
பிப்ரவரி 17ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்க்கப்பட்ட தினம் என்ற அடிபப்டையில் ஒவ்வொரு வருடமும் அத்தேதியை "பாப்புலர் ஃப்ரண்ட் தினம்" என்று கொண்டாட வேண்டும் என்ற தேசிய செயற்குழுவின் தீர்மானத்தின்படி அகில இந்திய அளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 17ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொடியேற்று நிகழ்ச்சி நடத்துவது எனவும், காஞ்சிபுரம், திருச்சி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மண்டல அளவில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் (யூனிட்டி மார்ச்) என்ற அடிப்படையில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு மக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக