தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடிக்கத்துவங்கியுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியினரும் அறிவித்து வருகின்றது. இதில் எந்த கட்சி பெறும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று கூற இயலாத அளவிற்கு கடுமையான போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தி.மு.கவும் சரி ஆ.தி.மு.கவும் சரி தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
வழக்கம் போல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம்! அதை செய்வோம்! என்ற வாக்குறுதிகள் நின்றபாடில்லை. இதில் ஒரு படி மேலே போய் ஆளும் கட்சியினர் தங்களது தொலைகாட்சியில் தினமும் " சொன்னதும்! செய்ததும்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி வேறு. (சொல்லாத பல விஷயங்கள் நடந்துள்ளதே! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பெக்க்க்.....)
இந்த முறை தேர்தல் ஆணையம் என்னதான் பல விதிமுறைகளை விதித்தாலும், கெடுபிடிகள் பல அமைத்தாலும் அது என்னவோ ஆளும் கட்சியினருக்கு அது பொருட்டே அல்ல... வாக்காளர்களின் வேலுயு (மதிப்பு) ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் கூடத்தான் செய்கிறது. என்ன புரியவில்லையா? சென்ற தேர்தல்களில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் தான், ஆனால் இந்த முறை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுவிட்டது. இத்தேர்தலில் ஆளும் கட்சியினர் நமது துறைமுக தொகுதியில் ஓட்டுக்கு மூவாயிரம் என நிர்ணயித்துள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன.
எது எப்படியோ? வெறும் 3000 ரூபாயை வாங்கிக் கொண்டு 3000 கோடி ரூபாயை சுருட்டுவதற்கு எத்துனை வாக்காளர்கள் துனைபோக போகிறார்களோ தெரியவில்லை!
இது ஒரு புறம் இருக்க புதிதாக தேர்தலில் குதித்துள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியினருக்கு எதிராக பல விமர்சனங்களும், கேள்விகளும் வந்து கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.
துறைமுகம் தொகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். இவர்கள் போட்டியிடுவதால் முஸ்லிம்களின் வாக்குகள் பிரியப்போகிறதே ஒழிய வெற்றி கிடைக்கப்போவதில்லை என்ற ஒரு வாதம் தான் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
அப்படி நினைப்பவர்கள் தங்களுடைய கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும். இதனால் வரை துறைமுகம் தொகுதியை பொருத்தவரை தி.மு.க தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் தேர்தலுக்கு முன்பு வாக்கு சேகரிக்க வரும் பேராசிரியர் அன்பழகன் அதன் பிறகு தொகுதிக்குள் கால் எடுத்து வைத்ததில்லை.
சென்ற சட்டமன்ற தேர்தலில அவரை எதிர்த்து போட்டியிட்ட ம.தி.மு.க வேட்பாளர் சீமா பசீர் அவர்கள் குறைவான வாக்குகளில் தோல்வியடைந்தார். இதனை நன்கு அறிந்து கொண்ட தி.மு.க., இந்த முறை வெற்றி பெற இயலாது என்பதை அறிந்து கொண்டு அனபழகனாரை வில்லிவாக்கத்திற்கு அனுப்பி விட்டது. முன்னரே எஸ்.டி.பி.ஐ போட்டியிடும் தொகுதிகளை அறிவித்ததும், முஸ்லிம்களின் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முஸ்லிம் லீக்கிற்கு துறைமுகம் தொகுதியை ஒதுக்கியுள்ளது.

துறைமுகம் தொகுதி மக்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பதவிக்கு வராமலேயே செய்த சேவைகள் என்னென்ன என்பதை அறிவார்கள். குப்பைகளை சுத்தம் செய்வது, சாக்கடைகளை சுத்தம் செய்வது போன்ற பல பணிகளை தங்களது சொந்த செலவில் செய்து வந்துள்ளனர். இப்படி இருக்க எஸ்.டி.பி.ஐ முஸ்லிமை எதிர்த்து போட்டியிடுகின்றது என்ற வாதமே தவறானதாகும். ஆகையால் துறைமுகம் தொகுதி வாழ் மக்கள் அரசியல் மாற்றம் காண, துறைமுகம் தொகுதி வளர்ச்சியடைய செய்ய வேண்டிய ஒரே பணி, எஸ்.டி.பி.ஐற்கு வாக்களிப்பது மட்டுமே. அப்படி அவர்கள் செய்ய தவறினால் இன்னும் 5 ஆண்டு காலம் அவஸ்தை தான்.
செய்தி: முத்து
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக