புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

திருப்பூர் மக்களுக்காக‌ வெள்ள நிவாரண நிதி திரட்ட பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு!

16 நவம்பர், 2011

ஜமாத் தலைவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் வேண்டுகோள்!

அன்புள்ள ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்க்,

அஸ்ஸலாமு அலைக்கும்!

கடந்த நவம்பெர் 6 ஆம் தேதி நள்ளிரவில் திருப்பூரில் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்தது தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த வெள்ளப்பெருக்கில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான காயிதே மில்லத் நகர், சத்யா நகர், பெரிய தோட்டம், அண்ணா நகர், டி.கே.ஆர் காலணி போன்ற பகுதிகளில் வெள்ளம் புகுந்து வீட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் அடித்துச் சென்றது. வெள்ளம் ஏற்பட்ட சமயத்திலிருந்தே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் பல அமைப்புகளின் தன்னார்வ தொண்டர்கள் மீட்பு பணியில் இறங்கினர்.

அதிகாலையிலிருந்தே பால் விநியோகித்தல் தொடங்கி இதுவரை சுமார் 60,000 உணவு பொட்டலங்கள் வரை ஜமாத்தாரோடு இணைந்து விநியோகித்தனர். தற்போது, முஸ்லிம் பகுதிகளில் 117 வீடுகள் முற்றிலும் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளது. 100 வீட்களில் ஒரு பொருளை கூட வெள்ளம் விட்டு வைக்கவில்லை. 68 வீடுகள் சுவர் இடிந்தது போன்ற பலத்த சேதமடைந்துள்ளது.


1927 குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரது வியாபாரம் மற்றும் வாழ்வாதாரம் முற்றாக நசிந்துள்ளது. இதில் பெரும்பாலான மக்கள் அன்றாடங்காய்ச்சிகள்தான். அரசின் நிவாரணமும் போதுமானதாக இல்லை. இவர்களின் வீடுகளை புணரமைப்பதற்கும், வியாபார நஷ்டங்களை சரி செய்வதற்கும் உடனடியாக பெரும் பொருளாதாரம் தேவைப்படுகிறது.

எனவே தங்கள் பள்ளிவாசலில் வருகின்ற ஜும்மாவில் 18.11.2011 அன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி திரட்டுவதற்கு அறிவிப்பு செய்யும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

திருப்பூர் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள‌ கூட்டமைப்புடன் இணைந்து மக்களுக்கு உதவிகள் செய்யப்படும் என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கின்றோம். அல்லாஹ் நாம் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு வெற்றியை தருவானாக! ஆமீன்.

வஸ்ஸலாம்

இவண்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010