Você está em: Home
»
பெண்கள் நிகழ்ச்சி
» ஹேப்பி ஃபேமிலி! ஹேப்பி லைஃப்!
|
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட தலைவர் நஃபீஸா |
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக கடந்த ஞாயிற்றுகிழமை அன்று சென்னை மண்ணடியில் பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
"ஹேப்பி ஃபேமிலி! ஹேப்பி லைஃப்!"
"அன்பான குடும்பம்! நலாமான வாழ்வு" என்ற தலைப்பில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் வழிகாட்டி முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மா நில தலைவி சகோதரி நஃபீஸா அவர்கள் தலைமை தாங்கி நடத்தித் தந்தார். இன்றைய காலத்தில் சமூகத்தின் வளர்சிக்கு முக்கிய பங்கு ஆற்ற வேண்டியவர்களாக பெண்கள் இருக்கின்றனர். இன்று சமூகத்தினுடைய பிரச்சனையை சிறிதும் பொருட்படுத்தாமல், அதனை ஏறேடுத்தப்பார்காமல் எத்தனையோ குடும்பப் பெண்கள் டி.விகளில் நேரங்களை கழித்து வரும் இவ்வேளையில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்சியாக இந்த ஒரு நாள் முகாம் நடைபெற்றது.
|
நிகழ்சியில் கலந்து கொண்ட பெண்கள் |
இந்நிகழ்ச்சியில் சகோதரி ஜீனத் ஆலிமா அவர்கள் துவக்க உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரி சித்தி ஆலியா ஆலிமா அவர்கள் "இயக்கம்" என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இன்றைய காலச் சூழ்நிலையில் பெண்கள் சமூக முன்னேற்றத்திற்காக தன்னால் ஆன பங்கினை ஆற்ற வேண்டும் என்பது அவரின் உரையில் முக்கிய கருத்தாக இருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் அவர்கள் உரையாற்றும் போது பெண்கள் தங்களது குடும்ப வாழ்வியலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், தங்களின் கணவர்களிடத்திலும், குழந்தைகளிடத்திலும், அண்டை வீட்டுக்காரர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கிக் கூறினார். ஒரு நலமான குடும்பம் உருவாக நலமான வாழ்வை ஏற்படுத்துவது பெண்களின் கைகளில் தான் இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துக்கூறினார்.
|
மாநில செயற்குழு உறுப்பினர் சித்தி ஆலியா ஆலிமா (N.W.F) |
|
எஸ்.டி.பி.ஐ-ன் வடசென்னை மாவட்ட தலைவர் எஸ்.அமீர் ஹம்ஜா உரையாற்றுகிறார் |
அதன் பின் உரையாற்றிய சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தென் சென்னை மாவட்ட தலைவர் பி. முஹம்மது ஹூஸைன் உரை நிகழ்த்தினார். அரசியல் பற்றின விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு சென்னையிலிருந்து சுமார் 200 மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டனர்.
|
பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் உரையாற்றுகிறார் |
செய்தி:
முத்து
3 விமர்சனங்கள்:
Alhamdullilah Great
Allhamdullah......
ithu matiri Girls kana program mikavum mukkiyamanathu, Insha Allah mein melum ithu pondu neraya program nadaka Allah vidam nam dua seivom
by
Eruvadi PFI Sakotharan
கருத்துரையிடுக