புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

எடியூரப்பா உடனே பதவி விலக வேண்டும் பா.ஜ.க முடிவு!

28 ஜூலை, 2011

புதுடெல்லி: ஊழல் ஊறிப்போய் கர்நாடகா மாநிலத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பாவை வீட்டிற்கு அனுப்ப பா.ஜ.க முடிவெடுத்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் லோக்யுக்தா அமல்படுத்தப்பட்ட பின்பு பா.ஜ.க வின் மூத்த தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான எடியூரப்பா கோடிக்கணக்கில் ஊழல் செய்த விவகாரம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பும் எத்தனையோ பிரச்சனைகளில் தப்பித்து வந்த எடியூரப்பா ஆட்சியில் நீடித்து வந்த போதிலும் இந்த முறை அவருடைய ஆட்சிக்கு சரியான ஆப்பு ஏற்படப்போவதாகவே எல்லா பத்திரிக்கைகளிலும் செய்தி வந்து கொண்டிருந்தது. அது போலவே எடியூரப்பா செய்த ஊழல் நீரூபனமாகியுள்ளதால் பா.ஜ.கவின் மேலிடம் உடனே முடிவெடுத்து எடியூரப்பா தானாகவே பதவி விலக வேண்டும் என்று எடியூரப்பாவிற்கு ஆணை பிறப்பித்துள்ளது.



பா.ஜ.கவின் தேசிய தலைவர் நிதின் கட்காரி வீட்டில் வைத்து நடைபெற்ற அக்கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் கூட்டத்தில் வைத்து இவ்வாறாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்கள் மத்தியில் இதனை தெரிவித்தார்.


கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர்களுக்கிடையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று ஒரு மனதாக முடிவெடுத்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் எடியூரப்பா உடனே பதவி விலக வேண்டும் என்று ஆணை பிரப்பித்துள்ளது.


பா.ஜ.கவின் மூத்த தலைவர்களான அருண் ஜேட்லி மற்றும் ராஜ்நாத் சிங் அகியோ வெள்ளிக்கிழமை பெங்களூருக்குச் சென்று புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பார்கள்.


தென் இந்தியாவில் பா.ஜ.கவின் முதல் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா தற்போது பதவி விலக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். எடியூரப்பா, கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் ஈஸ்வரப்பா மற்றும் சில அமைச்சர்கள் டெல்லி சென்று நிதின் கட்காரியை சந்தித்து பேசியுள்ளனர்.  இருப்பினும் எடியூரப்பாவின் பதவி பறிபோவது உறுதியாகியுள்ளது.

தென் இந்தியாவில் கால் பதிக்க முடியாதிருந்த ஃபாஸிச கட்சியான பா.ஜ.க முதன் முதலாக கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. ஆட்சியை பிடித்ததும் அதனுடைய தலைவர்கள் அனைவரும் இனி பா.ஜ.க தென் இந்தியாவிலும் மாபெரும் சக்தியாக திகழும் என்று கூறினார்கள். ஆனால் பா.ஜ.க தலைவர்களின் இந்த ஊழல் விவகாரம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி பா.ஜ.க தனக்கு கிடைத்த இந்த தென் இந்திய மாநிலத்தை இனி தக்கவைப்பது கடினமே!

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010