புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

இஷ்ரத் ஜஹான் வழக்கு - 3 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்.

20 ஏப்ரல், 2011



காந்திநகர்: இஷ்ரத் ஜஹான் போலி எண்கவுண்டர் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குஜராத்தைச்சேர்ந்த 3 உயர் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கின் விசாரணையில் குறிக்கிடக்கூடாது என்ற அடிப்படையில் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
இடமாற்றம் செய்யபட்ட காவல்துறை அதிகார் ஜி.எல்.சிங்கால்
கடந்த 2004 ஆம் வருடம் இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 நபர்கள் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்டிருந்ததாகவும், இவர்கள் அனைவரும் பாகிஸ்தானைச்சேர்ந்த தீவிரவாத இயக்கமான லக்ஷ்ர்-இ-தொய்பா இயக்கத்தைச் சார்ந்தவர்கள் எனக்கூறி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள். கூடுதல் தலைமை காவல் துறை அதிகாரி பி.பி.பாண்டே, காவல் துறை கண்காணிப்பாளர் ஜி.எல்.சிங்கால், துணை கண்காணிப்பாளர் தருண் பாரோட் ஆகிய மூவரும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயர் நீதி மன்றம் இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணைக்குழுவை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னர் 2 தினங்கள் கழித்து உயர் நீதி மன்றம் இவ்வாறு இடமாற்றத்திற்கான உத்தரவை அறிவித்துள்ளது.
பாரோட் மற்றும் சிங்கால் ஆகிய இருவரும் இந்த கொலை எவ்வாறு நடந்தது என்பதை செயல் முறை மூலம் செய்து காட்டினர். இந்த வழக்கில் மேலும் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் டி.ஐ.ஜி. வன்சாராம் மற்றும் காவல்துறை அதிகாரியான அமீன் ஆகிய இருவரும் ஷொராபுதீன் போலி எண்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தன்னுடைய மகள் இஷ்ரத் ஜஹான் போலி எண்கவுண்டர் மூலம் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவளை சுட்டுக்கொன்ற குற்றவாளிகளை சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும், நியாயம் கிடைக்கவேண்டும் என்று கடுமையாக போராடி வருகிறார்.

இஷ்ரத் ஜஹான் எண்கவுண்டர், ஷொராபுதீன் ஷேக் எண்கவுண்டர், டெல்லி பாட்லா ஹவுஸ் எண்கவுண்டர் என முஸ்லிம்களுக்கு எதிரான போலி எண்கவுண்டர்களின் பட்டியில நீண்டு கொண்டே போகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு நீதி என்பது ஒரு எட்டாக்கனியாகவே விளங்கி வருகிறது.

நன்றி: TWO CIRCLES
தமிழில்: முத்து

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010