புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

நீதிக்காக உண்ணாவிரதம் - சகோதரர் ஹாரூன்

17 மார்ச், 2011

Haroon addressing on hunger protest against erred Intelligence official
பொய்வழக்கு போடப்பட்ட சகோதரர் ஹாரூன் உரையாற்றுகிறார்.
சென்னை: கோவையில் குண்டு வைக்க முயற்ச்சி என்று மிகப்பெரும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி அதன் மூலம் ஹாரூன் உட்பட 5 அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, அப்போது பாப்புலர் ஃப்ரண்டாக செயல்பட்ட மனித நீதி பாசறையின் மீது அபாண்டத்தை கட்டவிழ்த்துவிட்ட அன்றைய காவல்தறை அதிகாரி ரத்தின சபாபதியின் பதவி உயர்வை கண்டித்து சகோதரர் ஹாரூன் அவர்கள் சென்னையில் சென்ற வாரம் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி அருகே தனது குடும்பத்தாருடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
அன்றைய தினங்களில் பத்திரிக்கைகள் அனைத்தும் ரத்தினசபாபதி எடுத்த வாந்தியை முழுங்கி பின்னர் அதனையே தங்களுடைய பத்திரிக்கைகளிலும் பிரசுரித்தது. உதாரணாமாக "கோவையை தகர்க்க சதி! தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் கைது", "கோவையை தகர்க்க சதி! பகீர் ரிப்போர்ட்!", "மனித நீதிப் பாசறைக்கு தடை!" போன்ற நச்சுக்கருத்துக்களை கொண்ட தலைப்புகளில் செய்திகளை வெளியிட்டது. ஆனால் இறைவனுடைய மிகப்பெரும் உதவியால் கடுமையான போராட்டத்திற்கும் பிறகு தமிழக அரசே நியமித்த சி.பி.சி.ஐ.டி மூலம் இது இட்டுக்கட்டப்பட்ட பொய் வழக்கு என்றும், கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்ற உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தது. இதன் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதி என்று கூறி அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
 
Family of Haroon went of hunger protest to dismiss erred Intelligence official
உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர்.
ஆனால் இப்பேற்பட்ட நாடகத்தை அரங்கேற்றி ஒட்டு மொத்த தமிழகத்தையும் பீதிக்குள்ளாக்கிய ரத்தின சபாபதிக்கோ கிடைத்தது பதவி உயர்வுக்கு மேல் பதவி உயர்வு. அதிலும் சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி துறையில் கொடுக்கப்பட்ட பதிவி உயர்வு இந்த வழக்கிற்காக குரல் கொடுத்த மனித உரிமை ஆர்வலர்கள் அனைவருக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற வேளையில், சகோதரர் ஹாரூன் அவர்கள் ரத்தின சபாபதியை பதிவி நீக்கம் செய்யக்கோரி தனது குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். நீதிக்காக போராடிய அவரும் அவரது குடும்பத்தினரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
மனித உரிமை ஆர்வளர் பலரும் இதில் கலந்து கொண்டனர். அதில் பேராசிரியர் மார்க்ஸ், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் அப்துல் சமது, சமூக சமுதாய படையின் தலைவி சிவகாமி. ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010