தொடுபுழா நியுமேன் கல்லூரியின் பேராசிரியர் ஜோசஃபின் கை வெட்டப்பட்ட வழக்கு ஒரு வருட காலமாகியும், இது நாள் வரை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லை என்றும், இந்த கை வெட்டு சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கம் தான் காரணம் என்று மேற்கத்திய ஊடகங்களுக்கு கொஞ்சம் கூட சலைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் அல்ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்ற வருடம் ஜூன் மாதம் தொடுபுழாவில் உள்ள நியுமேன் கல்லூரியின் பேராசிரியர் சர்ச்சைக்குரிய வினாத்தாளை தயாரித்துள்ளார். அந்த வினாத்தாளில் முஸ்லிம்கள் தங்களுடைய உயிரை விட புனிதமாக கருதும் அவர்களுடைய இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை இழிவு படுத்தி கேள்விகளை வெளியிட்டிருந்தார். இந்த கேள்வித்தாளை தயாரிக்கும் முன்பே பலரிடம் இருந்தும் கடுமையான எதிர்ப்பு இருந்தும் எதனையும் கண்டு கொள்ளாமல் அந்த வினாத்தாளை வெளியிட்டார். அந்த கேள்வியினை படிக்கும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளமும் கோபம் கொள்ளும் அளவிற்கு அந்த வினாத்தாள் அமைந்திருந்தது.
முஸ்லிம்கள் எத்தனையோ போராட்டங்கள் பல நடத்தியும் முஸ்லிம்களின் தலைவரான முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியத்தற்காக அவர் மீது வெறுமனே வழக்கு மட்டும் பதிவு செய்து விட்டு வெகுசீக்கிரமே அவரை சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்தது கேரளா அரசாங்கம்.
ஜோசஃபின் மீது கடும் கோபம் கொண்ட சிலர் ஒரு ஞாயிற்றுகிழமை குடும்பத்தாருடன் சர்சுக்கு சென்றுவிட்டு திரும்பும் வேலையில் அவரது வலது கை வெட்டப்பட்டது. ஆனால் எந்த ஒரு ஆதாரமும் இன்றி இந்த செயலை செய்தவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பைச்சாரந்தவர்கள் தான் என்றும், கேரள மக்கள் அனைவரும் பீதிக்குள்ளாக்கும் வகையில் கற்பனையான தகவல்களை நாடு முழுவது பரப்பியது. பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கம் என்பது ஒரு தீவிரவாத இயக்கம் என்னும் அளவிற்கு பொய் பிரச்சாரங்கள் நாடு முழுவதும் பரவியது.
தற்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு தேசிய அளவிலான இயக்கம் என்பதால் இதனுடைய வளர்ச்சிக்கு முட்டு கட்டை போட வேண்டும் என்ற எண்ணத்தில் மீடியாக்களும், அரசாங்கமும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் வரிசையில் அல்ஜஸீரா தொலைக்காட்சியும் இணைந்துள்ளது. ஜோசஃப்பிற்கு இது நாள் வரைக்கும் நீதி கிடைக்கவில்லை என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்றும் செய்தி தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக அல்ஜஸீரா வெளியிட்ட வீடியோ காட்சி, வாசகர்களின் பார்வைக்காக!

1 விமர்சனங்கள்:
media terrarism
கருத்துரையிடுக