள் இந்திய மாணவர்களை அரசியல் பொம்மைகளாகவே அக்க முயல்கின்றனர். இந்திய அரசியலில் மாணவர்கள் ஒரு மிகப்பெரும் மரபை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த தேசத்திற்காக முன் சென்ற மாணவ சமுதாயம் பல தியாகங்களை செய்துள்ளது. அப்பேற்பட்ட சமூகத்தை கட்டியெழுப்பி தேசத்தின் வளர்சிக்காக உபயோகப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் போது கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயல்பாடுகளின் ஆண்டறிக்கையும் சமர்பிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் தேசிய தலைவர் அனீஸுஜமான், பொதுச்செயலாளர் ஆசிஃப், சி.ஏ.ரவூஃப், அப்துல் மஜீத், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநில தலைவர் முஹம்மது இலியாஸ் தும்பே, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் முஹம்மது தம்பி உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக