புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

நிறம் மாறும் "தீவிரவாதம்"!

28 பிப்ரவரி, 2011

டெல்லி நீதிமன்றத்தில் சுவாமி அசிமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் ஒட்டு மொத்த இந்திய தேசத்து மக்களிடம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நடைப்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் சம்ஜோத்தா குண்டு வெடிப்பு உட்டபட அனைத்திலும் காவி தீவிரவாதத்தின் செயல்கள் அனைத்தும் பட்டவர்த்தனமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
சிவப்பு நிறம் கொண்டுள்ள இந்தியாவின் பல பத்திரிக்கைகளும், மீடியாக்களும் ஒட்டு மொத்தமாக இவ்வாறான செய்திகளை பூசு மொழுகி காவிகளை பாதுகாக்கும் செயல்களில்தான் ஈடுபடுகின்றன. இந்துத்துவாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பத்திரிக்கையாளரான ஜுக் சுரையா தன்னுடைய பத்திரிக்கையான "சுரையா"வில் தீவிரவாதத்திற்கு மதச்சாயம் பூசப்படுவதை கடுமையாக எதிர்த்துள்ளார். தீவிரவாதத்திற்கு மதமோ, சாதியோ, நிறமோ கிடையாதாம். தீவிரவாத்திற்கு காவி நிறமோ அல்லது பச்சை நிறமோ அல்ல மாறாக அது எந்த மதத்தையும் சாராது என்று கூறியுள்ளார்.
தங்களுடைய எல்ல வண்டவாலங்களும் வெளிவந்துகொண்டிருப்பதை தாங்கிக்கொள்ள முடியாத இவர்கள் தப்பிப்பதற்கு வழி தெரியாமல் தற்போது ஓலமிடத் தொடங்கியுள்ளார்கள். பா.ஜ.க வின் செய்தி தொடர்பாளர் ரவி ஷங்கர் பிரசாத் மற்றும் நிர்மலா சீதாராமண் ஆகியோர் மராத்திய தொலைக்காட்சியில் பேட்டி அளிக்கும் போது தீவிரவாதத்திற்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மேலும் தீவிரவாதத்தை மதத்தோடு தொடர்புபடுத்துவது மிகவும் தவறான செயலாகும் என்று கூறியுள்ளனர்.
கடந்த 2008 ஆண்டு வரை இவர்களது கூற்றை எடுத்துப்பார்த்தால், இவர்கள் கூறும் தீவிரவாதத்திற்கு நிறம், சாதி, மதம் எல்லாமே இருந்தது. தீவிரவாதி என்றாலே அது குறிப்பிட்ட இந்த மதத்தைச்சார்ந்தவர்கள் தான் என்று பிரச்சாரம் செய்த இவர்கள் தற்போது அந்தர் பல்டி அடித்து கொண்டிருக்கிறார்கள். "எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல! ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்" என்ற இவர்களது முந்தைய வாதம் மழுங்கிப்போன கத்தியாக மாறிவிட்டதை நம்மால காணமுடிகிறது.இதற்கு முன் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளாக பரப்பிய பல அறிவுஜீவிகளை தற்போது காணமுடியவில்லை. அந்நேரத்தில் வாய்கிழிய தீவிரவாதத்தை பற்றி வாந்தி எடுத்த இவர்கள், தற்போது அதே வாந்தியை வெளியில் கொட்டாமல் முழுங்கி வருவதை பார்க்கமுடிகிறது.வி.ஹெச்.பி யின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியா மேடை பேச்சுகளில் தன்னுடைய விஷமத்தனமான கருத்துக்களை பரப்பும் போது எங்கையும் "முஸ்லிம் தீவிரவாதம்" என்ற சொல்லை உபயோகப்படுத்தாமல் இருந்ததில்லை. அப்போது எந்த மீடியாவோ அல்லது ஆர்.எஸ்.எஸ்ன் மூத்த தலைவர்களில் ஒருவரோ அல்லது தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று பிதற்றிக்கொள்ளும் ஒருவர் கூட பிரவின் தொகாடியாவின் இந்த விஷக்கருத்துக்களை எதிர்த்து அறிக்கை விட்டதில்லை.
எப்போது ஹேமந்த கர்கரே என்ற தீவிரவாத எதிர்பு படையைச்சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி காவித்தீவிரவாதிகளான, சாமியார்களின் தீவிரவாதத்தையும் அதற்கு உடந்தையாக இருந்த இராணுவ அதிகாரிகளின் தீவிரவாத செயல்களையும்  வெளிக்கொண்டுவந்தாரோ அன்றிலிருந்து தான் மீடியாக்களும், ஆர்.எஸ்.எஸ்ம் தீவிரவாத்திற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கொக்கறித்து வருகிறது.

இந்துத்துவாவின் கொள்கை இந்திய நாட்டின் இறையான்மைக்கு எதிரானது, நாட்டின் ஒட்டு மொத்த குடிமக்களுக்கு எதிரானது, இந்தியா நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது. இவர்களது அனைத்து தீவிரவாத செயல்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருவது ஆர்.எஸ்.எஸ் என்கிற தீவிரவாத அமைப்புதான் என்று சுவாமி அசிமானந்தாவைன் வாக்குமூலத்தின் மூலம் வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த நாட்டில் நடைப்பெற்ற பெரும்பாலான குண்டுவெடிப்பு சம்மவத்திற்கு பின்புலமாக இருந்து செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தை தடை செய்யாமல் இந்திய அரசாங்கம் ஏன் மெளனம் சாதித்து வருகிறது? காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் கூறும்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்வதால் ஒரு பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை, அப்படி தடை செய்யப்பட்டால் அவர்களது கொள்கைகளை முடக்க முடியுமே ஒளிய அவர்களது இயக்க செயல்பாட்டை தடுத்து நிறுத்த முடியாது ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் தனக்கென்று பல துணை அமைப்புகளை ஏற்படுத்தி செயல் பட்டு வருகிறது. அப்படியென்றால் திக் விஜய் சிங்கிடம் ஒரு கேளிவியை கேட்க விரும்புகின்றோம், சில வருடங்களுக்கு முன்னால் சிமி என்ற இஸ்லாமிய இயக்கம் கொள்கைக்காகவே பல முறை தடைசெய்யப்பட்டது. அவர்கள் தீவிரவத செயல்களின் ஈடுபட்டார்கள் என்று இது வரை எந்த ஒரு ஆதாரத்தையும் அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை, அப்படி என்றால் சிமி இயக்கத்தை மட்டும் தடைசெய்தது ஏன்?

"ஹிந்து ராஷ்டிரா" என்ற ஆர்.எஸ்.எஸ்ன் கிரிமினல் அஜன்டா சிமியின் கொள்கைகளை விட இந்திய நாட்டிற்க்கு குறைந்த பாதிப்பைத்தான் ஏற்படுத்தும் என்று கூற வருகிறீர்களா? அப்படியென்றால் வெளிப்படையாக நாம் ஒரு விவாதத்திற்கு ஏற்படுத்தவேண்டும் எப்படி ஒரு மதச்சார்பற்ற இந்திய நாட்டை உருவாக்கவேண்டும் என்ற தலைப்பில்!

இதனால் வரை வெளிவந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாம் ஒன்றை தெளிவாக கூறலாம். அது,


"எல்லா இந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல! ஆனால் எல்லா இந்துத்துவவாதிகளும் தீவிரவாதிகளே!"

ஏனென்றால் இந்துக்கள் ஒருபோதும் இந்துத்துவனகா ஆக மாட்டார்கள்! இந்துத்துவர்கள் ஒருபோதும் இந்தியனாகவே மாட்டார்கள்!

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010