இப்பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் அவர்கள் பேசும்போது "இமாம்கள் அரசியலை விட்டு விலகி, மஸ்ஜிதின் சுவற்றிற்குள்ளேயே முடங்கி கிடந்த காலகட்டத்தில் முஸ்லிம் சமுதாயம் அழிவான பாதையில் இருந்து வந்தது!" எனக்கூறினார். இமாம்கள் மஸ்ஜிதிற்குள்ளேயே முடங்கி கிடக்காமல் வெளி உலகத்திற்கு வந்து முஸ்லிம் சமூகத்தை வலிமைப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார். சில அற்பத்தேவைகளுக்காக இமாம்கள் செல்வந்தர்கள் பிடியில் சிக்கிவிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். குஜராத்தில் சில இமாம்கள் நரேந்திர மோடி இருந்த உண்ணவிரத திடலுக்குச்சென்று அவருக்கு தலையில் தொப்பியை அணிந்து கொள்ள கொடுத்தனர். ஆனால் அவரோ தனது தலைக்கு அது ஒத்துவராது என்று மறுத்துவிட்டார். இரத்தக்கறை படிந்த தொப்பிதான் அவருக்கு ஒத்துவரும் என்பது அவரை சந்தித்த இமாம்களுக்கு தெரியவில்லை.
உரிமைகளுக்கு எதிராக போராடுவோருக்கு உறுதுணையாக நின்று போராட இமாம்கள் முன்வரவேண்டும். இமாம்கள் புதிய சிந்தனைகளை வெளிகொண்டுவரவேண்டும். அப்படியானால் தான் புதிய சமூகம் வலிமையடையும். இன்றைய இமாம்கள் தான் நபி(ஸல்) அவர்களுடைய வாரிசுகள். ஆகவேதான் அவர்கள் விடுதலைக்கான போராட்டத்தில் பங்கெடுக்கவேண்டும் என்றும் கூறினார்.
மெளலானா உஸ்மான் பேக் ரஷாதி |
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக