சமீபத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருந்தது. திருக்குர்ஆன் பற்றிய செய்தியாக இருந்ததால் ஆர்வமுடன் அதை படிக்க ஆயத்தமானேன். அதில் குர்ஆனில் மொத்தம் எத்தனை சூராக்கள், எத்தனை வசனங்கள், இந்த பெயர் எத்தனை முறை இடம்பெற்றுள்ளது, போன்ற தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் மிகவும் வேதனை அடைய வேண்டிய விஷயம் என்னவென்றால் பலரும் ஒரு உண்மையை உணராமல் தவறான பிரச்சாரத்தால் கவரப்பட்டு தனக்கு கிடைத்த செய்தி உண்மையா? என்றுகூட ஆராயாமல் அப்படியே பிறருக்கும் அதை அனுப்பி வைக்கிறார்கள்.
இன்றைக்கு எந்த ஒரு முஸ்லிமிடம் ஒரு கேள்வியை கேட்டால் உடனே பதில் வரும். அந்த கேள்வி தான் மொத்தம் குர்ஆனில் எத்தனை வசனங்கள்? என்று உடனே பதில் கிடைக்கும் "6666" என்று. இது உண்மையா? பொய்யா? என்பது கூட அவர்களுக்கு தெரியாது. காரணம் அதைப் பற்றி ஆராயவேண்டும் என்ற எண்ணம் பலருக்கு உதிப்பதில்லை.
சமீபத்தில் ஒரு மதரஸாவினுடைய ஆண்டு விழா நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கே மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதிலும் ஆசிரியர் ஒருவர் மாணவரிடம் இதே கேள்வியை கேட்க, மாணவனும் சற்று கூட சிந்திக்காமல் "6666" வசனங்கள் என்று பதிலளித்தான். அதற்கு அந்த ஆசிரியர் அந்த மாணவனின் பதிலைக்கேட்டு பாராட்டுகிறார்.
ஒரு மார்க்கல்வியை கற்றுக்கொடுக்கும் பாடசாலையிலேயே இப்பேற்பட்ட நிலைதான் என்றால் சாதாரண மார்க்க அறிவு இல்லாத ஒருவரின் நிலை எவ்வாறு இருக்கும்? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அன்று என்னோடு தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியை கண்ட என் குடும்பத்தார்களிடம் இந்த செய்தியை தெரிவித்த போதுதான் அன்று தான் அவர்களே உணர்ந்தார்கள்.
குர்ஆனில் மொத்த வசனங்கள் "6666" என்பது தவறாகும். எப்படி இப்பேற்பட்ட ஒரு பொய்யான தகவல்கள் பரவுகிறது? இப்பேற்பட்ட பொய்யான தகவல் யாரால் உருவாக்கப்பட்டது என்பதை விளக்கிக்கூற கடமைப்பட்டுள்ளேன்.
இது கிருத்தவ மிஷனரிகளால் பரப்பப்பட்ட ஒரு பொய்யான தகவலாகும். அறியாமையின் காரணமாக முஸ்லிம்களில் பலரும் இதையே பரப்பி வருகின்றனர். பல இணையதளங்களில் பார்க்கும் போது கூட இப்பேற்பட்ட தவறான பதில்கள் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் கூட நான் மேற்கூறியவாறு குர்ஆனில் மொத்தம் "6666" வசனங்கள் என்று கூறப்பட்டு வருகிறது.
கிருத்தவ மத சாஸ்திரப்படி பைபிளில் தஜ்ஜாலின் குறியீடாக "666" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை குர்ஆனோடு தொடர்பு படுத்தி நமது நபிகள் நாயகத்தை தஜ்ஜாலாக ( நவூதுபில்லாஹ்!) அந்தி கிருஸ்துவாக பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவ்வாறான தவறான செய்திகளை பர்ப்பி உள்ளனர்.
இது சம்பந்தமாக கிருத்தவர்களை நாம் நம்முடைய கேள்விகளை கொண்டு வெகு சுலபமாக வீழ்த்தலாம்...
1. கிருத்தவர்களில் பெந்தகோஸ்தே பிரிவினர் தங்களுடைய புனித பைபிளில் 66 புத்தகங்கள் தான் கடவுளின் வார்த்தையாக நம்புகின்றனர். கிருத்தவர்கள் "6666" அந்திகிருஸ்துவோடு இணைக்கும்போது ஏன் "66" புத்தகங்களையும் இணைக்கக்கூடாது? "666"வுடன் "6" சேர்க்கும் இவர்கள் ஏன் ஒரு "6" எடுப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லையே!
2. பைபிளில் அந்திகிருஸ்துவின் எண் "666" என்று எழுதப்பட்டிருக்கும் புத்தகமான "வெளிப்படுத்தின வீஷேசம்" புத்தக்கத்தை முந்தைய கால கிருஸ்தவர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணத்திற்கு மர்சியோன், ரோமை சேர்ந்த சியோஸ், அலெக்ஸ்ஸான்டிரியாவைச் சேர்ந்த டியோனிஸிஸ், சிரில் ஆஃப் ஜெருசலேம், போன்றவர்களாவர்.
3. இன்றுவரை கிழக்கு பகுதியில் உள்ள கிருத்தவ தேவாலயங்கள் இந்த "ரிவிலேஷன்" என்னும் புத்தகத்தை எற்றுக்கொள்ளவில்லை.
4. பெந்தகோஸ்தே கிருத்தவர்களின் மூத்த தலைவர் மார்ட்டின் லூதர் உட்பட பலரும் இந்த புத்தகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
5. பழைய கால பைபிள்களில் "666" என்பதற்கு பதிலாக "616" என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆக இவர்கள் குர்ஆனையும், ரஸூலையும் அந்திகிருஸ்துவோடு இணைப்பது அபத்தமாகும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
குர்ஆனின் மொத்த வசனங்கள் "6236" என்பது தான் சரியானதாகும். இது சிலரின் கருத்துக்களோடு சற்று மாறுபடும். சிலர் ஒவ்வொரு சூராக்களிலும் உள்ள "பிஸ்மில்லாஹ்....." யும் ஒரு வசனாமாக் எண்ணுவார்கள். எப்படி இருந்த போதிலும் குர் ஆனின் வசனங்கள் "6666" என்பது ஒரு மிகப்பெரிய பொய்யாகும். யார் எண்ணிவிடப்போகிறார்கள் என்ற தைரியத்தில் இப்பேற்பட்ட தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பிவிடுகிறார்கள்.
இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால் அது உண்மைதானா என்று சரி பார்த்த பின்னர் பிறருக்கு தெரிவியுங்கள் என்று குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது. ஆகவே இத்தகைய தவறான பிரச்சாரத்தில் இருந்து ஏனைய முஸ்லிம்களையும் பாதுகாப்போம்!
தங்களின் பார்வைக்காக குர் ஆனின் சூராக்களும், அதில் உள்ள வசனங்களின் அட்டவனையை தயார் செய்து கீழே தந்துள்ளேன்.
மொத்தம் - 6236 வசனங்கள்.
குர்ஆனில் மொத்த வசனங்கள் "6666" என்பது பொய் என்றும் "6236" தான் உண்மை என்பதை அனைவருக்கும் பரப்புவோம் இன்ஷா அல்லாஹ்!
வீண் குழப்பத்திலிருந்தும், நசாராக்களின் சூழ்ச்சியிலிருந்தும் அல்லாஹ் இந்த உம்மத்தைப் பாதுகாப்பானாக! ஆமீன்!
கட்டுரை: முத்து

எண் | சூராவின் பெயர்கள் | வசனங்கள் |
1 | அல் ஃபாத்திஹா | 7 |
2 | சூரத்துல் பகரா | 286 |
3 | சூரத்துல் ஆல இம்ரான் | 200 |
4 | சூரத்துன் நிஸா | 176 |
5 | சூரத்துல் மாயிதா | 120 |
6 | சூரத்துல் அன்ஆம் | 165 |
7 | சூரத்துல் அஃராஃப் | 206 |
8 | சூரத்துல் அன்ஃபால் | 75 |
9 | சூரத்துத் தஃவ்பா | 129 |
10 | சூரத்துல் யூனுஸ் | 109 |
11 | சூரத்துல் ஹூது | 123 |
12 | சூரத்துல் யூசுஃப் | 111 |
13 | சூரத்துல் ராஃது | 43 |
14 | சூரத்துல் இபுராஹிம் | 52 |
15 | சூரத்துல் ஹிஜ்ர் | 99 |
16 | சூரத்துல் நஹ்ல் | 128 |
17 | பனி இஸ்ராயீல் | 111 |
18 | சூரத்துல் கஹ்ஃப் | 110 |
19 | சூரத்துல் மரியம் | 98 |
20 | சூரத்துத் தாஹா | 135 |
21 | சூரத்துல் அன்பியா | 112 |
22 | சூரத்துல் ஹஜ் | 78 |
23 | சூரத்துல் முஃமினூன் | 118 |
24 | சூரத்துந் நூர் | 64 |
25 | சூரத்துல் ஃபுர்கான் | 77 |
26 | சூரத்துல் ஷுஹரா | 227 |
27 | சூரத்துந் நம்லி | 93 |
28 | சூரத்துல் கஸஸ் | 88 |
29 | சூரத்துல் அன்கபூத் | 69 |
30 | சூரத்துல் ரூம் | 60 |
31 | சூரத்துல் லுக்மான் | 34 |
32 | சூரத்துல் ஸஜ்தா | 30 |
33 | சூரத்துல் அஹ்ஜாப் | 73 |
34 | சூரத்துல் ஸபா | 54 |
35 | சூரத்துல் ஃபாத்தீர் | 45 |
36 | சூரத்துல் யாஸீன் | 83 |
37 | சூரத்துல் ஸாஃப்ஃபாத் | 182 |
38 | சூரத்துல் ஸாத் | 88 |
39 | சூரத்துஜ் ஜுமர் | 75 |
40 | சூரத்துல் முஃமீன் | 85 |
41 | சூரத்துல் ஹாமீம் ஸஜ்தா | 54 |
42 | சூரத்துல் ஷூரா | 53 |
43 | சூரத்துல் ஜுக்ரூஃப் | 89 |
44 | சூரத்துல் துகான் | 59 |
45 | சூரத்துல் ஜாஸியா | 37 |
46 | சூரத்துல் அஹ்காஃப் | 35 |
47 | சூரத்துல் முஹம்மது | 38 |
48 | சூரத்துல் ஃபதஹ் | 29 |
49 | சூரத்துல் ஹுஜூராத் | 18 |
50 | சூரத்துல் ஃகாஃப் | 45 |
51 | சூரத்துத் தாரியாத் | 60 |
52 | சூரத்துத் தூர் | 49 |
53 | சூரத்துந் நஜ்ம் | 62 |
54 | சூரத்துல் கமர் | 55 |
55 | சூரத்துர் ரஹ்மான் | 78 |
56 | சூரத்துல் வாகியா | 96 |
57 | சூரத்துல் ஹதீத் | 29 |
58 | சூரத்துல் முஜாதலா | 22 |
59 | சூரத்துல் ஹஷீர் | 24 |
60 | சூரத்துல் மும்தஹினா | 13 |
61 | சூரத்துல் ஸஃப்ஃபு | 14 |
62 | சூரத்துல் ஜுமுஆ | 11 |
63 | சூரத்துல் முனாஃபிக்கூன் | 11 |
64 | சூரத்துல் தகாபூன் | 18 |
65 | சூரத்துல் தலாக் | 12 |
66 | சூரத்துத் தஹ்ரீம் | 12 |
67 | சூரத்துல் முல்க் | 30 |
68 | சூரத்துல் கலம் | 52 |
69 | சூரத்துல் ஹாஃக்ஃகா | 52 |
70 | சூரத்துல் மஆரிஜ் | 44 |
71 | சூரத்து நூஹ் | 28 |
72 | சூரத்துல் ஜின்னு | 28 |
73 | சூரத்துல் முஸ்ஸம்மில் | 20 |
74 | சூரத்துல் முத்தஸ்ஸிர் | 56 |
75 | சூரத்துல் கியாமா | 40 |
76 | சூரத்துத் தஹ்ர் | 31 |
77 | சூரத்துல் முர்ஸலாத் | 50 |
78 | சூரத்துந் நபா | 40 |
79 | சூரத்துல் நாஜியாத் | 46 |
80 | சூரத்து அபஸ | 42 |
81 | சூரத்துத் தக்வீர் | 29 |
82 | சூரத்துல் இன்ஃபிதார் | 19 |
83 | சூரத்துல் முதஃப்ஃபிஃபீன் | 36 |
84 | சூரத்துல் இன்ஷிகாக் | 25 |
85 | சூரத்துல் புரூஜ் | 22 |
86 | சூரத்துல் தாரிக் | 17 |
87 | சூரத்துல் ஆலா | 19 |
88 | சூரத்துல் காஷியா | 26 |
89 | சூரத்துல் ஃபஜ்ரி | 30 |
90 | சூரத்துல் பலத் | 20 |
91 | சூரத்துஷ் ஷம்ஸ் | 15 |
92 | சூரத்துல் லைல் | 21 |
93 | சூரத்துல் ளுஹா | 11 |
94 | சூரத்து அலம் நஸ்ரஹ் | 8 |
95 | சூரத்துத் தீன் | 8 |
96 | சூரத்துல் அலக் | 19 |
97 | சூரத்துல் கத்ரி | 5 |
98 | சூரத்துல் பய்யினா | 8 |
99 | சூரத்துஜ் ஜில்ஜால் | 8 |
100 | சூரத்துல் ஆதியாத்தி | 11 |
101 | சூரத்து அல்காரியா | 11 |
102 | சூரத்துத் தகாஸுர் | 8 |
103 | சூரத்துல் அஸ்ரி | 3 |
104 | சூரத்துல் ஹுமஜா | 9 |
105 | சூரத்துல் ஃபீல் | 5 |
106 | சூரத்து குறைஷின் | 4 |
107 | சூரத்துல் மாவூன் | 7 |
108 | சூரத்துல் கவ்ஸர் | 3 |
109 | சூரத்துல் காஃபிரூன் | 6 |
110 | சூரத்துந் நஸ்ர் | 3 |
111 | சூரத்துல் லஹப் | 5 |
112 | சூரத்துல் இக்லாஸ் | 4 |
113 | சூரத்துல் ஃபலக் | 5 |
114 | சூரத்துந் நாஸ் | 6 |
மொத்தம் - 6236 வசனங்கள்.
குர்ஆனில் மொத்த வசனங்கள் "6666" என்பது பொய் என்றும் "6236" தான் உண்மை என்பதை அனைவருக்கும் பரப்புவோம் இன்ஷா அல்லாஹ்!
வீண் குழப்பத்திலிருந்தும், நசாராக்களின் சூழ்ச்சியிலிருந்தும் அல்லாஹ் இந்த உம்மத்தைப் பாதுகாப்பானாக! ஆமீன்!
கட்டுரை: முத்து
2 விமர்சனங்கள்:
குர்ஆனில் அத்தியாயம் எத்தனை
உள்ளது
குர்ஆனில் அத்தியாயம் எத்தனை உள்ளது
114 உள்ளது
கருத்துரையிடுக