சென்னை: வருகின்ற 17ம் தேதி நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சென்னை முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக செயல்பட்டு வருவதால தமிழகத்தில் வழக்கம் போல் தேர்தல ஜூரம் பற்றத்துவங்கியது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியாக செயல்பட்ட பெரும்பாலான கட்சிகள் தற்போது கூட்டணியை விட்டுப்பிரிந்து தனித்தனியாக களம் காண்கின்றனர். ஒரு வார்டில், திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மமக, எஸ்.டி.பி.ஐ, பா.ஜ.க என அனைத்துக் கட்சிகளும் போட்டியிடும் நிலமை ஏற்பட்டுள்ளது. எத்தனை கட்சிகள் கூட்டணியை விட்டுப்பிரிந்தாலும், எத்தனை கட்சிகள் கூட்டணியில் நிலைத்தாலும், நாம் ஆதரிக்கக்கூடிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் தற்போதையை நிலையை மட்டுமே இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இன்று தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற திராவிட கட்சிகளின் ஆரம்ப காலகட்டங்கள் மிகவும் நெருக்கடியாகவே இருந்தன. அதே போன்று இன்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நெருக்கடியின் பிடியிலேயே வளர்ந்து வருகின்றனர். கட்சி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளே ஆன நிலையில் கடந்த சட்டமன்றத்தேர்தலில் எந்தக்கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் 7 தொகுதிகளில் போட்டியிட்டு கணிசமான வாக்குப்பதிவை பெற்றது.
நடக்கவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் நல்ல ஒரு திருப்புமுனையாக தலித் சமூகத்தை தன்னோடு இணைத்து களம் காணிகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் சில இஸ்லாமிய அமைப்புகளும் எஸ்.டி.பி.ஐற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
இப்படி ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி எஸ்.டி.பி.ஐ முதன் முதலாக தனது வேட்பாளரை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடுகின்றது. இதன் வேட்பாளராக வடசென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ-ன் தலைவர் அமீர் ஹம்சா கைக்கடிகாரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தலித் சமூகத்தாரும், சில இஸ்லாமிய இயக்கங்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே தமிழகத்தில் 11 இடங்களில் போட்டியின்றி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலிலும் நல்ல ஒரு கணிசமான வாக்குப்பதிவினை பெற்று அரசியல் சக்திகளால் தவிர்க்க முடியாத கட்சியாக உருவெடுக்கும் என்று நம்பலாம்.

மாலை முரசு பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி |
1 விமர்சனங்கள்:
very good start.welldone .insha allah.
கருத்துரையிடுக