புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

கேரள சுதந்திர தின அணிவகுப்பிற்குத் தடை!

9 ஆகஸ்ட், 2011

freedom parade
கோழிக்கோடு: கேரளாவில் பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.


 சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதிப்பது நாட்டுமக்களின் உரிமைகளை தடுப்பதாக இருக்கிறது என பாப்புலர் ஃப்ரண்டின் கேரள மாநில தலைவர் அஷ்ரஃப் மெளலவி கருத்து தெரிவித்துள்ளார். கேரள காவல்துறையினர் விதித்த தடையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்தார்.

கேரள மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக புனலூர், சவக்காடு, மஞ்சேரி மற்றும் தமரசேரி ஆகிய நான்கு இடங்களில் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின அணிவகுப்பை நடத்த இருப்பதாக இருந்தது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்று கூறி காவல்துறையினர் 4 இடங்களிலும் அணிவகுப்பை நடத்துவதற்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. கேரளத்தில் சுதந்திர தின அணிவகுப்பு கடந்த 2004 முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் காவல் துறையினர் கூறுவது போல் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. கேரளாவில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்யின் காரணமாகவே சுதந்திர தின கொண்டாட்டம் மக்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டது. மேலும் சுதந்திர தின அணிவகுப்பை காண மக்கள கூட்டம் அதிகம் வருவதன் காரணமாகவே காவல்துறையினர் இந்நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளனர்.


இதிலிருந்து காவல்துறையினரின் அர்த்தமற்ற செயலையே விளக்குகிறது. எத்தனையோ அமைப்புகள் சுதந்திர தின கொண்டாடத்தை நடத்தி வரும் வேளையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் நிகழ்ச்சிக்கு மட்டும் அனுமதி மறுப்பது என்பது நீதிக்கு புறம்பான செயலாகும். இது கேரள அரசாங்கத்தின் சிறுபான்மை விரோத போக்கையே காட்டுகிறது. மக்களிடம் சுதந்திர வேட்கை உருவாவதும், நாட்டுப்பற்றுமிக்கவர்களாக மாறுவது ஆளம் அரசாங்கத்திற்கு பெருத்த கவலையாக இருக்கிறது. அவர்கள் மக்கள் எழுச்சி பெற்வதை விரும்பவில்லை என்றே கூறலாம்.

மாநிலக்குழு இத்தடையை எதிர்த்து சட்டபூர்வமாகவும், ஜனநாயக ரீதியிலும் போராடும் என அஷ்ரஃப் மெளலவி தெரிவித்தார். மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீது, எம். அப்துல் சமது, கே.கே. ஹுஸைன் மற்றும் டி. அப்துர் ரஹ்மான் பாகவி ஆகியோர் உடனிருந்தனர்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010