துறைமுகம் தொகுதியில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டம் எஸ்.டி.பி.ஐ சார்பாக கடந்த சனிக்கிழமை அன்று 09.4.2011 அன்று மண்ணடி தம்புசெட்டித்தெருவில் வைத்து நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்டின் மா நில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் உரையாற்றுகிறார் |
சென்னை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர் முஹம்மது நாஜிம் உரையாற்றுகிறார் |
இப்பொதுக்கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட தலைவர் சகோதரர் அமீர் ஹம்ஜா அவர்கள் தலைமை தாங்கி நடத்தித்தந்தார். தேர்தல் பணிக்குழுவின் தலைவர் சகோதரர் அஹமது ஃபக்ருதீன், காஞ்சி மாவட்ட தலைவர் சகோதரர் பிலால், துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான், வட சென்னை மாவட்ட செயலாளர் கரீம், வடசென்னை மாவட்ட பொருளால ராயல் கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்டத்தின் செயலாளர் சகோதர இஸ்மாயில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இப்பொதுக்கூட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் கே.எஸ். செய்யது இபுராஹிம் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் இன்றய அரசியல் வாதிகளின் அட்டூழியங்களையும், ஊழல்களையும் பற்றி விரிவாக பேசினார். மத்தியில் காங்கிரஸ் கட்சி மற்றும் பா.ஜ.கவும், மாநிலத்தில் இரு திராவிட கட்சிகளும் கொள்கையின்றி மாறி மாறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த கட்சிகளை விட்டால் வேறு வழி இல்லை என்ற நிலையை மாற்றுவதற்காகத்தான் எஸ்.டி.பி.ஐ தேசிய அளவில் ஒரு மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது என்று கூறினார். எஸ்.டி.பி.ஐன் தோற்றம் ஏக்கம் கொண்டிருந்த மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது என்றும் ஆகையால தான் சென்ற காலங்களில் வெவ்வேறு மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எந்த ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்காமல் தனித்து களம் இறங்கி கணிசமான வெற்றிகளை பெற்றுள்ளது என்று கூறினார். கேரளாவில் வெற்றி பெற்றுவிட்டோம், கர்நாடகாவில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று மிதப்பில் இருந்து விடக்கூடாது, தமிழகத்தில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகமானது ஆகவே வெற்றிக்காக கடுமையாக உழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இப்பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் பாப்புலர் ஃப்ரண்டின் தேர்தல் நிலைபாட்டை தெளிவாக எடுத்துரைத்தார். எஸ்.டி.பி.ஐ போட்டியிடும் 7 தொகுதிகளிலும் பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் கடுமையாக உழைப்பார்கள் என்று கூறினார்.
மேலும் துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் திருப்பூர் அல்தாஃபின் நிலையை தெளிவாக எடுத்துக்கூறி மக்கள் அல்தாஃப் ஆதரிக்கக்கூடாது என்று கூறினார். சில வருடங்களுக்கு முன்னால் கருணாநிதி மதவாத கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த போது அப்போது அவர்களுடன் இருந்த அனைத்து முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் லீக் உட்பட தி.மு.க வை விட்டு வெளியேறியது, அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிலிருந்து தமிழ் மாநில முஸ்லிம் லீக் என்று பிரித்து கருணாநிதியோடு ஒட்டி உரையாடிவர் தான் இந்த திருப்பூர் அல்தாஃப். அப்பேற்பட்ட அல்தாஃபிற்கு நன்றி கடன் பட்டவராகத்தான் தற்போது துறைமுகம் தொகுதியை அல்தாஃபிற்கு ஒதுக்கியுள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் துரோகம் இழைத்த இந்த திருப்பூர் அல்தாஃபிற்கு ஒரு போது ஆதரவு அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் இன்னொரு பக்கம் போட்டியிடும் ஆ.இ.ஆ.தி.மு.கவையும் ஆதரிக்கக்கூடாது என்று பேசினார், காரணம் முஸ்லிம் சமூகத்திற்கு தொடர்ந்து எதிரியாக செயல்பட்டுக்கொண்டு தேர்தல் நேரத்தில் மட்டும் ஆசை வார்த்தைகளை கூறும் ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்த நரேந்திர மோடியை தனது வீட்டிற்கு வரவழைத்து விருந்து அளித்ததும், பாபரி மஸ்ஜித் இடிப்பதற்கு கரசேவர்களை அனுப்பிய இந்த ஜெயலலிதாவும் ஒரு போதும் முஸ்லிம் சமூகத்திற்கு நல்லது செய்துவிடமாட்டார்கள், எனவே இந்த நிலை மாற எஸ்.டி.பி.ஐன் வேட்பளர் பி. முஹம்மது ஹூஸைனிற்கு மெழுகுவர்த்திகள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். மேலும் பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் சிறப்புரை ஆற்றினார்.
இறுதியாக உரையாற்றிய துறைமுக தொகுதி வேட்பாளர் அவர்கள் கூறும் போது எஸ்.டி.பி.ஐ-ன் இந்த உழைப்பிற்கு கண்டிப்பாக எதிர்காலம் இருக்கிறது. மக்கள் சேவையே ஒரே குறிக்கோள். இறைவன் நாடினால் வெற்றி பெறுவோம். வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி தங்களுடைய சமூக பணிகள் தொடரும் என்று கூறினார். தென்சென்னை மாவட்டத்தின் பொருளாளர் சகோதரர் ரிபாய் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: முத்து
நிகழ்ச்சியில கலந்து கொண்ட பொதுமக்கள் |
1 விமர்சனங்கள்:
if ALLAH say "KUN" no body can change this,best example Kerala Anas victory in panchayat election
கருத்துரையிடுக