புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பிரஷாந்த் பூஷன் தாக்கபட்ட சம்பவம் - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

13 அக்டோபர், 2011

புதுடெல்லி: பிரபல வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன் மதவெறிபிடித்த குண்டர்களால் தாக்கப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார். அவர் தனது செய்திக்குறிப்பில் " இந்த தாக்குதல் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கு சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை மீண்டும் அழுத்தமாக எழுப்பியிருக்கின்றது. சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது அபாயகரமான சமிக்கையாகும்.




கடந்த இரண்டு வருடங்களை நாம் உற்று நோக்கினால் மதவெறிபிடித்த குண்டர்கள், தேசியம், தேசப்பற்று என்ற போர்வையில் சமூக ஆர்வலர்களை குறிவைத்து தாக்கி வருவதை அறியலாம்.

இதுபோன்று திட்டமிடப்பட்டு நடத்தப்படும் செயல்களில் மூலம் சகிப்புத்தன்மையற்ற சிந்தனையை மக்கள் மத்தியில் விதைக்கவும், அநீதிக்கெதிரான குரல்களை நசுக்கவும் ஃபாஸிஸ்டுகள் தொடர்ந்து செயல்படுகின்றனர் என்பதற்கு இந்நிகழ்வு மற்றுமொரு உதாரணமாகும். ஒரு சில அமைப்புகள் தேச விரோத கருத்துக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் இது, என இத்தாக்குதலை நியாயப்படுத்த முயல்வதுதான்  கவலைக்குரிய விஷயமாகும்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சட்டம் ஒழுங்கை பேணுவோர் செயல்பாடாமல் இருப்பதை சுட்டிக்காட்டினார். இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றது.

சில நேரங்களில் அரசின் கொள்கைகளை கேள்விகேட்கும் சமூக ஆர்வலர்கள் தாக்குதலுக்குள்ளாகும் போது அரசும், காவல்துறையும் செயல்படாமல் மெளனம் காப்பதைப் பார்க்கும்போது அதுபோன்ற தாக்குதலுக்கு அவர்களே அனுமதி கொடுத்தது போன்று தோன்றுகிறது.

நேற்று நடந்த தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளையும், அவர்களுக்கு பின்னாலிருந்து இயக்கியவர்களையும், உடனடியாக கைது செய்யவேண்டும் என டெல்லி காவல்துறையை கேட்டுக்கொண்ட பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இது போன்ற தாக்குதல்களிலிருந்து சமூக ஆர்வலர்களை பாதுகாத்திடவும் சகிப்புத்தன்மையற்ற‌ வன்முறை எண்ணத்துடன் கூடிய‌ சமூகத்தை உருவாக்க நினைக்கும் சதி திட்டத்திற்கு எதிராகவும் போராட பொது சமூகம் முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010