புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

தமிழ முஸ்லிம்களுக்கு ஆப்பு வைக்கப்போவது யார்? அம்மாவா? ஐயாவா?

29 ஏப்ரல், 2011

கடந்த 13ஆம் தேதி நடந்த தமிழ சட்டமன்றத்தேர்தலுக்கான தீர்ப்பு வெளிவர இன்னும் சரியாக 15 நாட்களே உள்ள நிலையில் வருகின்ற ஐந்து ஆண்டு காலம் யார் தமிழகத்தை ஆளப்போகிறார்கள் என்பதை அறிய மக்கள் மத்தியில் ஆவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட பல சர்வேக்களின் முடிவுகளை பார்க்கும்போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையப்போகிறது என்றும், கூட்டணி கட்சிகள் உடையப்போகிறது என்றும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்ற நிலை ஏற்படப் போகிறது என வெவ்வேறு கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


தேர்தலுக்கு முன்பாக முஸ்லிம் வாக்காளர்களின் ஓட்டு யாருக்கு அதிகமாக விழப்போகிறது? என்பதை யாராலும் கணிக்கமுடியாது சூழ்நிலைதான் இருந்தது. இவ்வாறு இருந்த போதிலும் தி.மு.க வும் சரி ஆ.இ.ஆ.தி.மு.க வும் சரி முஸ்லிம்களின் ஓட்டை அதிக அளவில் தாங்களும் தங்களது கூட்டணிக்கட்சிகளும் பெற்றுவிட்டதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.


ஜெயலலிதாவுடன் த.மு.மு.க நிர்வாகிகள்

தமிழகத்தில் 7% சதவிகிதம் மக்கள் தொகையில் இருக்கும் முஸ்லிம்களுக்கு கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரில் யார் முஸ்லிம்களுக்கு நல்லது செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி அதிக அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

திமுக கூட்டணிக்கட்சிகள் வெற்றி பெற்றால் தான் முஸ்லிம்களுக்கு நல்லது என பல பேர் கருத்து தெரிவித்துள்ளார்கள். பாரம்பரியமாக முஸ்லிம்கள் திமுகவின் ஓட்டு வங்கியாகத்தான் இருந்து வருகிறது. இதற்கு காரணம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆரம்பம் முதற்கொண்டு திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டுவருவதால்தான் என கருத்துக்கள் நிலவுகிறது. ஆனால் இந்த முறை முஸ்லிம் லீக்கிற்கு வெறும் 3 சீட்கள் தான் ஒதுக்கப்பட்டது அதுவும் தங்களுடைய சொந்த சின்னத்தில் இல்லாமல் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட முடிந்தது.

சென்னையைச்சேர்ந்த பிரப்ல எழுத்தாளர் ஷஃபீக் அகமது கூறும்போது திமுகவைதான் முஸ்லிம்களின் தோழமை கட்சியாக மக்கள் பார்க்கிறார்கள் எனக்கூறினார். திமுக அரசாங்கம்தான் தமிழகத்தில் தங்களின் ஆட்சியின் போது முதன் முதலாக முஸ்லிம்களுக்கு 3.5% சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கியது. மேலும் தாங்கள் மீண்டும் ஆட்சிக்குவந்தால் அதை 5% சதவிகிதமாக உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்தனர். மேலும் திமுக அரசாங்கம்தான் உருது மொழிக்காக கல்விக்கழகத்தை உருவாக்கியுள்ளது. மேலும் மதத்தை பின்பற்றுவதற்குண்டான சுதந்திரம் என்று வரும்பொழுது திமுக ஆட்சியின் போது தான் தங்களுக்கு தடைகள் இல்லை என கருதுவதாக ஷஃபீக் அகமது தெரிவித்தார்.

இன்னொரு பக்கம் ஆஇஆதிமுகவை பார்க்கும்போது ஜெயலலிதாவை பிரம்மனிஸ கொள்கை உடையவராகத்தான் முஸ்லிம்களால் பார்க்கப்படுகிறார். இதற்குக் காரணம் கடந்த காலங்களில் பாபரி மஸ்ஜித் இடிப்பின்போது கரசேவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததும், மதமாற்றத்தடை சட்டம் கொண்டு வந்தது போன்ற பல விஷயங்கள் உண்டு.



கருணாநிதியுடன் முஸ்லிம் லீக் பேராசிரியர் காதர் முஹைதீன்

இந்த இரு அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு துரோகம் விளைவிக்கக்கூடியது தான் எனவும், வேறு வழியில்லை இவர்களில் யார் முஸ்லிம்களுக்கு குறைந்த அளவில் தீங்கு இழைப்பவர்கள் என்பதை கருத்தில் கொண்டு அவர்களை வெற்றிபெற வைக்கவேண்டும் என்ற எண்ணமும் பெரும்பாலான மக்கள் மத்தியில் இருக்கின்றது. இதில் அதிகமான மக்கள் திமுக ஆட்சிக்கு வருவது தான் சிறந்தது என கருதுகிறார்கள்.
அதேபோன்று முஸ்லிம் சமூகத்தின் சில பிரதிநிதிகள் ஜெயலலிதாவுடனான இதனால் வரை இருந்த தொடர்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக்கருதினர். முஸ்லிம்களுக்கு சாதகமாக ஜெயலலிதா செயல்படுவார் என அவர்கள் கருதுகிறார்கள்.இதன் அடிப்படையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (த.மு.மு.க) தி.மு.க வுடனான தங்களது உறவை துண்டித்துவிட்டு இந்த முறை ஆ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது.

ஆ.தி.மு.கவினால் மட்டுமே முஸ்லிம்களுக்கான உண்மையான வலிமையை ஏற்படுத்தி கொடுக்கமுடியும்! ஏனென்றால் ஆ.தி.மு.கமட்டுமே தங்களோடு கூட்டணி வைத்த முஸ்லிம் கட்சிகளுக்கு தங்களுடைய சொந்த சின்னத்தில் போட்டியிட அதிகாரம் வழங்கியது, ஆனால் தி.மு.க கட்சியோ அப்படி செய்யாமல் தங்களுடைய சின்னமான உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என முஸ்லிம் லீக்கை நிர்பந்தித்தது என த.மு.மு.கவின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.
சமீப காலங்களில் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்த தி.மு.க அரசாங்கத்தின் போக்கை கருத்தில் கொண்டு முஸ்லிம்களுக்கு 5% சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஜெயலலிதா முன் வந்துள்ளதாக பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார். மேலும் தி.மு.கவின் ஆட்சிக்காலத்தில் தான் அதிக அளவில் தமிழகத்தில் மதக்கலவரம் நடந்துள்ளது எனவும் தி.மு.க அரசாங்கம் சிறுபான்மை மக்களை காப்பதில் தவறிழைத்துவிட்டது என ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.

மேலும் தி.மு.கவின் தேர்தல் அறிக்கைகளைப்பற்றி குற்றம்சாட்டிய ஜவாஹிருல்லாஹ் "தி.மு.கவினால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் வெறும் விளம்பரங்கள்தான், அவைகளை அவர்களால் நடைமுறைப்படுத்த முடியாது!" எனக்கூறினார்.

அப்படியென்றால் கடந்த காலங்களில் ஜெயலலிதாவின் சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தவைகளை என்ன செய்வது? என்று கேட்கலாம், ஒவ்வொருவரும் தங்களுடைய கடந்த காலங்களின் செயல்பாட்டின் மூலமாக படிப்பினை பெறுவார்கள் அதே போன்று தான் ஜெயலலிதாவும், நாம் ஒரு முறை அவருக்கு வாய்பளிக்கவேண்டும் என ஜவாஹிருல்லாஹ் கேட்டுக்கொண்டார்.


தி.மு.க மற்றும் ஆ.தி.மு.க இந்த இரு கட்சிகளை விட்டால் வேறு மாற்று கட்சியில்லை என்ற ஒரே காரணத்தினால் தான் மாறி மாறி இவர்களையே ஆதரவு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலைதான் தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது. இவ்விரு கட்சிகளுமே முஸ்லிம்களுக்கு துரோகம் இழைப்பதில் சலைத்தவர்கள் அல்ல என்பது நாடறிந்த உண்மை. இருந்த போதிலும் வேறு வழியில்லை என்ற காரணம்தான் உண்மை.

முஸ்லிம்களை வெகு சுலபமாக கவிழ்த்த இவ்விரு கட்சிகளும் உபயோகிக்கும் வார்த்தை தான் "இட ஒதுக்கீடு" என்பது. 3.5% கொடுத்துள்ளோம், இனி 5% கொடுப்போம் ஆகையால் எங்களுக்கு ஆதரவளியுங்கள் என கேட்டால் போது உடனே ஓடிச்சென்று அவர்களை ஆதரித்துவிடுவது முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது.


கேட்காமலேயே முஸ்லிம்களுக்கு தங்களுடைய சதவிகிதத்திற்கு அதிகமாக சிறைச்சாலையிலே இடஒதுக்கீடு கிடைத்துள்ளதே! கூட்டணிப்பற்றி பேசும் போது ஏன் எந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதைப்பற்றி கோரிக்கை வைக்கவில்லை? என்பது தான் வேதனையான விஷயம்.

ஒட்டுமொத்தத்தில் இவ்விரு கட்சிகளாலும் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு நன்மையும் வந்தடயப்போவதில்லை என்பது தான் நிதர்சனாமன உண்மை. நம்முடைய இந்த கட்டுரையின் தலைப்பில் ஒரு சிறு மாற்றம், " முஸ்லிம்களுக்கு குறைவாக ஆப்பு வைக்கப்போவது யார்? அம்மாவா? ஐயாவா? யார் என்பது இன்னும் 15 நாட்களில் தெரிந்து விடும்.


கட்டுரை: முத்து


0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010