சென்னை: பாப்புலர் ஃப்ரண்டின் முக்கிய துறையான மக்கள் தொடர்பு சார்பாக அத்துறையின் நிர்வாகிகளுக்கு இரண்டு நள் பயிற்ச்சி வகுப்புகள் சென்னை மண்ணடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
தேசிய அளவில் புதிய சமூக நல இயக்கமாக உருபெற்றுவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை பற்றி சமீபகாலமாக ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனை நன்கு உணர்ந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் தனக்கு விரிக்கப்படும் அபாய வலையை உணர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய உண்மையான செய்திகளை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச்செல்லும் முகமாக மக்கள் தொடர்பு துறையை துவக்கி அதன் பணிகளை நாடுமுழுவதும் தெரிவித்துவருகிறது.
தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றுகிறார்கள் |
ரீச் அகாடமியில் இருந்து கலந்து கொண்ட சகோதரர் அலாவுதீன் மக்கள் மத்தியில் எப்படியெல்லாம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற தலைப்பில் பல விதமான நுனுக்கங்கள் கொண்ட தகவல்களை தெரிவித்தார். கர்நாடகாவைச் சேர்ந்த சகோதரர் அனீஸ் அஹமது அவர்கள் பேசும்போது பொதுமக்களிடம் பேண வேண்டிய நல்லுறவு எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றி விளக்கினார். கடந்த காலங்கள் போல் அல்லாமல் இன்று பாபுலர் ஃப்ரண்ட் மக்களுக்கு நன்கு அறிமுகமான இயக்கமாக திகழ்கிறது. எனவே இங்கே வந்திருக்கக்கூடிய அனைவரும் மக்கள் மத்தியில் இயக்கத்தை அறிமுகப்படுத்தும் வேலையை துறிதப்படுத்தி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கேரளாவைச்சேர்ந்த சகோதரர் நாசர் அவர்கள் இதனால் வரை மக்கள் தொடர்பு பற்றி இயக்கத்தின் பணிகளை எடுத்துரைத்தார்.
பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக