நீதி, நேர்மை, மதிப்பு, சுயமரியாதை, கவுரவம், கல்வித்தகுதி, இவையெல்லாம் ஆதிக்க வர்க்கத்தினரிடம் எடுபடுமா?
அநீதிக்கு எதிராக நீதியாய்!
அதர்மத்திற்கு எதிராக தர்மமாய்!
கொடுமைகளுக்கு எதிராக, வன்முறைக்கு எதிராக, அநியாயத்திற்கு எதிராக போர்கொடி தூக்கினால்.... உங்களுக்கு கிடைப்பதோ சிறைவாசகம் தான்....
ஆம்! சுதந்திர இந்தியாவின் தற்போதைய நிலை இதுதான். குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்கு முழுக்காரணம் அம்மாநில முதலைமைச்சர் நரேந்திர மோடிதான் என்றும், அப்போது முஸ்லிம்களை கொலை செய்யும் இந்துக்களை தடுக்க வேண்டாம், அவர்கள் தங்களுடைய கோபத்தை தீர்த்துக்கொள்ளட்டும் என்று காவல்துறையினருக்கு கட்டளை இட்டதாக சஞ்சீவ் பட் சமீபத்தில் கூறி இருந்தார். மேலும் குஜராத்தில் நடந்த இனக்கலவரத்திற்கு நரேந்திர மோடிய காரணம் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் உறுதிச்சான்று (AFFIDAVIT) வழங்கினார்.
அநீதிக்கு எதிராக நீதியாய்!
அதர்மத்திற்கு எதிராக தர்மமாய்!
கொடுமைகளுக்கு எதிராக, வன்முறைக்கு எதிராக, அநியாயத்திற்கு எதிராக போர்கொடி தூக்கினால்.... உங்களுக்கு கிடைப்பதோ சிறைவாசகம் தான்....
ஆம்! சுதந்திர இந்தியாவின் தற்போதைய நிலை இதுதான். குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்கு முழுக்காரணம் அம்மாநில முதலைமைச்சர் நரேந்திர மோடிதான் என்றும், அப்போது முஸ்லிம்களை கொலை செய்யும் இந்துக்களை தடுக்க வேண்டாம், அவர்கள் தங்களுடைய கோபத்தை தீர்த்துக்கொள்ளட்டும் என்று காவல்துறையினருக்கு கட்டளை இட்டதாக சஞ்சீவ் பட் சமீபத்தில் கூறி இருந்தார். மேலும் குஜராத்தில் நடந்த இனக்கலவரத்திற்கு நரேந்திர மோடிய காரணம் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் உறுதிச்சான்று (AFFIDAVIT) வழங்கினார்.
சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டபோது. |
தற்போது கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனக்கு கீழ் பணிபுரியும் ஒருவரிடம் பொய்யான வாக்குமூலத்தை பதிவு செய்து அதில் கையெழுத்திடுமாறு மிரட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளாராம். மேகானிநகர் காவல் நிலையத்தில் கே.டி.பன்ட் என்ற கான்ஸ்டபில் பணி புரிந்து வருகிறார். போலியான குற்றப்பத்திரிக்கையை தயார் செய்து அதில் தன்னை கையெழுத்திடுமாறு சஞ்சீவ் பட் மிரட்டியதாக கடந்த ஜூன் 24ம் தேதி வழக்கு தொடுத்திருந்தார் கே.டி.பன்ட்.
பிப்ரவரி 27, 2002 ஆம் ஆண்டு நரேந்திர மோடி ரகசியமாக கூட்டிய காவல்துறையினர் கூட்டினார் என்றும், அதில் தான் காவல்துறையினர் கலவரத்தின் போது எவ்வாறு நடந்த கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார் என்ற விபரம் அடங்கிய குற்றப்பத்திரிக்கையில் தன்னை மிரட்டி கையெழுத்திடவைத்தார் என கே.டி.பன்ட் வழக்கு தொடர்ந்தார். கட்லோடிய காவல்துறையினரும் சஞ்சீவ் பட்டிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தயார் செய்தனர். அரசாங்க அதிகாரி ஒருவரை மிரட்டியதாகவும், போலியான ஆதாரங்கள் தயார் செய்ததாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
சஞ்சீவ் பட்டை கைது செய்வதற்கான வாரண்ட் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அடுத்த 48 மணி நேரத்திற்குள் வந்தது. அப்போது குஜராத் உயர் நீதிமன்றத்தில் நரேந்திர மோடிக்கு எதிராகவும், அமித்ஷா என்ற மந்திரிக்கு எதிராகவும் குற்றப்பத்திரிக்கை தாகல் செய்திருந்தார். இவர்கள் இருவருக்கு ஹரன் பாண்டியா என்ற பா.ஜ.க தலைவர் கொலைவழக்கில் தொடர்பு உண்டு என்ற அடிப்படையில் சமர்பித்திருந்தார்.
சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நரேந்திர மோடி காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தை பிப்ரவரி 27, 2002ல் நடதியபோது கான்ஸ்டபில் கே.டி. பன்ட்டும் தன்னுடன் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் கே.டி.பன்ட் தான் கலவரம் தொடங்கிய காலகட்டத்தில் தான் விடுமுறையில் இருந்ததாக கூறுகிறார்.
அத்தோடு சஞ்சீவ் பட் கடந்த 10 மாதங்களாக தன்னுடைய பணியில் ஈடுபடாமல், முறையான அறிவிப்பு செய்யாமல் விடுப்பு எடுத்துள்ளார் என உள்துறை அமைச்சகமும் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
குஜராத் கலவரத்திற்கு முக்கிய காரணம் நரேந்திர மோடிதான் என்பதை கலவரம் நடக்கும்போதும் சரி, நடந்த பின்பும் சரி பல்வேறு மனித உரிமை ஆர்வளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் நரேந்திர மோடி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில வருடங்களுக்கு முன்னால் தெஹல்கா பத்திரிக்கையின் நிருபர் ஆஷிஷ் கேத்தான் என்பவர் தான் நேரடியாக கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஊர்களுக்குச் சென்று அங்கே கலவரத்தை நிகழ்த்தியவர்களின் வாக்குமூலங்களை வீடியோவில் பதிவு செய்து உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். வாக்குமூலம் அளித்த ஒவ்வொருவரும் நரேந்திர மோடி தங்களுக்கு சாதகமாக செயல்பட்டார் என்று கூறினர். ஆனாலும் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது சஞ்சீவ் பட் என்ற ஐ.பி.எஸ் அதிகாரியும் நரேந்திர மோடிக்கு எதிராக குற்றங்களை சுமத்தி வருகிறார். நரேந்திர மோடியை தண்டிப்பதை விட்டுவிட்டு வழக்கு தொடர்ந்தவர்கள் மீதே பொய் வழக்கு போட்டப்பட்டு கைது செய்யப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
செய்தி: முத்து
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக