புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

முஸ்லிம் லீக்கின் சோக வரலாறு தொடர்கிறது!

11 அக்டோபர், 2011

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் படுவேகமாக  சென்று கொண்டிருக்கிறது. எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு கூட்டணிக்கட்சிகள் அனைத்து உடைந்து ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக தேர்தல் களத்தை சந்திக்கின்ற வேலையில் இப்படியுமா ஒரு கட்சி இருக்கும்? என்ற கேள்வியை ஒரு இஸ்லாமிய அரசியல் கட்சியை நோக்கி கேட்பதை தவிற வேறில்லை.. எனவே ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.

அதற்கு முன் இன்றைய உள்ளாட்சித் தேர்தலில் யாரெல்லாம் தனித்து களம் காண்கிறார்கள்? யாரெல்லாம் கூட்டணி வைத்துக்கொண்டு களம் காண்கிறார்கள் என்பது பற்றிய சிறு தகவல்களை  தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய பல தமிழர்களுக்கு குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு இது குறைவாகவே தெரிந்திருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த தகவல்களை முதலில் தெரிவிக்கிறேன்.

தனித்து போட்டியிடும் அரசியல் கட்சிகள்:

1. திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க)
2. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
3. காங்கிரஸ்
4. பகுஜன் சமாஜ்வாதி கட்சி
5. பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க)
6. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க)
7. பாரதிய ஜனதா கட்சி (தனித்து நிற்பது ஒன்றும் பா.ஜ.கவிற்கு புதிதல்ல, வேறு வழியில்லை எவறும் இவர்களை தங்களோடு சேர்த்துக்கொள்வதற்கு தயாரில்லை.)

கூட்டணியாக செயல்படும் அரசியல் கட்சிகள்

1. தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க) + கம்யூனிஸ்ட்
2. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) + விடுதலை சிறுத்தைகள்


இது தவிர்த்து இஸ்லாமிய அரசியல் கட்சிகளான மனித நேய மக்கள் கட்சி (ம.ம.க), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக்,  போன்ற கட்சிகள் ஒவ்வொரு இடங்களிலும் அந்த இடத்திற்கு ஏற்றாற்போல் ஒரு கட்சிகளை ஆதரித்தும் களம் காண்கின்றனர்.

உதாரணத்திற்கு: சென்னை மண்ணடியில் உள்ள 60 வார்டில் மனித நேய மக்கள் கட்சியினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரும் ம.தி.மு.கவிற்கு ஆதரிக்கின்றனர். அதே சமயம் சென்னை மேயர் தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சியினர் அ.இ.அ.தி.மு.கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆக யாரை ஆதரிக்க வேண்டும்? யாரை எதிர்க்க வேண்டும் என்ற தெளிவான சிந்தனை இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பலனற்ற முடிவுகளை எடுத்துள்ள சில இஸ்லாமிய அரசியல் கட்சிகள் வழக்கம் போல் சமூகத்தினுடைய முன்னேற்றப்பாதைக்கான எந்த ஒரு முடிவையும் இந்த உள்ளாட்சி தேர்தலிலும் எடுக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

சரி! தலைப்பிற்குள் வருவோம். பல ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம்களுக்கென்று அரசியல் சக்தி ஒன்று தேவை என்கின்ற அடிப்படையில் காயிதே மில்லத் அவர்களுடைய காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் லீக், அன்றைய காலகட்டத்தில் மிகப்பெறும் அரசியல் சக்தியாய் விளங்கியது. தொகுதிக்கு ஓட்டு கேட்க போகமாலேயே வெற்றி பெற்ற சரித்திரமும் உண்டு. கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் போன கதை போல இன்று முஸ்லிம் லீக் கட்சியினர் செய்வதறியாது பிரயோஜனம் அற்ற முடிவுகளையே எடுத்து வருகின்றனர்.

ஜனாப் காயிதே மில்லத் அவர்கள் இறக்கும் தருவாயில் கருணாநிதியின் கையை பிடித்து "இனி நீங்கள் தான் இந்த முஸ்லிம் சமூகத்தை வழி நடத்துபவராக இருக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டாராம். இதை கலைஞர் பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். யாருக்கு தெரியும்? காயிதே மில்லத் அவர்கள் உண்மையில் அவ்வாறு கூறினாரா என்று? அன்று முதல் தி.மு.கவின் சிறுபான்மை அமைப்பாக செயல்பட்டு, கலைஞர் போடும் தாளத்திற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டிருந்தது முஸ்லிம் லீக்.

தன்னை நம்பியவர்களின் முதுகில் குத்துவதையே பிழைப்பாக கொண்டிருந்த கலைஞரோ முஸ்லிம் லீக்கை சமையலுக்கு பயன்படுத்திகின்றெ கருவேப்பிலை போலவே உபயோகப்படுத்தி வந்தார். முஸ்லிம்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது கோவை சிறைவாசிகள் விஷயமாக இருந்தாலும் சரி, கட்டாய திருமணப்பதிவுச்சட்டமாக இருந்தாலும் சரி, கலைஞரை எதிர்த்து வாய்திறக்க மாட்டோம் என்ற ரீதியிலேயே பயணம் செய்து வந்தது முஸ்லிம் லீக். ஒரு முறை நாடாளுமன்றத்தேர்தலில் கலைஞர் பாசிஸ சக்தியான பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தபோது இனியும் நாம் கலைஞரோடு இருந்தால் நம் சமூகமே நம்மை காரித்துப்பும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு தி.மு.கவிடம் இருந்து பிரிந்தது. ஐயோ! நான் தவறிழைத்துவிட்டேன்! இனி ஒரு போதும் இத்தகைய தவறான முடிவை எடுக்க மாட்டேன் என்று கலைஞர் தனது பாணியில் கவிதை பாடியதும் மீண்டும் அவரோடு இணைந்தது முஸ்லிம் லீக்.

கடந்த சட்டமன்றத்தேர்தலில் முஸ்லிம் லீக்கிற்கு இரண்டு இடங்களை ஒதுக்கிக்கொடுத்தது. அதில் ஒன்றான சென்னை துறைமுகம் தொகுதியில் தனது கைப்பாவையான திருப்பூர் அல்தாஃபை வேட்பாளராக நிறுத்தியது. முஸ்லிம் லீக் கட்சியியில் எத்தனையோ மூத்த‌ நிர்வாகிகள் இருந்த போதும் அவர்களில் ஒருவரை நிறுத்தாமல், கட்சியிலிருந்து பிரிந்து போய் மீண்டும் இணைந்த திருப்பூர் அல்தாஃபை எப்படி நிறுத்தலாம்? என முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மத்தியில் பெரும் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. உடனே பெண்கள் அமைப்பிற்கு தலைவியாக இருந்த ஃபாத்திமா முசஃபர் இதனை கண்டித்து தலைமையிடம் அனுமதி பெறாமலேயே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை ஏற்படுத்தி இதற்கு எதிரான தனது கருத்தினை வெளியிட்டார். உடனே முஸ்லிம் லீக்கின் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்தும் நீக்கியது.

செருப்பு தேய்ந்தவுடன் எவ்வாறு தூக்கி எறிந்துவிடுவோமோ அதே பாணியில் முஸ்லிம் லீக்கை இந்த உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தூக்கி வீசியது. என்னதான் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையே! என்பது போல தற்போது முஸ்லிம் லீக் பார்ப்பன வெறியவளாக இருக்கும் ஜெயலலிதாவை ஆதிரிக்க தொடங்கியுள்ளனர். சென்னை மாநகரில் மேயராக போட்டியிடும் ஆ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதில் இன்னொறு ஆச்சரியாமான விஷயம் என்னவென்று தெரியுமா? யாரை கட்சியை விட்டு நீக்கினார்களோ, அவருக்கு இன்று மாநிலத் தலைவர் பதவியும், தேசிய பொதுச்செயலாளர் பதவியையும் கொடுத்து அழகு பார்க்கிறது முஸ்லிம் லீக். கொள்கை கோட்பாடுகள் எல்லாம் முக்கியமில்லை, சமூகத்தினுடைய  அவல நிலையும் நமக்கு முக்கியமில்லை. நம்முடைய ஒரே குறிக்கோள் பெரும் கட்சிகளுக்கு பின்னால் இருந்து கொண்டு காலத்தை கடத்துவது! அப்படித்தானே? பதில் கூறுங்கள் பாத்திமா முசஃபர் அவர்களே!

ஆதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம் லீக் சார்பாக ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டி

ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்தது,  தமக்கு ஆதராவ இருந்து முஸ்லிம் சமூகத்தின் ஓட்டுக்களை வாங்கிக்கொடுத்த மனித நேய மக்கள் கட்சியினரை கழட்டி விட்டது, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தலித்களை நாயை சுடுவது போன்று சுட்டுக்கொன்றுவிட்டு அதற்காக எந்த விதாமான வருத்தத்தைக்கூட தெரிவிக்காமல் இருந்தது, மனித இன‌ துரோகியான‌ நரேந்திர மோடி இருந்த உண்ணாவிர நாடகத்திற்கு தமது அமைச்சர்களை அனுப்பி ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்தது போன்ற சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஜெயலலிதாவை ஆதரித்துள்ளீர்களே! வெட்கமாக இல்லையா? சமூகத்தை பற்றிய அக்கறையோ கவலையோ உங்களுக்கு கிடையாது, மாறாக உங்களுக்கு உங்களுடைய கவுரவம்தான் முக்கியம் என்பதை உணர்த்திவிட்டீர்கள். "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டம்" திமுக உங்களை துரத்திவிட்டக்காரணத்தால் ஆத்திரத்தில் நீங்கள் எடுத்த முடிவு தவறானது என்பதை வெகு சீக்கிரமே உணர்ந்து கொள்வீர்கள்.

கிளியை வளர்த்து குரங்கு கையில் கொடுத்த கதையாய் போன முஸ்லிம் லீக்கின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது. இத்தகைய கறுப்பு வரலாறுகளும் முஸ்லிம் லீக்கிற்கு உண்டு என்பதை யாராலும் மறந்துவிடமுடியாது.

இந்தக்கட்டுரை முஸ்லிம் லீக் கட்சியினரை புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல, மாறாக சமூகத்தின் நலனுக்காக நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்துவதற்குத்தான்.

கட்டுரை: முத்து

2 விமர்சனங்கள்:

பெயரில்லா சொன்னது…

vetkam kettavargal

A.M. Shahjahan சொன்னது…

உண்மை நிலவரம் புரியாமல் எழுதப்பட்ட கட்டுரை இது. பாத்திமா முஷபர் என்பவர் முஸ்லிம் லீக் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர். கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் எல்லாம் இதுபோல்தான் தங்களையே தலைவர்களாக அறிவித்து சமுதாயத்திற்கு துரோகம் செய்வது வாடிக்கையான நிகழ்வுதான். சாதாரண மக்கள்தான் குழப்பிக்கொள்கிறார்கள் என்றால் நீங்களும் இதுபோல் சுடுசொற்களை கொண்டு ஒரு கட்டுரை எழுதுவது அநாகரீகமாக தெரிகிறது. நீங்கள் பாத்திமா முசபிரைதான் கண்டித்து எழுதி இருக்க வேண்டும், முஸ்லிம் லீக்கை அல்ல.

அன்புடன்
ஆடுதுறை ஷாஜஹான்.

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010