புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

மாலிகன் குண்டு வெடிப்பு வழக்கில் அவசர கதியில் குற்றபபத்திரிகை தாக்கல் செய்த தீவிரவாத எதிர்ப்பு படை

22 ஏப்ரல், 2011


2008 மாலிகான் வெடிகுண்டு வழக்கை NIA விடம் மத்திய அரசு ஒப்படைத்த பின்பும் தீவிரவாத எதிர்ப்பு படை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்ட்ட பிரவீன் முத்தாலிக் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
குற்றப்பத்திரிகையில் பிரவீன் முத்தாலிக் தான் பைக்கில் வெடிகுண்டு வைத்தார் எனவும், அபினவ் பாரத் என்ற அமைப்பின் மூலம் இந்தியாவில் ஹிந்து ராஷ்ட்ரா ஏற்படுத்த திட்டமிட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் தங்கள் எண்ணத்திற்கு எதிராக இருக்கும் சில RSS உறுப்பினர்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளார்கள் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் போன்ஸ்லா ராணுவ பள்ளியில் கைது செய்யப்பட்ட புரோகித் உதவியால் குண்டு தயாரிக்கும் நுணுக்கத்தை கற்றுள்ளார்கள். 2003 லிருந்து பல்வேறு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்கள் என்று குற்றப்பத்திரிகை கூறுகிறது.

இந்த குற்றப்பத்திரிகை சில RSS உறுப்பினர்கள் முத்தாலிக்கிற்கு எதிரான சிந்தனையுடையவர்கள் என்று குறிப்பிடுவதன் மூலம் RSS ல் பல உறுப்பினர்கள் ஹிந்து ராஷ்ட்ரா அமைத்திட வேண்டும் என்ற இலக்கோடு செயல்படுவதை நிரூபிக்கிறது. இத்தகைய ஜனநாயக மற்றும் தேச விரோத கொள்கையை கொண்ட அமைப்பிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டி வருவது பொது மக்களிடையே அதிர்ப்தி நிகழ்கிறது. மேலும் தீவிரவாதிகள் போன்ஸ்லா ராணுவ பள்ளியில் வெடிகுண்டுகள் தயாரிக்க கற்றுள்ளார்கள். இத்தகைய பள்ளி மீது அரசு எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறது என்பதும் கேள்விக்குறியே. மேலும் NIA வழக்கை விசாரித்து வரும் வேளையில் தீவிரவாத எதிர்ப்பு படை அவசர கதியில் ஒரு கூடுதல் குற்றப்பத்திரி
கை தாக்கல் செய்வது இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஆழமான விஷயங்களை வெளியே கொண்டு வர தடையாக இருக்கும் என்று மக்கள் கருத காரணமாக உள்ளது.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010