கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஜாபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு இக்பால் (4), இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் என்ற ஒன்றரை மாத கைக்குழந்தையும் உள்ளனர்.
மணிப்பால் சரலெபெட்டு சிவபாடி ஸ்ரீ உமாமகேஸ்வரி கோவில் அருகே குடும்பத்துடன் வசித்துவரும் புஷ்ராவை, பஜ்ரங் தள் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த குண்டர்கள் மனோகர் என்பவனது தலைமையில் புஷ்ராவின் கணவன் ஜாபர் முன்னிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக அருகிலுள்ள கோவிலுக்கு இழ்த்துச்சென்று இந்து மதத்திற்கு மாறும்படி மிரட்டியுள்ளனர்.
புஷ்ரா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தான் இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேற விரும்பவில்லை என்று உறுதியாகச் சொன்னபோது குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். கோவில் பூசாரியிடம் புஷ்ரா இந்துவாக விரும்பவில்லை என்றும் இஸ்லாம் மதத்திலேயே தொடரவிரும்புவதாகச் சொல்லி மன்றாடிய பிறகும் பூசாரி வலுக்கட்டாயமாக மதமாற்றும் (பிரவர்த்தன்) நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
மங்களூர் காவல்துறை ஆணையர் அலோக் மோகனிடம் நேற்று அளித்த புகாரில் தன்மீதான கட்டாய மதமாற்ற முயற்சிகளையும், தனது உயிருக்கு ஆபத்திருப்பதையும் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில் தனது கணவன் ஜாபர் முன்பாகவே பஜ்ரங்தள் தலைவன் மனோகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்,குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதையும் கண்ணீருடன் தெரிவித்தார்.
கோவிலில் நடந்த கட்டாய மதமாற்ற நிகழ்ச்சியில் தனது எதிர்ப்பை தெரிவித்தபோது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்பதால் அமைதியாக இருந்துள்ளார்.இதைக்காரணமாக வைத்து புஷ்ரா இந்துவாக மதம் மாறிவிட்டதாக வதந்தி பரவியதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவரது கணவன் ஜாபர், திருமணத்திற்கு முன்பு பிரசாந்த் செட்டி என்ற பெயருடன் இந்துவாக இருந்துள்ளார். புஷ்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டபிறகு அடுத்தடுத்து குழந்தைகளைக் கொடுத்துவிட்டு, தற்போது பஜ்ரங்தள் குண்டர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளான். அவரது வீட்டிற்கு பஜ்ரங்தள் குண்டர்களையும் அழைத்து வந்ததோடு, அவன் முன்னிலையிலேயே புஷ்ராவை அவர்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதையும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளான்.
தற்போது அவனிடமிருந்து தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு விவாகரத்து கோரியுள்ளார். இனிமேல் அந்த கொடிய மிருகத்துடன் வாழ்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தார்.மேலும்,இதை போலீசில் தெரிவித்தால் குடும்பத்துடன் கொன்றுவிடப்போவதாக பஜ்ரங்தள் குண்டர்கள் மிரட்டி வருகின்றனர்.
புஷ்ராவின் புகாரை ஏற்றுக்கொண்ட மங்களூர் காவல்துறை ஆணையர்,இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
நன்றி - இந்நேரம்.காம்
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக