புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

வன்சாராவின் மற்றுமொரு போலி எண்கவுண்டர் வழக்கு!

31 மார்ச், 2011

அஹமதாபாத்: பணி இடை நீக்கம் செய்யப்பட்ட குஜராத் மாநில டி.ஐ.ஜி வன்சாரா குஜராத் மாநில உயர் நீதி மன்றத்தில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
போலி எண்கவுண்டர் வழக்கில் சிக்கி 4 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வன்சாரா
 குஜராத் மாநிலத்தில் டி.ஐ.ஜியாக பணிபுரிந்தவர் டி.ஜி. வன்சாரா சில வருடங்களுக்கு முன்னால் போலி எண்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு இன்று சபர்மதி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

பத்திரிக்கையாளர் கேத்தன் திரோட்கர்

 தற்போது குஜராத் மாநில உயர் நீதி மன்றத்தில் தான் சிக்கியுள்ள வழக்கில் மும்பை எண்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்  தயா நாயக் மற்றும் செய்தியாளர் கேத்தன் திரோட்கர் ஆகிய இருவரையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

ஷொராபுதீனின் போலி எண்கவுன்டர் வழக்கில் சிக்கி கடந்த 4 வருடங்களுக்கு மேலாக குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி சிறைச்சாலையில் வன்சாரா அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய் (29.03.2011) அன்று நீதிபதி எம்.ஆர்.ஷா முன்பு நாயக் மற்றும் திரோட்கர் ஆகிய இருவரையும் இவ்வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி அன்று பாவ் நகரில் வைத்து அஹமதாபாத் குற்றவியல் காவல்துறை அதிகாரிகளால் சாதிக் என்ற வாலிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அப்போது வன்சாரா அங்கே குற்றவியல் துறையில் துணை ஆணையராக பணி புரிந்து வந்தார்.

சாதிக் என்ற அந்த இளைஞரை எண்கவுண்டர் மூலம் சுட்டுக்கொன்று விட்டு அவர் லக்ஷர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தை சார்ந்தவர் என்றும், குஜராத் மா நில முதல்வர் நரேந்திர மோடி, விசுவ ஹிந்து பரிஷதின் தலைவர் பிரவீன் தொகாடியா, பி.ஜே.பியின் மூத்த தலைவர் அத்வானி ஆகியோரை கொல்ல வந்ததாகவும் அதனால் தான் சாதிக் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி கொடுத்தார்.


மும்பை எண்கவுண்டர் ஸ்பெஸலிஸ்ட் தயா நாயக்
காவல்துறை சாதிக் லக்ஷ்ர்-இ-தொய்பா இயக்கத்தைச் சார்ந்தவன் என்று கூறி இருந்தும்,  அவரை சுட்டுக்கொன்ற பிறகு மேற்கொண்டு எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமல் சாதிக் தொடர்பாக எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்று கூறி அத்தோடு அந்த வழக்கை முடித்தனர்.

ஆனால் அவருடைய சகோதரர் ஜமால் குஜராத் மா நில உயர் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் தனது சகோதரர் சாதிக் போலி எண்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வெண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


இந்த வழக்கின் செய்திகளை பார்க்கும்போது சாதிக் பாவ் நகரில் இருக்கும்போது ஏதோ சூதாட்டத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தனக்கு உதவ திரிகோடர் அனுகியதாகவும் தெரிகிறது. திரோட்கர் சாதிக்கை தயா நாயகிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதன் பின்னர் தான் சாதிக் வன்சாராவிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.

சாதிக்கின் சகோதரர் சபீர் தனது மனுவில் சாதிக்கை சுட்டுக்கொல்வதறகு முன்பாக காவல்துறை அதிகாரிகள் அஹமதாபாத்தில் உள்ள சஹிபக் என்னுமிடத்தில் பல நாட்களுக்கு தங்களது கஸ்டடியில் ஒரு பங்களாவில் அடைத்து வைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

சாதிக் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்த திரோட்கர் உறுதி மொழிப்பத்திரம் (அஃபிடவிட்) ஒன்றை அளித்திருந்தார். அதில் சாதிக் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தயா நாயக்தான் சாதிக்கை வன்சாராவிடம் ஒப்படைத்ததாக குறிப்பிட்டுள்ளார். திரோட்கர் கூறுவதும் குஜராத் மாநில காவல்துறை அதிகாரிகள் கூறுவதும் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. ஏனென்றால் குஜராத் காவல் துறை கூறும் போது பெருந்தலைவர்களை கொல்வதற்காக திட்டம் தீட்டியவன் என்றும், தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவன் என்றும் கூறுகிறது. ஆனால் திரோட்கர் கூறும் போது சாதிக் காவல்துறை கஸ்டடியில் வைத்துத்தான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறுகிறார்.
கடந்த செவ்வாய்கிழமை அன்று விசாரணைக்காக வந்த இவ்வழக்கில் வன்சாராவின் வழக்கறிஞர் கே.ஜே சேத்னா திரோட்கர் மற்றும் தயா நாயக் ஆகிய இருவரையும் இவ்வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

குஜராத்தில் அதிக அளவில் முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு போலி எண்கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி: முத்து



0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010