|
அமீர் ஹம்ஜா |
எஸ்.டி.பி.ஐ-ன் துறைமுகம் தொகுதி வேட்பாளர் எஸ்.அமீர் ஹம்ஜா அவர்களின் வேட்பு மணு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ-ன் வேட்பாளரக வட சென்னை மாவட்ட தலைவர் எஸ்.அமீர் ஹம்ஜா அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
|
அப்துல் ஹமீத் |
நேற்றைய தினம் 28.03.2011 அன்று தமிழகம் முழுவதும் வேட்பாளர்களின் மனுவை சரி பார்க்கும் பணி நடைபெற்றது. அதில் துறைமுகம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அமீர் ஹம்ஜா அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. போதி ஆவணங்களை சேர்க்காதிருத்தல், உரிய இடங்களில் கையெழுத்து போடாமல் இருப்பது, சாட்சிக்காக கொடுக்கப்பட்ட நபர்களின் விபரங்கள் சரியாக இல்லாமல் இருப்பது போன்ற பல காரணங்களுக்காக வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படுவது வழக்கம். இதன் அடிப்படையில் நேற்று தமிழகம்
|
துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பி.முஹம்மது ஹூஸைன் |
முழுவதும் 1153 வேட்பாளர்களின் மனுக்கல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் சென்னை துறைமுகத்தில் போட்டியிட இருந்த எஸ். அமீர் ஹம்ஜா அவர்களின் மனுவும், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட இருந்த அப்துல் ஹமீது அவர்களின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாற்று ஏற்பாடாக மனு தாக்கல் செய்திருந்த எஸ்.டி.பி.ஐ-ன் தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுஸைன் துறைமுகம் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது. அதே போன்று ராமநாதபுரம் தொகுதியிலும் சுயேட்சையாக ஃபைரோஸ் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் எஸ்.டி.பி.ஐ தங்களது பிரச்சாரத்தை இன்னும் வீரியமாக எடுத்துச்செல்வார்கள் என்று தெரிகிறது. பொருத்து இருந்து பார்போம்!
செய்தி:
முத்து
5 விமர்சனங்கள்:
ottrumai illatha islamirakal enna annal than enna
அன்பு சகோதரர்களே.. நாங்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தீவிர அனுதாபிகள் மற்ற இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்தாலும் கூட.
எங்கள் அனைவர்களின் விருப்பமும், துஆவும் அனைத்து முஸ்லிம் போட்டியாளர்களும் வெற்றிப்பெற்று சட்டசபை சென்று ஒற்றுமையாக சமுதாயத்திற்கு சேவை வேண்டும் என்பதே.
தங்களின் 2 போட்டியாளர்கள் மட்டுமே நமக்குள் போட்டியிட்டு யார் தோல்வி அடைந்தாலும் நமக்கு தான் கேட்ட பெயர்,எந்த அணியாக இருந்தாலும்.
நாங்கள் இறைவனிடம் இந்த 2 தொகுதியிலும் போட்டி வரக்கூடாது என்று துஆ கேட்டு அது நிறைவேறும் சமயம் தங்கள் "ராமநாதபுரம் தொகுதியிலும் சுயேட்சையாக ஃபைரோஸ் என்பவர் போட்டியிடுவார்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது மனதை மீண்டும் ஊசியால் குத்துவது போல உள்ளது.
மனதிற்கு மருந்திட முயற்சி செய்யுங்கள்.
ஜியாவுதீன், சவுதி அரேபியா.
விஜயகாந்த் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தங்களுக்கு சாதகமாக தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்று போர்க்கொடி தூக்கிய சமயத்தில் அதிமுக அவர்களை அழைத்து அவர்களுக்கு சாதகமான தொகுதிகளை வழங்கியதை நாம் அறிவோம்.
உண்மையிலேயே மமகவிற்கு சமுதாய அக்கறை இருந்திருந்தால் இராமநாதபுரத்தில் SDPi போட்டியிடுவதால் தங்களுக்கு வேறு தொகுதி வேண்டும் என்று மாற்றியிருக்க முடியும். ஆனால் அவர்களோ அதனை செய்தார்களா இல்லையே?
தமிழ்நாடு முழுவதும் தங்களுக்கு தொண்டர்கள் பலமுள்ள மமக வேறு தொகுதியை தேர்த்தெடுத்திருக்கலாமே.
98 ஆம்புலன்ஸ்களை கொண்டு சேவை செய்துவரும் தங்களது தாய்களகமான தமுமுக விற்கு ஆம்புலன்ஸ் உள்ள பகுதிகளில் சமுதாயம் உட்பட மாற்று மத நண்பர்களின் ஆதரவும் உள்ளதுதானே?
இது உண்மையானால் இவர்கள் ஜெயலலிதாவிடம் வேறு தொகுதியை கேட்டிருக்க வேண்டியதுதானே.
உண்மையிலேயே அக்கூட்டணியில் அவர்களுக்கு செல்வாக்கு இருந்திருந்தால் அவர்கள் Demand செய்து மாற்று தொகுதியை பெற்றிருப்பார்கள்.
வீட்டிற்குள் இருந்துகொண்டு பார்த்தால் வெளிச்சம் மட்டும்தான் தெரியும், ஆனால் வெளியே வந்து பார்த்தால்தான் தெரியும் வெளிச்சம் தரும் வானம் இவ்வளவு பெரியதா என்று.
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் போட்டியிடக்கூடிய தொகுதி இராமநாதபுரம், வாணியம்பாடி, ஆம்பூர் இதுபோன்றவை தான் என்று. இல்லை எராளமான தொகுதிகள் இருக்கின்றன.
இதற்கு முன்னர் எந்த முஸ்லிம் அரசியல் கட்சி அல்லது பிரதான அரசியல் கட்சிகள் பூம்புகார், தொண்டமுத்தூர், நிரவி திருப்பட்டினம், பாளையங்கோட்டை, கடையநல்லூர், தெற்கு திருப்பூர், துறைமுகம் இதுபோன்ற தொகுதிகளில் முஸ்லிம்களை வேட்பாளர்களாக அறிவித்ததுண்டா.
SDPI ஆறு தொகுதிகளை முதலில் அறிவித்த பின்னர் நேற்று பாளையங்கோட்டை, தெற்கு திருப்பூர், போன்ற தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்த காரணம்?
அத்தொகுதிகளை அதிமுக கூட்டணியில் உள்ள மமக கேட்டுப்பெறலாம் ஆகவே அதனை முன்னரே அவர்கள் அறிவிக்கவில்லை. (என்று நான் நினைக்கின்றேன்).
ஆனால் மமகவோ கூட்டணி என்ற போர்வையில் தொண்டர்கள் பலம் நிறைந்த மேலப்பாளையத்தை உள்ளடக்கிய பாளையங்கோட்டை மற்றும் தெற்கு திருப்பூரை கோட்டைக்குப் போகும் கனவோடு கோட்டை விட்டதேனோ!
முஸ்லிம்கள் நிறைந்த இத்தொகுதிகளில் முஸ்லிம்களின் பலத்தை காட்ட வேண்டும் என்பதை மனதில் வைத்து SDPI இத்தொகுதிகளை அறிவித்துள்ளது.
சகோதரர்களே 63 ஆண்டுகள் அரசியல் அதிகாரமின்மையால் அடிமை சேவகம் செய்துவந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளின் மத்தியில் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்ற என்ற லட்சிய வேட்கையோடு களமிறங்கியுள்ள நாம் ஒன்றிரண்டு ஆண்டுகள் பொறுமையோடு காத்திருந்து முஸ்லிம்களின் பலத்தை தனியாக காண்பித்து ஒரு புதுவித அரசியலை கொண்டுவருவதில் முயற்சி மேற்கொள்ளலாமே!
இராமநாதபுரத்தில் வாபஸ் பெற வேண்டும் என்று கூறும் சகோதரர்களுக்கு…
இராமநாதபுரத்தில் SDPI வாபஸ் பெற்றால் மற்ற தொகுதிகளில் மமக SDPI க்கு கூட்டணி தர்மத்தை மீறி அவர்களால் ஆதரவு தர முடியுமா?
அப்படி அவர்கள் ஆதரவு தருவதாக இருந்தால் அவர்கள் அக்கூட்டணியை விட்டு வெளியே வரவேண்டும். இது இயலாத ஒன்று.
SDPIயிடம் மட்டுமே இதுபோன்ற கோரிக்கைகளை வைக்கும் சகோதரர்கள் மமகவிடம் இராமநாதபுரத்த்தில் போட்டியிடாமல் வேறு தொகுதியை கேளுங்கள் என்று கூறியிருக்கலாமே.
SDPI போட்டியிடும் தொகுதிகள் மட்டும் முஸ்லிம்கள் நிறைந்த தொகுதிகள் அல்ல. இன்னும் பல தொகுதிகள் இருக்கின்றன.
என்னைப் பொறுத்தவரையில் இராமநாதபுரத்தில் அதிமுக கூட்டணியில் மமக அல்லாது வேறு யாரேனும் நின்றாலும் அவர்களுக்கு அதிமுகவின் ஓட்டு கிடைக்கத்தான் செய்யும். ஆகவே அந்தத் தொகுதியில் மமக போட்டியிட்டாலும் அவர்கள் அதிமுகவாகத்தான் பிரதிபலிப்பார்கள்.
உங்களுக்கு வெரி வேலையே இல்லையா? புத்தி இல்லாத சமுதாயம் ஆகி போனீர்களே..ஏற்கனவே மமக என்ற கட்சி தனித்து போட்டி இட்டு , நாம் பிரிந்து இருக்கிறோம் என காண்பித்து , 15 சீட்கள் கிடைக்கும் இடத்தில் வெறும் மொன்று சீடை வாங்கி கேவல படுத்தினார்கள்..இப்போது sdpi போட்டி இட்டு நம் சமுதாயத்தை கேவல படுத்த இருக்கிறார்கள்..இதற்குத்தான் சொல்கிறேன்.ஆவேசம் இருக்கும் நம்மிடம் அறிவு என்பதே இல்லை..மொத்தம் ஆறு இடத்தில் மனு கூட தாக்க தெரிய வில்லை எனினில் !!!!!!!!!!!!!!
ஆமா இவர்களுக்கு அறிவு இல்லை............அறிவு ஜீவிகளான சகோதரர்கள் சமுதாயத்தில் என்ன உறங்கி கொண்ட இருகிறீர்கள்.......இது உங்களுக்கு கேவலமாக தெரிகின்றது என்றால் என்ன பண்ண வேண்டுமோ அதை செய்ய வேண்டியது தானே..............எடுத்த எடுப்பிலே பிரதமர் ஆகணும் னா மன்மோகன் சிங்க் மருமகனா தான் இருக்கனும்.....கருத்துக்களுக்கு மட்டும் நாட்டில் குறைவே இல்லை....களத்தில் வந்து நின்றால் தான் என்ன நடக்கிறது என்று தெரியும் ....................
கருத்துரையிடுக