பாட்னா: பீஹார் மாநிலத்தில் காவல்துறையினர் கொடூரமான முறையில் நடந்து வருகிறார்கள். ஜனதா தளம் கட்சியின் முதல்வர் நிதிஷ் குமார் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டும் சமீபத்தில் பீஹார் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தார். பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பார்கள், அதே போன்று ஃபாஸிச பயங்கவரவாத கட்சியான பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் நல்ல சிந்தனைகளா வரப்போகிறது? இந்த நாட்டின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம்? முஸ்லிம்களை எப்படி கொன்று குவிக்கலாம்? என்ற சிந்தனை தான் வரும் என்ற அடிப்படையில் கடந்த 6 மாதங்களில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான அராரியா மாவட்டத்தில் காவல்துறையினர் முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரமான தாக்குதல்களை இரு வேறு சந்தர்பங்களில் அரங்கேற்றியுள்ளனர்.
கடந்த 3ஆம் தேதி அன்று ஜும்மா தொழுகையை முடித்த பின்பு ராம்பூர் மற்றும் பஜன்பூர் கிராம வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலை ஒன்றை உருவாக்கி அதற்காக சாலை அமைப்பதில் பிரச்சனை ஏற்பட்டதால் அந்த இரு கிராம வாசிகளும் போராட்டதில் ஈடுபட்டதாக தெரிகிறது. போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது காவல்துறை, அத்தோடு மட்டுமல்லாமல் அவர்களை வீடு வரை துறத்திக்கொண்டே சென்று, வீட்டிலுள்ள பெண்கள் முதல் குழந்தைகள் என அனைவரையும் சுட்டுக்கொன்றுள்ளது. இரு பெண்கள் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 6 நபர்களை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். ஆனால் மாநில அரசாங்கமோ நான்கு நபர்கள் மட்டுமே சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் 6 நபர்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக டூசர்கில்ஸ் பத்திரிக்கை தெரிவிக்கிறது.
Forbesganj police firing victim
வறுமையில் வாடும் அந்த மக்கள் மீது ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தினீர்கள் என்று காவல்துறையினரிடம் கேட்டபோது, அவர்கள் காவல்துறையினரை நோக்கி சுட்டார்களாம், பதிலுக்கு இவர்கள் சுட்டதினால்தான் கொல்லப்பட்டார்களாம்.
வழக்கு பற்றி:
ராம்பூர் மற்றும் பஜன்பூர் கிராமம், 90% அதிகமான முஸ்லிம்கள் வாழும் இடமாகும். இந்த இரு கிராமங்களையும் இணைக்கும் ஒரு பழைய சாலை இருந்து வந்தது. சில வருடங்களுக்கு முன்பு நான்கு வழி சாலை போடப்பட்டது, ஒரு மேம்பாலமும் கட்டப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டதால் இதனை இரு கிராம மக்கள் உபயோகிப்பதில்லை. அதிக அளவில் விபத்துக்களும் நடைபெற்றதால் கிராம மக்கள் தங்களது பழைய சாலையையே பயன்படுத்த தொடங்கினார்கள். ஆனால் இதற்கிடையில் அந்த இரு கிராமங்களுக்கு மத்தியில் உள்ள நிலத்தையும், அந்த சாலை இருந்த இடத்தையும் தனியார் நிருவனத்திற்கு விற்றுவிட்டது பிஹார் அரசாங்கம்.
Forbesganj police firing victim
இதனை எதிர்த்து இரு கிராம வாசிகளும் அரசாங்கத்தை அனுகினர். தங்களுக்கு அந்த சாலையை மீட்டு தரவேண்டும் என்றும் இல்லயென்றால் மாற்று வழி ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். ஆனால் இவர்களது கோரிக்கையை அரசாங்கமும் சரி தனியார் நிறுவனமும் சரி கண்டுகொள்ளவில்லை.
ஜுன் 1ஆம் தேதி அன்றும் அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கும், கிராம நிர்வாகிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிகிறது. அதில் கிராம மக்களுக்காக அவர்கள் உபயோகித்த பழைய பாதை திறந்து விடப்படும் என்று கூறிவிட்டு மறு தினமே மக்களை அவ்வழியாக செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.
இந்த செய்தி வேகமாக பரவியது. மறு நாள் வெள்ளிக்கிழமை அன்று ஜும்மா தொழுகையை நிறைவேற்றிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைவழியாக செல்லாமல் இருக்க வைத்திருந்த தடுப்பை உடைத்து விட்டு, அந்த நிறுவனத்தின் வாகனத்தையும் தீயிட்டு கொழுத்தினர். உடனே அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். அவரகளை வீடு வரை துரத்திச்சென்று பெண்கள் குழந்தைகள் உட்பட 6 நபர்களை சுட்டுக்கொன்றனர்.
அராரியா மாவட்டத்தில் சங்கபரிவாரத்தின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. எம்.எல்.ஏ முதல் கவுன்சிலர் வரை அனைவரும் பா.ஜ.கவினரா இருக்கிறார்கள். நிதிஷ் குமார் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்ததிலிருந்து சங்கபரிவார கூட்டத்தினர் அதிக அளவிம் இம்மாவட்டத்தின் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
Forbesganj police firing victim
தமிழில் : முத்து
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக