12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்துள்ள ஏழை மாணவ மாணவியருக்கு தங்களின் கல்லூரி படிப்பு கட்டணத்தை கட்ட உதவும் வகையில் தேசிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வட்டியில்லா கடன் உதவி வழங்கி வருகிறது. சென்ற ஆண்டு தேசிய அளவில் 24 லட்ச ரூபாய்க்கான கல்வி உதவி வழங்கப்பட்டது.
பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தகுதியான மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடனுதவி தொகை வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டு தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் தேர்வு செய்யப்பட்ட 54 மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சென்னையில் 14.10.2012 அன்று மதியம் 2:15 மணியளவில் உதவித்தொகை வழங்கும் விழா பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது. கஃபூர் இமாம் இறைவசனங்களை ஓதி இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் ஏ.காலித் முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு ரூபாய் 68,000/-ற்கான உதவித்தொகையினை வழங்கினார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக