புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

தென்சென்னை எஸ்.டி.பி.ஐ சார்பாக நடத்தப்பட்ட தலமைத்துவம் பயிற்சி முகாம்

21 ஜூலை, 2011

SDPI யின் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளுக்கான  தலைமைத்துவ பயிற்சி முகாம் தென்சென்னை மாவட்டம், மயிலாப்பூர் தொகுதியிலுள்ள பட்டினம்பாக்கம் மீனவர் சமூக நலக்கூடத்தில் 17 ஜூலை 2011, காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இப்பயிற்ச்சி முகாமிற்கு தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள், தென்சென்னை மாவட்டத்திற்குட்பட்ட  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, எழும்பூர்,  வில்லிவாக்கம்,  அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர்,தி நகர் , சைதாப்பேட்டை, விருகம்பாக்கம்,  மற்றும் வேளச்சேரி ஆகிய தொகுதிகளிலிருந்து ஏராளமான தொகுதி, வட்டம் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.



பயிற்சி முகாமில் கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கு பயிற்றுவிக்க, SDPI யின் தமிழ் மாநில பொது செயலாளர் மரியாதைக்குரிய திரு.  ரஃபீக் அஹ்மது அவர்களும், SDPI யின் மாநில செயலாளர்  மரியாதைக்குரிய திரு. G. அப்துல் சத்தார் அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் மரியாதைக்குரிய திரு. முபாரக் அவர்களும் மற்றும்  SDPI யின் தஞ்சை மாவட்ட தலைவர் மரியாதைக்குரிய திரு.  பாருக் அவர்களும் வருகை தந்தனர்.

பயிற்சி முகாம் காலை 10 மணியளவில் துவங்கியது. வரவேற்புரையை தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு. முஹம்மது 
ஷாலிஹ் அவர்கள் நிகழ்த்தினார். SDPI யின் மாநில செயலாளர்  மரியாதைக்குரிய திரு. G. அப்துல் சத்தார் முன்னுரை நிகழ்த்தினார். SDPI யின் தமிழ் மாநில பொது செயலாளர் மரியாதைக்குரிய திரு.  ரஃபீக் அஹ்மது அவர்கள் SDPI யின் நிர்வாகிகளுக்கு பிற கொள்கையிழந்த கட்சிகளின் கொள்கைகளைப் பற்றியும், கொள்கையொன்று இருப்பதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு, அக்கொள்கையை தனது சுயந‌லத்திற்காக பயன்படுத்திய அக்கட்சியின் தலைவர்களை (?) பற்றியும், அவர்கள் மக்களை நட்டாற்றில் விட்ட நிலை குறித்தும் உரையாற்றினார். பின்னர்  மாநில செயற்குழு உறுப்பினர் மரியாதைக்குரிய திரு. முபாரக் அவர்கள் இந்திய அரசியலில் மாற்றம் காண விழையும் SDPI யின் கொள்கை குறித்த விளக்கத்தையும், SDPI யின் செயல்வீரர்களிடத்து இருக்க வேண்டிய தலைமைத்துவ பண்புகள் குறித்தும் விளக்கமளித்தார்.

பின்னர் SDPI யின் தொண்டர்களுக்கு கூட்ட மேலாண்மை குறித்த தகவல்களை SDPI யின் தஞ்சை மாவட்ட தலைவர் விளக்கினார். தொடர்ந்து மதிய உணவிற்காண இடைவெளிக்குப்பின் கட்சியின் வளர்ச்சி குறித்த குழு கலந்தாய்வு நடைபெற்றது. பின்னர் SDPI யின் தமிழ் மாநில பொது செயலாளர் திரு. ரஃபீக் அஹ்மது அவர்கள் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், உலகளாவிய எகாதியபத்தியத்தின் நிழல் தற்போது நமது நாட்டின் மீது படிந்து, நம் தேசத்தை மீண்டும் ஓர் அடிமைத்தனத்தை நோக்கி இட்டுச்செல்வதை கோடிட்டுக்காட்டினார். மேலும் 60 வருட‌ங்களுக்கும் மேலாக நமது நாட்டையும், நாட்டு மக்களையும் ஆட்சி செய்வதாக கூறிக்கொண்டு நாட்டு மக்களுக்கு இழைத்த நம்பிக்கை துரோகத்தையும் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக SDPI யின் தென்சென்னை மாவட்ட தொண்டர்களுக்கு கொள்கை அர்ப்பணிப்பு குறித்து SDPI யின் தஞ்சை மாவட்ட தலைவர் உரையாற்றினார். முகாமின் இறுதியாக SDPI யின் தென்சென்னை மாவட்ட தலைவர் 
 திரு. முஹம்மது ஹுசைன் நன்றியுரையாற்றியதைத் தொடர்ந்து முகாம் இனிதே நிறைவுபெற்றது. இந்த பயிற்சி முகாமை மயிலாப்பூர் தொகுதி தலைவர் மீரான் தலைமையில்   தொகுதி நிர்வாகிகள் சிறப்புற ஏற்பாடு செய்திருந்தனர். 

S . முஹம்மது ஷாலிஹ் 
தென் சென்னை மாவட்ட செயலாளர்










0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010