பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 2 மாதங்களாக பள்ளி செல்வோம் பிரச்சாரத்தை தேசிய அளவில் மேற்கொண்டது. இதனை தொடர்ந்து 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவர்கள் தங்களின் உயர் கல்வியினை தொடர கல்வி உதவி தொகை வழங்க உள்ளது. வரும் கல்வி ஆண்டான 2011-2012ல் கல்லூரியில் சேர உள்ள மாணவர்கள் விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு பாப்புலர் ஃப்ரண்ட் மாணவர்களை கேட்டுக்கொள்கிறது.
இந்த கல்வி தொகை ஒரு வட்டியில்லாத கடனுதவியாகும். எனவே இந்த உதவியை பெறும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலை கிடைத்த பின்பு அல்லது படிப்பு முடிந்த 2 வருடங்கள் - இதில் எது முந்தியதோ, அந்த காலத்திலிருந்து எளிய தவனையில் திரும்ப செலுத்த வேண்டும். இதன் மூலம் இந்த தொகை மீண்டும் பிற மாணவர்களுக்கு திரும்ப வழங்குவது மட்டுமில்லாமல் அதிகமான மாணவர்கள் பயனடையவும் வழிவகை செய்யும்.
இந்த கல்வி உதவித்தொகையினை பெற 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு குறைந்தது 2 வருடங்கள் படிக்க வேண்டிய உயர் கல்வியை தொடர விரும்பும் ஏழை மாணவர்கள் யாவரும் விண்ணப்பிக்கலாம். தனியார் மற்றும் அரசு உதவி பெறாத கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். இவ்வருடம் இந்த கல்வி உதவி தொகை டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், மணிப்பூர், ஆந்திரா பிரதேஷ், கர்நாடகா, மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை சார்ந்த மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கீழே குறிப்பிட்டுள்ள அலுவலகங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் மாநில ஒருங்கிணைப்பாளர்களிடம் கிடைக்க பெற செய்ய வேண்டும்
விண்ணப்பங்கள் பெற இறுதி தேதி - 20 ஜீலை 2011.
Slno | State | Address |
1 | Delhi | G-66, 2nd Floor, Shaheen Bagh, Kalindikunj, Noida Rd, New Delhi – 110025 |
2 | Haryana | G-66, 2nd Floor, Shaheen Bagh, Kalindikunj, Noida Rd, New Delhi – 110025 |
3 | Rajasthan | 256, Near PNB Muslim school, Moti Doongri Road, Jaipur, Rajasthan |
4 | West Bengal | Kalikapur Station Road, Benia Bow, Sonarpur, South 24 PGS, West Bengal |
5 | Manipur | Lilong Lamkhai Masjid Road, Thoubal District, Manipur |
6 | Andhra Pradesh | No 56-88-C-4, Khander Street Fort, Kurnool, Andhra Pradesh |
7 | Karnataka | No. 5, SK Garden, Benson Town, Bangalore, Karnataka |
8 | Tamilnadu | 184/229, 2nd floor, Linghi Chetty street, Mannady, Chennai |
9 | Kerala | Unity House, Rajaji Road, Calicut, Kerala |
விண்ணப்பங்களை டவுன்லோடு செய்ய கிளிக் செய்ய வேண்டும்.
மேலே குறிப்பி்ட்ட அலுவலகங்களிலும் விண்ண்பங்கள் கிடைக்கும்.
இவ்வருடம் 24 லட்ச ரூபாய் இந்த கல்வி உதவி தொகை வழங்கப்படும். வரும் காலங்களில் தனவந்தர்கள் உதவியுடன் மேலும் அதிகரிக்கப்படும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொது செயலாளர் கே.எம் ஷரீஃப் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக