புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

இந்திய முஸ்லிம்களுக்கு மறுக்கப்படும் நீதி!

1 மார்ச், 2011


அகமதாபாத்: சபர்மதி சிறைச்சாலையில் உள்ள சிறப்பு நீதி மன்றம் கோத்ரா வழக்கில் 11 நபர்களுக்கு மரண தண்டனையும், 20 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா ரயில் தீ வைத்து எரிக்கப்பபட்டது. இதில் எஸ்6 பெட்டி மட்டும் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 59 கரசேவர்கர்கள் கருகி இறந்தனர்.
இதன் தீர்ப்பை சபர்மதி சிறைச்சாலையில் உள்ள சிறப்பு நீதி மன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் 61 நபர்கள் நிரபராதி என்றும் 31 நபர்கள் குற்றவாளிகள் என்றும் குற்றவாளிகளின் தண்டனை விபரம் இன்று வெளியிடப்படும் என்று கூறி இருந்தது.


அதன் அடிப்படையில் இன்று வெளியிடப்பட்ட தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட 31 நபர்களில் 11 நபர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவம் ஒரு விபத்துதான் என்றும் இரயிலின் உள்ளிருந்து தான் தீப்பிடித்துள்ளது என்றும் வெளியில் இருந்து யாரும் நெருப்பு வைப்பதற்கு எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை என்று அரசாங்கத்தினாலேயே ஏற்படுத்தப்பட்ட கமிஷன்கள் கூறி இருக்கையில் இந்த தீர்ப்பு முஸ்லிம் சமூகத்தில் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த இனப்படுகொலையில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூரையாடப்பட்டது. இந்த சம்பவங்கள் நடைப்பெற்று 9 ஆண்டுகள் ஆகியும் அதன் அதிர்ச்சியிலிருந்தே மீழ முடியாமல் தவிக்கும் அப்பாவி மக்களுக்கு இந்த தீர்ப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
59 கரசேவகர்களை கொலை செய்ததால் மரண தண்டனை என்று கூறும் குஜராத் நீதி மன்றம், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்து, ஈவுஇரக்கமின்றி செயல்பட்ட இரத்த வெறி பிடித்த நரேந்திர மோடியையும், அவனுடையை கட்டளையை அப்படியே ஏற்று நடை முறைப்படுத்திய அனைத்து காவி பயங்கரவாதிகளுக்கு என்ன தண்டனை விதிக்கப்போகிறது?

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு "நீதி" என்பது எட்டாக் கனியாக மாறிக்கொண்டிருப்பது இத்தகைய தீர்ப்பின் மூலமாக தெளிவாக தெரிகிறது.



செய்தி: முத்து

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010