புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பாப்புலர் ஃப்ரண்டின் தேர்தல் பிரச்சார செய்தி

5 ஏப்ரல், 2011

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

நம் நாடு சுதந்திரமடைந்து 64 வருடங்கள் கழிந்து விட்டன். நம்மை விட்டு கன்டந்து சென்ற 64 வருடங்களும் முஸ்லிம் சமூகத்திற்கு மிகப்பெரிய படிப்பினையைக் கொடுத்துள்ளது. முஸ்லிம்கள் சுயமாகப் பெற்ற படிப்பினையோடு, பிரதமர் அவர்களால் முஸ்லிம்களின் நிலையை அறிய நியமிக்கப்பட்ட "சச்சார் கமிட்டி அறிக்கை" முஸ்லிம்களின் அவல நிலையை தெள்ளத் தெளிவாக படம்பிடித்துக் காட்டியது.


சச்சார் கமிட்டி குறிப்பிடுவனவற்றில் ஒன்றுதான் இந்தியாவில் முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட மக்களை விடவும் கீழான் நிலையில் இருக்கின்றனர். நம் நாட்டை ஆண்ட அரசியல் கட்சிகள்தான் இதற்கு காரணம். கடந்த 60 வருடங்களில் கட்சிகள் ஆட்சிகள் மாறி மாறி வந்தன. முஸ்லிம்களும் இக்கட்சிகளை ஆதரித்தனர். ஆனால் அனைத்துக்கட்சிகளும் முஸ்லிம்களை புறக்கணிப்பதில் மிகுந்த ஒற்றுமையுடன் செயல்பட்டன. இது நம்முடைய யூகமோ கணிப்போ அல்ல சச்சார் கமிட்டி கூறுவதன் சாராம்சமாகும்.

எனவே நாம் அரசியல் அறிவு பெறுவதும், அரசியலில் வலிமையடைய வேண்டியதும் காலத்தின் கட்டாயம் ஆகும். முஸ்லிம் சமூகம் சொந்தக் காலில் முன்னேறுவதற்கு அடித்தளம் அமைக்காமல் வழக்கம் போல் ஏதாவது ஒரு கட்சியை ஆதரித்து வந்தால் நிலைமை இன்னும் மோசமாகும் அபாயமுள்ளது. இதையெல்லாம் கவனத்திற் கொண்டே, முஸ்லிம்களை எல்லாத் துறைகளிலும் வலிமைபடுத்துதல் என்ற இலட்சியத்துடன் அகில இந்திய அளவில் சுமார் 18 மாநிலங்களில் கால் பதித்து, வியாபித்திருக்கும் முன்னோடி சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளப்பரிய முயற்சியை நாடுமுழுவதும் மேற்கொண்டது.

இதன் அடிப்படையில் 2009ல் கோழிக்கோடு கடற்கரை பெருவெளியில் இந்திய முஸ்லிம்களின் சங்கமமாக தேசிய அளவில் அரசியல் மாநாடு நடந்தது. மாநாட்டின் பேரெழுச்சியின் மூலமாக, வஞ்சிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அவனியில் வந்ததே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) அரசியல் கட்சி. அல்ஹம்துலில்லாஹ். புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ்.டி.பி.ஐ இந்தியாவில் 20 மாநிலங்களில் வேர் பிடித்து வளர்ந்து வருகின்றது. இக்குறுகிய காலத்திலேயே கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு குறிப்பிடத்தகுந்த வெற்றியையும் பெற்றிருக்கின்றது. முஸ்லிம் சமூகம் அரசியலில் வலிமையடைய நாம் எஸ்.டி.பி.ஐ யை அங்கீகரித்து, ஆதரித்து கடுமையாக பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம். இது நாம் எழுச்சி பெறுவதற்குரிய சரியான தருணம்.

எனவே முஸ்லிம் சமூகம் தேசிய அளவில் அரசியல் தலைமையையும், அரசியல் வலிமையையும் உருவாக்கியே தீர வேண்டும். இந்த உன்னத லட்சியத்துடனேயே எஸ்.டி.பி.ஐ இந்தியா முழுவதும் பாடுபட்டு கொண்டிருக்கின்றது. நடப்பு தேர்தலில் நம் தமிழ் நாடு, புதுச்சேரி, கேரளாம், மேற்கு வங்காளம், ஆகிய மாநிலங்களில் தனித்து களம் காண்கின்றது. நாம் இந்த லட்சியத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் உங்களுடைய ஆதரவு மிக மிக முக்கியம். இதில் விளைவுகளைப் பற்றியோ, எதிரிகள் நீண்ட காலமாக நம் மீது உபயோகித்து வரும் குதந்திரங்களைக் கண்டோ நாம் பயப்படத் தேவையில்லை. அதை முறியடிக்க நம்மால் முடியும் இன்ஷா அல்லாஹ். ஓர் எளிய உதாரணம்தான் "தண்ணீரில் இறங்காமல் நீந்தக் கற்க முடியாது". எனவே புரட்சிகரமான அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டுமானால் நாம் களம் காண வேண்டும். இந்த உரிய எண்ணத்திலேயே எஸ்.டி.பி.ஐ உங்கள் தொகுதியில் தனித்து போட்டியிடுகின்றது. உங்கள் வீடு தேடி வந்திருக்கின்றது. ஆதரிப்பீர்! மாற்றத்திற்கான வித்தாக உங்களுடைய வாக்கைப் பயன்படுத்துவீர்!

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010