ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினத்தன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவால நடத்தப்பட இருந்த சுதந்திர தின கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் காவல்துறையினரால் தடை செய்யப்பட்டன. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். அது போல காவல்துறையினர் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
சுதந்திர தின அணிவகுப்பு கொண்டாட்டங்கள் தமிழகத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவால் சிறப்பான முறையில் ஒழுக்கத்துடன், கண்ணியத்துடனும் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் காவல்துறையினர் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக கீழ்த்தரமான வேலைகளை செய்வதற்கும் தயங்கிடவில்லை. சுதந்திர தின அணிவகுப்பிற்கான மைதானத்தை தேர்வு செய்து அதன் உரிமையாளரை சந்தித்து முறையாக எழுத்துப் பூர்வமாக அனுமதி பெற்ற பின்னர் அந்த உரிமையாளரிடம் சென்று அவர்களை மிரட்டுவது, அவர்களின் வீடுகளில் சோதனை என்கின்ற பெயரில் மனதளவில் துன்ப்பப்படுத்துவது, சுதந்திர தின அணிவகுப்பிற்கான சுவரொட்டிகளை கிழிப்பது போன்ற வேலைகளில் காவல்துறையினர் ஈடுபடுவது வழக்கம்.
இந்த வருடம் மேலப்பாளையத்தில் நடக்கவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கும் வழக்கம் போல் தங்களுடைய கீழ்தரமான வேலையை தொடர்ந்தது நெல்லை காவல்துறை. இந்த வருடம் ஒரு படி மேலே சென்று பேரிகாட் அமைத்து மேலப்பாளையத்திற்குள் வந்து செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனையிடுவது, தேவையற்ற இடங்களில் அதிக அளவில் காவல்துறையினரை பாதுகாப்பு என்கின்ற பெயரில் நிறுத்துவது போன்ற தேவையற்ற விதங்களில், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ளனர்.
ஏற்கனவே கோவை குண்டுவெடிப்பின் போது எண்ணற்ற தொல்லைகளுக்கு ஆளான மேலப்பாளைய மக்கள் மீண்டும் காவல்துறையினரால் மனக்கஷ்டத்திற்கு ஆளாயினர்.
முஸ்லிம்கள் சுதந்திர தின அணிவகுப்பு நடத்துவதும், சுதந்திர தினத்தை கொண்டாடுவதும் தவறு என்றால்? அந்த தவறை யார் தடுத்தாலும் மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்போம். இந்த தேச விடுதலைக்காக தமது சதவிகிதத்திற்கும் அதிகமாக போரிட்டு உயரி தியாகம் செய்தவர்கள் முஸ்லிம்கள்! முஸ்லிம்கள் தேச விடுதலைக்காக போரிட்ட மற்ற சமூக மக்களை விட எந்த விதத்திலும் சலைத்தவர்கள் அல்ல. இந்த நாட்டை அந்நிய சக்திகளிடம் அடிமைப்படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்! இந்த நாட்டை துண்டாட நினைக்கும் ஃபாஸிச பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிக்காமல் எமது போராட்டம் ஓயாது! இன்ஷா அல்லாஹ்!

பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள்
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக