புது டெல்லி: பல சமுதாய இயக்கங்கள் கூட்டாகச்சேர்ந்து சென்ற 19ஆம் தேதி டெல்லியில் பீஹார் பவன் முன்பு ஃபோர்ஸ்பஜங்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விடுக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளிக்கிழமை அன்று ஜும்மா தொழுகையை நிறைவேற்றிவிட்டு நியாயமான முறையில் போராட்டம் நடத்திய அப்பாவி முஸ்லிம்களை வீடு வரை விரட்டிச் சென்ற பீஹார் காவல் துறையினர் சுட்டுக்கொன்றனர். இதில் ஒரு பெண்ணும் சிறு குழந்தையும் அடங்குவர். இந்த கொடிய செயலை செய்த காவல் துறை அதிகாரிகள் மீது இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் இந்த கிராமவாசிகள் 3000 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.கவுடனான கூட்டணி வைத்துக்கொண்டுதான் நிதிஷ் குமார் அரசாங்கம் பீஹாரில் ஆட்சியை பிடித்தது. இதனால் வரை முஸ்லிம் விரோத போக்கையே அவரது அரசாங்கம் கடைபிடித்து வருகிறது. அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பல இயக்கத்தலைவர்களும், சமூக ஆர்வளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக