புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சமூக நீதி மாநாடு - டெல்லி பிரகடனம்

28 நவம்பர், 2011

சமூக நீதியை ஏற்படுத்தவேண்டும் என்பது எங்கள் லட்சியங்களில் ஒன்றாகும்.
மதச்சார்பற்ற, சமூக பொருளாதார மற்றம் அரசியல் ரீதியான நீதி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்படியான தேசமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1950ஆம் ஆண்டுகளில் இத்தகைய அறிவிப்புகளை நம் முன்னோர்கள் வெளியிடும்போது இந்திய தேசத்தின் எதிர்காலத்தை நன்கு திட்டமிடுவதாகவும் அதே சமயம் எல்லா மக்களிடமும் எந்த ஒரு பாரபட்சமுமின்றி நீதியை நிலை நாட்டிட வேண்டும் என்ற எண்ணமும் அன்றைய காலகட்டத்தில் இருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அன்று கூறியது போன்ற சம நீதி, சமத்துவம் போன்றவை இன்றளவும் ஏற்படுத்தப்படவில்லை. 

மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்குத் தேவையான அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தாமலும், ஊழலில் ஊறித்திழைத்திருந்த காரணத்தினாலும் இன்று கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். புதிய தாராளமயமாக்கல் கொள்கைகளாலும், வெளிநாடுகளுடன் செய்து கொண்டு சில ஒப்பந்தங்களினாலும் தேசத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர் இன்றைய ஆட்சியாளர்கள்.

Social Justice conference Grand Public Meet

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இந்த நாட்டை ஆண்டு அத்துனை அரசாங்கங்களும் தலித் சமூகத்தின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் தருவதில் தவறிழைத்துவிட்டனர். பழங்குடியின மக்களின் நிலையோ அதைவிட மோசமாகிப்போனது. பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டிற்காக பழங்குடியினரின் பொன்னான் விவசாய நிலங்களை அவர்களிடமிருந்து அபகரித்து தங்களது சொந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்படுகின்றனர்.

இன்று இந்தியாவில் முஸ்லிம் சமூகம் கைவிடப்பட்ட சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா மற்றும் ராஜேந்திர சர்சார் அவர்களின் அறிக்கைகளின் முடிவுகளை ஆழ்ந்து விவாதம் செய்த பின்னரும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளாமல் மத்திய அரசாங்கம் இதுவரை மெளனம் சாதித்தே வருகிறது. ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களும் அவர்களது குடும்பங்களும் காவல்துறையினரின் போலி வழங்குகளில் தொடர்புபடுத்தப்பட்டு சிறைச்சாலையில் அடைத்ததனால் இன்று அவர்களது வாழ்கை சீரழிந்து கொண்டிருக்கிறது. நமது தேசத்தின் இறையான்மை மற்றும் குடியரசுக்கொள்கைகள் இன்று வகுப்புவாதம் மற்றும் பணக்கார முதலைகளின் பிடியில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறது.
தாராளமயமாக்கல் கொள்கை இன்று சமூக நீதி என்ற கொள்கையை ஓரங்கட்டி வருகிறது. பொதுச்சொத்துக்களை சமபங்கீடு இல்லாமல் வழங்குதல் மக்களின் துன்பத்தை அதிகரிக்கச்செய்துள்ளது.


வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்கள், வேலையில்லா திண்டாடங்களை ஒழிப்பதற்கான திட்டங்கள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதற்கு காரணம் பொருளாதா பற்றாக்குறை என்று அரசாங்கம் சமாளித்து வருகிறது. ஆனால் அரசாங்கத்தின் வரிப்பணங்கள் கோடிக்கணக்கில் அரசியல்வாதிகளால் சுருட்டப்படுகின்றது.

மக்கள் தங்களது உரிமைகளை பெறுவதற்காக இறுதியாக நாடுகின்ற இடமான நீதித்துறையின் நிலையும் இவ்வாறே இருக்கிறது. நீதித்துறையில் கூட லஞ்சம் புகுந்து இந்த நாட்டு மக்களின் நிலையை கவலைக்கிடமாக மாற்றி வருகிறது.


இத்தகைய காலச்சூழ்நிலையில் "தேசத்தை நீதியால் கட்டமைப்போம்" என்ற முழக்கத்தை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசத்தின் தலைநகரமான டெல்லியில் "சமூக நீதி மாநாட்டை" ஏற்பாடு செய்திருந்தது.

மக்கள் தாங்கள் இழந்து உரிமைகளை மீட்டெடுப்பதற்காக ஜனநாயக‌ முறையிலும் அஹிம்சை வழியிலும் போராடிக்கொண்டிருக்கின்ற இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அழைப்பை ஏற்று இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான சமூக ஆர்வலர்கள் பாப்புலர் ஃப்ரண்டோடு கைகோர்த்து சமூக நீதிக்காக போராட தயாராகி வருகின்றனர்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010