புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் சிக்கவைக்கப்படுகிறார்கள்

19 அக்டோபர், 2011

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று தற்போது பிறஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவராக பணியாற்றி வரும் மார்கண்டே கட்சு ஊடகங்கள் மற்றும் காவல்துறையினரின் முஸ்லிம் விரோத போக்கை வன்மையாக கண்டித்துள்ளார். ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தீவிரவாதிகளாக சித்தரிப்பதோடு முஸ்லிம் இளைஞர்கள் அனைவரையும் குண்டு வெடிப்பை நிகழ்த்துபவர்கள் என்பது போல பத்திரிக்கைகளும், காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்திய காவல்துறைனருக்கு உண்மையான தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதற்கான போதிய பயிற்ச்சிகள் அளிக்கப்படாததால் தான் குண்டுவெடிப்புகள் நிகழ்த்திய உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருக்கிறார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இன்றைய பத்திரிக்கைகளையும் ஊடகங்களையும் கடுமையாக சாடிப்பேசிய கட்சு அவர்கள் கூறும்போது "இன்றைய ஊடகங்கள் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே, குற்றத்தை நிகழ்த்தியவர்கள் யார் என்பதை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள் இல்லாமல், இமெயில் மற்றும் குறுஞ்செய்திகளை ஆதாரமாகக்கொண்டு அப்பாவி மக்களை குற்றம் சுமத்தி வருகின்றனர்.






கடந்த 17ஆம் தேதி என்.டி.டி.வியில் கொடுத்த பேட்டியில் கட்சு அவர்கள் பேசும்போது "இன்றைய காலத்தில் நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்புகளின் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் சந்தேகத்தின் அடிப்படையிலேயே பல அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். தீரவிசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடிபதற்கான போதி பயிற்ச்சிகள் இந்திய காவல்துறைனருக்கு போதிய பயிற்ச்சிகள் அழிக்கப்படுவதில்லை என்று கூறினார். ஒவ்வொரு முறை குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படும் போதும் அங்குள்ள முஸ்லிம் இளைஞர்கள் விசாரணை என்கிர பெயரில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்றனர். எனக்கூறினார்.

மார்கண்டேயேன் கட்சு அவர்கள் ஊடகங்களுக்காக கூறும் ஆலோசனையானது, செய்திகள் வெளியிடப்படும்போது ஜனநாயகத்தின் அடிப்படையிலும் அதே சமயத்தில் கருத்து பரிமாற்றத்தின் அடிப்படையிலும் இருக்க வேண்டும் எனக்கூறினார்.அப்படி செயல்படாத ஊடகங்கள் பொய் பிரச்சாரம் செய்யும் போது அவர்கள் மீதான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும். அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படவேண்டும், கடுமையான அபராதம் விதிப்பதன் மூலம், அரசாங்க விளம்பரங்களை அவர்களுக்கு வழங்காமல் இருப்பதின் மூலமும் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதின் மூலமும் பொய் பிரச்சாரங்களை பரப்பும் ஊடகங்களின் இத்தகைய செயல்பாடுகளை தடுக்க முடியும் எனக்கூறினார்.

கடந்த இரண்டு வருடகாலமாக நடைபெற்ற பல குண்டுவெடிப்புகளின் உண்மை குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010