சென்னை: சமீபத்தில் எஸ்.
டி.
பி.
ஐயின் துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் அவர்களை காவல்துறையினர் பொய்வழக்குப்போட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தற்போது முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சென்ற மாதம் 23
ஆம் தேதி அன்று சென்னை ஐஸ்ஹவுஸில் நடைபெற்ற கோஷ்டி மோதலின் போது ஆளும் கட்சியினர் சிலர் படுகாயமுற்றதாக கூறப்படுகிறது.
இவ்வழக்கை எஸ்.
டி.
பி.
ஐயின் துறைமுக தொகுதி தலைவராக இருந்த அமீர் சுல்தான் மீது சுமத்தி நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களை ஆபாசமாக திட்டி அமீர் சுல்தானை குண்டர் சட்டத்தின் கீழ்
கைது செய்தது காவல்துறை.
சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேலையில் துறைமுகம் தொகுதிக்கு உடனடியாக தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதன் நிர்வாகிகள் மத்தியில் வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது.
இதில் முஜிபுர் ர்ஹ்மான் அவர்கள் புதிய தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் நமது தளத்திற்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி.
|
எஸ்.டி.பி.ஐயின் தற்காலிக துறைமுக தொகுதி தலைவர் முஜிபுர் ரஹ்மான் |
கேள்வி: துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் கைது நடவடிக்கை பற்றி உங்களது கருத்து என்ன?
பதில்: இந்த தேசத்தில் இன்றல்ல நேற்றல்ல என்றுமே சமூக சிந்தனையுடன் சமூகத்தின் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக
போராடிக்கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்த அரசாங்கங்களும் காவல்துறையினரும் கொடுக்கும் பரிசு சிறைவாசகம் தான்.
அமீர் சுல்தான் அவர்கள் துடிப்பு மிக்க இளைஞராக இருந்து கொண்டு சமூக சேவைகளை எந்த ஒரு எதிர்பார்பும் இன்றி பல ஆண்டுகளாக செய்து வருபவர்.
தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளே ஆன நிலையில் எங்களது கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு தொகுதியில் நோய் நொடியை ஏற்படுத்தும் அளவிற்கு அசுத்தமாய் காட்சியளித்த பல பகுதிகளை தாமே இறங்கி சுத்தம் செய்திருக்கிறார்.
இதனால் தொகுதி மக்களிடையே நற்பெயரை பெற்றார்.
இவரது சேவையை முன்வைத்து எஸ்.
டி.
பி.
ஐயின் தலைமை வற்புறுத்தி கேட்டதற்கிணங்க சென்ற உள்ளாட்சித் தேர்தலில் 60
வது வார்டில் போட்டியிட்டார்.
பெரும் பெரும் கட்சிகளிளை கதி கலங்கச் செய்யும் வகையில் 1250
வாக்குகளை பெற்றார்.
இவர் பெற்ற வாக்குகளினாலேயே அதிமுக மற்றும் திமுக போன்ற பெரும்பெரும் கட்சிகள் தோல்வியை தழுவியது.
இதனால் அரசியல் விரோதிகள் குரோத எண்ணம் கொண்டு அவர் மீது பொய் வழக்கு சுமத்தி கைது செய்துள்ளது.
இதனை சட்டப்பூர்வமாக சந்திக்க தயாராக உள்ளோம்.
அதற்கான வேலைகளை தலைமை செய்து கொண்டிருக்கிறது.
நிச்சயம் அமீர் சுல்தான் அவர்கள் விரைவிலேயே விடுதலை அடைவார் என்று உறுதியாக கூறுகிறோம்.
கேள்வி:: சிறையில் இருக்கும் அமீர் சுல்தான் அவர்களை சந்தித்தீர்களா? அவரது மன நிலை எவ்வாறு இருக்கிறது?
பதில்: உண்மைக்காக போராடக்கூடியவர்களுக்கும்,
நீத்க்காக போராடக்கூடியவர்களுக்கும் சிறைச்சாலைகள் ஒரு போதும் தடைகற்களாய் அமைந்து விடமுடியாது.
சிறைச்சாலைகள் அவரகளது வேகத்தை குறைக்கலாமே தவிற நிறுத்திவிடமுடியாது.
சிறைக்குச் சென்ற அமீர் சுல்தான் அவர்கள் அங்கு கழிவறையில் முறையான வசதிகள் இல்லை என்று கூறி காவல்துறையினரிடம் புகார் கூறி அதை சரி செய்வது, அங்குள்ள கைதிகளின் தேவைகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது,
கைதிகளுக்கு நல்லுபதேசம் செய்வது போன்ற பணிகளை செய்துவருகிறார்.
இவரையா குண்டர் சட்டத்தில் கைது செய்தார்கள்?
என்று சிறைச்சாலையில் இருக்கின்ற காவல்துறையினரே வியப்படைந்துள்ளனர்.
அவரை தேற்றுவதற்காக சென்ற எங்களுக்கு நல்லு உபதேசம் செய்து ஆறுதல் கூறி
வழி அனுப்பி வைக்கிறார்.
கட்சிக்காக பணியாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் தான் அவர்களிடத்தில் காணப்பட்டது.
கேள்வி:: எஸ்.டி.பி.ஐ கட்சியின் துறைமுக தொகுதி தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உங்களது மன நிலை எவ்வாறு இருக்கிறது?
பதில்: எங்களது கட்சியில் யாரும் பதவிகளை கேட்டுப்பெறுவதில்லை.
என் மீது இந்த பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது.
இதை நான் சிறிதும் எதிர்பார்த்திடவில்லை.
காலத்தின் சூழ்நிலை கருதி இந்த முடிவை எங்களது கட்சி தொண்டர்கள் எடுத்துள்ளார்கள்.
சமீபத்தில் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாநில தலைவர் கூறியது போன்று நாங்கள் கட்சியில் இணையும் போதே எங்கள் மீது அநியாயங்கள் கட்டவிழ்த்துவிடப்படும்,
பொய்வழக்குகள் எங்களை நோக்கி பாய்ந்து வரும் என்பதை நன்கு உணர்ந்த பின்னரே இக்கட்சியில் இணைந்துள்ளோம்.
இன்று அமீர் சுல்தான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை நாளை எனக்கும் ஏற்படலாம்.
ஆனால் இவற்றையெல்லாம் கண்டு அஞ்சி ஒடுங்கிவிடுவோம் என்று விரோதிகள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்,
ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
கேள்வி:: அமீர் சுல்தான் கைது பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள்?
பதில்: அமீர் சுல்தானின் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்டவுடன் நிறைய மக்கள் நமது பகுதி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். அமீர் சுல்தான் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதை நன்கு உணர்ந்திருக்கின்றனர். குறிய காலத்திற்குள் அதிக சேவைகளை செய்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். பகுதி மக்கள் கூறும் போது எந்த பிரச்சனையாக இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் ஓடோடி வந்து உதவி செய்யக்கூடியவராக இருந்தார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று எங்களுக்காக இன்னும் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நான்காவது இடத்தையே அவரால் பிடிக்க முடிந்தது. இனி வரும் காலங்களில் நிச்சயம் எங்களுடை வாக்குகள் அனைத்தும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தான் என்பதை உறுதியாக தெரிவித்தனர்.
கேள்வி:: அமீர் சுல்தானின் கைது நடவடிக்கைக்கு பிறகு உங்கள் தொகுதியில் எஸ்.டி.பி.ஐயின் பணிகள் தொய்வடைந்துவிட்டதாக கூறப்படுகிறதே?
பதில்: இது எஸ்.டி.பி.ஐயின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத விஷமிகளால் பரப்பப்படும் அவதூறுகளாகும். எங்களது கட்சித் தொண்டர்கள் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கு தொடர்ந்து ஒய்வுகள் இன்று பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு பண்டிகை காலமாக இருந்ததால் அவர்களுக்கு சிறிது ஓய்வி அளிக்கப்பட்டதே தவிற நீங்கள் கூறுவது போன்ற எங்கள் கட்சியின் எந்த ஒரு பணியும் முடங்கிப்போய்விடவில்லை. எந்த ஒரு தனி மனிதனையும் நம்பி இந்த கட்சி செயல்படவில்லை. எனவே எங்களது கட்சியின் சார்பாக வரக்கூடிய நாட்களில் செய்யப்படும் பணிகள் மூலம் நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.
கேள்வி:: துறைமுக தொகுதியில் உங்களது அடுத்த கட்ட பணிகள் என்னவென்று கூற முடியுமா?
பதில்: வருகின்ற வெள்ளிக்கிழை அன்று ஜும்மா தொழுகை முடிந்த பிறகு மண்ணடியில் இரு இடங்களில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அது மட்டுமல்லாது வருகின்ற ஞாயிற்று கிழமை என்று தொகுதியின் அனைத்து செயல் வீரர்கள் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எதிர்காலங்களில் கட்சியின் செயல்பாடுகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்படும். அதுமட்டுமல்லாது பொதுமக்களிடம் இருந்து ஏராளமான குறைகளை நிறைவேற்றித்தரும்படி கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றை வரமுறைப்படுத்தி முறையாக உரிய அரசு நிர்வாகிகளை சந்தித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வேலைகளில் ஈடுபட உள்ளோம். அவர்களிடத்திலிருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லையெனில் நாங்களே முன்னின்று மக்களுக்குத் தேவையான சேவைகளை செய்து முடிப்பொம். பொதுமக்கள் என்னை தொடர்புகொள்வதற்காக என்னுடைய தொலைபேசி எண்ணையும் தருகிறேன்.
முஜிபுர் ரஹ்மான்
+91 9944101674
இவ்வாறு முஜிபுர் ரஹ்மான் கூறினார். தொகுதி செயலாளர் ஜாஃபர் சாதிக் மற்றும் தொகுதி துணைத்தலவர் தமீம் அன்சாரி ஆகியோர் உடனிருந்தனர்.
1 விமர்சனங்கள்:
இவரின் துறைமுக தொகுதி பணிகள் தொடர எல்ல்ம் வல்ல இறைவனை இறைஞ்வோமக
கருத்துரையிடுக