புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

மஹாத்மா காந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் யை நியாயப்படுத்தும் கே.டி.தாமஸ் வன்மையாக கண்டிக்கிறோம்!

6 ஆகஸ்ட், 2011

கோழிக்கோடு: உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி தாமஸ் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பை புகழ்ந்து பேசினார். இத்தகைய கூற்றை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.
கே.டி தாமஸ்

ஆர்.எஸ்.எஸ்.ற்கும் மகாத்மான் காந்தி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறும் கே.டி தாமஸ் அவர்களுக்கு வரலாற்றை பற்றிய சரியான் ஞானம் இல்லை என்பதை தான் உணர்த்துகிறது என்று கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்திஜியின் கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பது ஆதரபூர்வமான நிரூபிக்கப்பட்ட நிலையில் ஒரு உச்ச நீதி மன்ற நீதிபதி இத்தைகைய பயங்கரவாத இயக்கங்களுக்கு வக்காலத்து வாங்கி பரிந்துரைப்பது மிகவும் கண்டனத்துக்குறியது. புனே, ஜெய்பூர் மற்றம் நாட்டின் பல பகுதிகளில் மகாத்மா காந்தி கொல்லப்பட்ட அடுத்த தினம் ஜனவரி 31, 1948 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடியதை பல பத்திரிக்கைகள் வெளியிட்டது என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

காந்திஜி கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சார்ந்தவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் ஆர்.எஸ். எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டபோது அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் ஆர்.எஸ்.எஸ்ற்கு எழுதிய கடிதம் ஒன்றில் இதனை குறிப்பிட்டிருந்தார்.

காந்திஜியை கொலை செய்த நாதுராம் கோட்சே மற்றும் அவனது சகோதரம் கோபால் கோட்சே இருவரும் கூறும்போது நாங்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ்ன் ஊழியர்கள் எனக்கூறுவதில் பெறுமை கொள்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்டின் கேரள பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீத்

ஆர்.எஸ்.எஸ்ற்கு எதிராக இவ்வளவு வரலாற்று ஆதாரங்கள் இருந்த போதிலும் ஆர்.எஸ்.எஸ்ற்கும் காந்திஜி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறும் கே.டி. தாமஸ் அவர்களின் கூற்று மர்மமாகவும் அதே சமயத்தில் முட்டாள்தனமாகவும் இருக்கிறது என அப்துல் ஹமீத் தெரிவித்தார்.

இந்தியாவில் நடைபெற்ற சமீபத்திய குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபாடுகள் பற்றி கே.டி. தாமஸ் அவர்களுக்கு நியாபகப்படுத்துகிறேன். மேலும், 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபரி மஸ்ஜித் தகர்ப்பிலும், 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத் கல்வரத்திலும் ஆர்.எஸ்.எஸ்ன் ஈடுபாட்டுடன் செயல்பட்டது என்பதனையும் யாராலும் மறுக்க முடியாது என தெரிவித்தார்.

நடுநிலையான மக்களும் நியாயவான்களும் இத்தகைய பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக அணி திரள வேண்டும் அதேச் சமயம் இப்பேற்பட்ட பயங்கரவாத அமைப்பிற்கு வெள்ளை சுன்னாம்பு அடிக்க முயலும் கே.டி. தாமஸ் போன்ற குறுகிய மனம் படைத்தவர்களின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும். ஆர்.எஸ்.எஸ் நாட்டின் அமைதியை சீர்குழைத்து வருவதும் தேசத்திற்கு எதிரான கொள்கையான "ஹிந்து ராஷ்டிரா" என்ற கிரிமினல் அஜன்டாவை கொண்டு செயல்படு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சமூக சேவை செய்யக்கூடிய இயக்கமாக பார்க்கும் கே.டி தாமஸை வன்மையாக கண்டிக்கிறோம். கே.டி தாமஸ் அவர்கள் வரலாற்று உண்மைகளை சிதைக்கும் வகையில் ஆர்.எஸ். எஸ் அமைப்பை நியாயப்படுத்தி பேசுவதை விட்டு விட்டு வரலாற்றை சரியாக படிக்க வேண்டும்.

சமீபத்தில் கொச்சியில் வைத்து நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி ஒன்றில் கே.டி தாமஸ் அவர்கள் பங்கெடுத்து ஆர்.எஸ்.எஸ். பற்றி புகழ்ந்து பேசியதோடு மட்டுமல்லாமல் அந்த இயக்கத்திற்கும் காந்திஜி கொலை வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010